mercredi 5 juillet 2017

ஐந்துவிரல்களில் ஐங்குறுநூறு



வெட்கத்தின் வெளிச்ச மிங்கு
வெள்ளி நிலவில் மிளிருதடி
சொல்லின் எண்ண மிங்கு
தேன் கிண்ணத்தை சுவைக்குதடி


அல்லித்தண்டு ஐந்துவிரல்களில்
ஐங்குறுநூறு படிக்குதடி!
மூன்றடி சிற்றெல்லை ஆறடி பேரெல்லைக்குள்
அடங்கி அருங்கவி வடிக்குதடி!


முல்லைத் திணை முகில்வண்ணன்
முன்னேவந்து முழங்கை பற்றுதடி!
எல்லையோடு ஏற்றக் காதல்
முல்லைப் பூவாய் மணக்குமடி


இராதைக்கேற்ற கண்ணன் கானம்
இரவிலும் இனிமை சேர்க்குமடி!
இமை மூடாத இளம் விழிகள்
ஊமை விழியாய் உன்னைக் காணுதடி.


-புதுவை வேலு

12 commentaires:

  1. அருமை நண்பரே இரசித்தேன்

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய ரசனை
      இன்பத்தை இனிதே இசைத்தது
      நட்பு ராகத்தில்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. அற்புதம்
    படித்துக் களித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய ரசனை
      இன்பத்தை இனிதே இசைத்தது
      நட்பு ராகத்தில்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. இனிய ரசனை
      இன்பத்தை இனிதே இசைத்தது
      நட்பு ராகத்தில்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. இனிய ரசனை
      இன்பத்தை இனிதே இசைத்தது
      நட்பு ராகத்தில்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. இனிய ரசனை
      இன்பத்தை இனிதே இசைத்தது
      நட்பு ராகத்தில்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. பக்தி இலக்கியம் படித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் சங்க இலக்கியம் படிக்கவுள்ளேன். உங்களது பதிவு அந்த ஆர்வத்தை மிகுவித்தது.

    RépondreSupprimer
  7. இன்று திருமண வெள்ளிவிழா காணும் புதுவை வேலு ராஜலெட்சுமி தம்பதியரை வலைநட்புகள், பிரான்ஸ் அக்லி தமிழ் சங்கம், குடும்பதினர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்...

    குழலின்னிசை மற்றும் பிரான்ஸ் அக்லி தமிழ் சங்கம் மூலமாக தமிழ் தொண்டாற்றும் இனிய நண்பர் புதுவை வேலு, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் பதினாறு சீர்களையும் சிறப்புடன் பெற்று, இன்னும் ஒரு நூற்றாண்டு செழித்தோங்க இயற்கையை வேண்டுகிறோம்.

    RépondreSupprimer