ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினம் என்று அழைக்கிறார்கள். அன்றைய தினத்தில் மக்களிடம் ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மும்பை ஐஐடி மாணவர்கள் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
அதாவது,
மாணவ, மாணவிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் 100 ரூபாய் தாள்கள் மடித்துப் போடப்பட்டன. அதனை பார்க்கும் இளசுகள் அந்த ரூபாயை எடுத்துப் பிரித்துப் பார்த்தால், அங்கு அவர்களுக்கே அவர்களுக்காக ஒரு நல்ல தகவல் காத்திருந்தது.
அதாவது,
"இதே முயற்சிதான் பொது இடங்களில் இருக்கும் குப்பையை எடுக்கவும்
தேவைப்படுகிறது"
என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
முட்டாள் தினத்தன்று,
மக்களை முட்டாளாக்குவதாக மட்டும் அல்லாமல்,
அவர்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்கவும் வைத்துள்ளது
மாணவர்கள் குழு.
இவர்களது இனிய செயலை, வாழ்த்துகளை வழங்கி வரவேற்க வாருங்கள்!
"நாலு பேராவது பாராட்டணும்" என்ற ஆசை எல்லாருக்கும்
உண்டு.புகழாசையால் நேர்ந்த
விபரீதத்தை, ராமாயணம் விளக்கும் சம்பவம் இது.
ஒரு சமயம்தசரதர், சம்பராசுரனுடன் போர் புரிந்தார். அவருக்கு தேரோட்டியாக கைகேயி
(தசரதரின்மூன்றாவது மனைவி) சென்றாள்.
போரின் போது தேரின் அச்சாணி முறிந்து விட்டது. ஆனால், அது கண்டு கலங்காத கைகேயி, தன் கையை அச்சாணிக்கு பதிலாக நுழைத்து தேர் கவிழாமல்பாதுகாத்தாள். போர் முடிவில் சம்பராசுரன் தோற்கடிக்கப்பட்டான்.
வெற்றிக்களிப்பில்இருந்த தசரதர், தன்னைப் பாதுகாத்த மனைவிக்கு
இரண்டு வரம் தருவதாக வாக்களித்தார்.
தேவையான
சமயத்தில், வரத்தைப் பெற்றுக் கொள்வதாக அவள் சொல்லி விட்டாள்.இவர்களுக்கு இடையே நடந்த
இந்த சத்தியப்பிரமாணம் வேறு யாருக்கும் தெரியாது. பின்னாளில், கைகேயி கூனியிடம் இதைச்
சொல்லி பெருமைப்பட்டாள்.
அதாவது, தீமைக்கு வித்திட்டாள்.
காலம் உருண்டது. ராமருக்கு பட்டாபிஷேகம்செய்ய
தசரதர் ஏற்பாடு செய்தார்.தகவல்
அறிந்த கூனி,
"கைகேயி!சம்பராசுர யுத்தத்தில்
இரு வரம் பெற்றதாகச் சொன்னாயே! அதை தசரதரிடம் இப்போதுகேள்!'' என்று தூண்டினாள்.
கைகேயியும் அப்படியே செய்ய விபரீதம் விளைந்தது. தசரதரைவசப்படுத்தும் நோக்கில், தலையில் இருந்த பூவை எடுத்தெறிந்தாள். திலகத்தைக்கலைத்தாள். ஆபரணங்களை கழற்றி வீசினாள். அதன் பின், வாழ்வில் அலங்காரமே செய்ய
முடியாத நிலைக்கு ஆளானாள்.
இது கதையல்ல! நமக்கு ஒருபாடம்.
கணவருக்கும், மனைவிக்கும் இடையே
நடக்கும் அந்தரங்க விஷயங்களையாரிடமும் பகிர்ந்து
கொள்ளக்கூடாது என்கிறதுசாஸ்திரம்.
கைகேயி, தன்வீரம் குறித்து தனக்குள் மட்டும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால்
துன்பம்வந்திருக்காது. அது பிறர்
கவனத்துக்கு சென்றதால் தான் பிரச்னை வந்தது.
தற்காலத்தில், தம்பதியர் இடையே நடக்கும்
மகிழ்ச்சியை பிறரிடம்சொல்கிறார்கள்.
இன்டர்நெட்டில், "செல்பி" என்ற பெயரில்வெளியிடுகிறார்கள். நாலுபேருக்குத் தெரிந்தால் பெருமை என்பதில்
ஆரம்பிக்கும்விஷயம், நாளடைவில் மற்றவர்
தலையீட்டால் வாழ்வு சீரழியக் காரணமாகி விடுகிறது.
இதிகாசம், புராணம்
எல்லாம் பொழுது போக்கான விஷயமல்ல. எச்சரிக்கைவிடுத்து, நம்
ஏற்றத்திற்கு வழிவகுக்கவே எழுதப்பட்டன. இனியேனும், கவனமாகஇருப்பீர்களா! கதையினை
கருத்தில் கொள்வோம்! வதைக்கும்
கொடுமையை வேரொடு சாய்ப்போம்!