dimanche 31 décembre 2017

'மணிக்கதவம் தாழ் திறவாய்'

'வருகவே  ஆங்கிலப் புத்தாண்டு 2018'



அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
அன்பின் இனிய....
"ஆங்கிலப் புத்தாண்டு 2018"
நல்வாழ்த்துகள்


நட்புடன்,
புதுவை வேலு





உள்ளத்தை தூர் வாரி
உயர்வினை காணும்
உன்னத தினமே...
உலகப் புத்தாண்டு!


வாழ்த்துப் பூக்களின்
வசந்தத்தை...
வழங்க  வருகவே
இனிய புத்தாண்டு!


பூவும் வலி அறியாது
பூவின் காம்பும் வலியறியாது
நற்சொல்லின் நறுமணமாய்
நாவில் மலர்கவே புத்தாண்டு!


அகிலத்தில் அறவே!
சோம்பலை நீக்கி...
ஆம்பலாய் பூக்கட்டும்
ஆங்கிலப் புத்தாண்டு!


உழைப்பை,  உயர்வை
அழைக்கும் ஆண்டாய்!
அன்பாய் அரும்பும்
அழகு புத்தாண்டு!


 ஒழுக்கமிகு கல்வியோடு
ஓழுகு! நலம் வாழ்வோடு
ஒளிர வருகவே!
ஒப்புயர்வோடு புத்தாண்டு!


அனுபவ வறுமை அறவே நீங்க
அறிவுடையோர் சொல்
செறிவுடன் கேட்க...
வருகவே புத்தாண்டு!


சிறுமை தவிர்த்து
பெருமை குவித்து
உருகும் அன்பாய்
வருகவே புத்தாண்டு!

-புதுவை வேலு









11 commentaires:

  1. புத்தாண்டுக்கவி அருமை
    எமது புத்தாண்டு வாழ்த்துகள்.

    இவ்வருடம் தொடங்கி மனக்கதவை திறந்து பதிவுலகம் வா! நண்பா...

    RépondreSupprimer
  2. வாழ்த்துகளுக்கு நன்றி.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    RépondreSupprimer
  5. புத்தாண்டு வரவேற்புக் கவி ரசிக்கத்தக்கது.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நட்புகளுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  6. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...

    RépondreSupprimer
  7. Ce commentaire a été supprimé par l'auteur.

    RépondreSupprimer
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
    தங்கள் கைவண்ணம் தந்த
    இனிய பாவண்ணம் பரிசாகட்டும்!

    RépondreSupprimer