samedi 14 avril 2018

சிறந்து வருக! சித்திரை மகளே!

 அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ! 


'விளம்பி'யது விரைந்து விழி மலரும்
உளமதில் உள்ள குறை யகலும்
வலம் வந்து வண்டமிழ் மொழிபேசி
குலமகளே! நலம்பயக்க வா!மகளே!










ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா!
வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே!
வறுமையை வாளெடுத்து வீழ்த்தி விடு
நன்னீராம் காவேரித்தாயை வாழ்த்திபாடு!




சிறப்பு சிந்தை சிறகு விரித்து
சிறந்து வருக! சித்திரை மகளே! 








விரும்பிய தெல்லாம் அரும்பும் ஆண்டு
'விளம்பி'யது கைக் கூடும்  நீ! வேண்டு!
இனியவராய் மாந்தர் மங்காத மகிழ்வோடு
இன்புறவே இனிக்கட்டும் இவ்வாண்டு!

-புதுவை இரா.வேலு







7 commentaires:

  1. அருமை இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

    RépondreSupprimer
  2. இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்...

    RépondreSupprimer
  3. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    RépondreSupprimer
  5. ​ரசித்தேன். இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  6. இனிய வாழ்த்துகள். இனிய வாழ்த்துகள். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer