mercredi 1 juillet 2015

"வீண் பழி" (குட்டிக் கதை)








நாம் அன்றாடம் நிறைய நபர்களை ந்திப்போம். சிலர்! சிலரைப்பற்றி வீண் பழி சுமத்தி கொண்டே இருப்பார்கள். சில நேரம் அதை கேட்போம்! சிலநேரம் கண்டும் காணாதது போல் இருப்போம்.
அப்படி பட்ட சிலரிடம், இந்த குட்டி கதையை ஒரு  முறை சொல்லி பாருங்களேன். அவர்கள் திருந்த வாய்ப்பும் இருக்கிறது.
 
ஒரு ஊரில் வெட்டுபுலி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது.
பின், வீட்டிற்கு வந்த வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா? என்று தேடினான்.
என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான்.

துறவியாரே!
நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனதை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!
என்று கேட்டான்.
துறவி சிறிது யோசித்துவிட்டு,
இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் !அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.
வெட்டுபுலி ,பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.

உடனே துறவி, “வெட்டுபுலி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.
வெட்டுபுலி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட வெட்டுபுலி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.
துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிபஞ்சும் இப்போது அங்கு இல்லை! என்ன செய்வது?” என்று கேட்டான்.
துறவி சிரித்துவிட்டு,
வெட்டுபுலி நீ! விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது.
திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. எனவே! இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்புக் கேள்,” என்று கூறினார்.
வெட்டுபுலிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் இல்லை என்பதை  நன்கு உணர்ந்தான் வெட்டுபுலி.
மேலும்,   பிறர் மீது வீண்பழி சுமத்தி! புரளி பேசுவது அறம் அல்ல என்பதையும் அறிந்தான் அவன்.

பகிர்வு:
புதுவை வேலு

நன்றி: (one/indiatoday)




34 commentaires:

  1. கதையும் கதையில் பொதிந்துள்ள நீதியும் அருமை..

    RépondreSupprimer
    Réponses
    1. நிதியை பாரட்டும் பூமியில்,
      நீதியை பாராட்ட முன்வந்த முனைவர் அய்யா
      பழனி. கந்தசாமி அவர்களே!
      தங்களையும், தங்களது முதல்தரமான கருத்தையும் வரவேற்கிறேன்.
      வருகைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா.
    அறிவுக்கு விருந்தாகும் கதை பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. அறிவுக்கு விருந்தாகும் கதையினை!
      கவிஞர் ரூபன் பாராட்டி கருத்திட்டமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமையான நீதிக் கதை. பெரியவர்கள் இக் கதையை குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்

    RépondreSupprimer
    Réponses
    1. வளரும் தலைமுறையினருக்கு நல்வழி படுத்தும் நல்ல விஷயத்தை கருத்தாய் தந்தமைக்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. திருப்பி தன்னையே ஒரு நாள் தாக்கும்முன் திருந்தினால் சரி தான்...

    RépondreSupprimer
    Réponses
    1. வீண்பழியை விரட்டும் கருத்தினை தந்தமைக்கு
      நன்றி நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அழகான நீதிக்கதை. பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நீதிக் கதை சிறப்பு செய்ய வந்தமைக்கு நன்றி
      Dr B Jambulingam
      முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சின்னதொரு நீதிக்கதையில் பெரியதொரு அறிவுரை. பகிர்வுக்கு நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வளரும் தலைமுறையினர் வீண்பழி விளையாட்டை விட்டொழித்து
      அன்பின் அடிநாதம் தொழ வேண்டும் என்ற கருத்தினை சொல்லும் வகையில் வந்து கருத்திட்ட வை.கோபாலகிருஷ்ணன் அய்யாவுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நீதிக்கதை பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நீதிக் கதையை பாராட்டியமைக்கு நன்றி நண்பர் தளிர் சுரேஷ் அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses
    1. தாயகம் சென்றாலும் தமிழ் மணம் வாக்கு அளித்து வெற்றிபெறச் செய்யும் வாக்காள வள்ளல் பெருந்தகையே வாழ்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நீதிக் கதை நன்று!

    RépondreSupprimer
    Réponses
    1. அறிவில் சாலச் சிறந்த புலவர் அய்யாவின் கருத்திற்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. ஒரு குட்டிக்கதை பெரிய கருத்தைச் சொல்லிப் போகிறது வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  11. பெரிய கருத்தை பெரியவர் G.M B
    வந்து வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. வணக்கம்
    தாங்கள் சொன்ன விதம் அருமை,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்தினை வழங்கியமைக்கும் நன்றி சகோதரி!
      வலைச்சரம் தொடர்பாக ஒரு அழைப்பை தருவதற்கு தங்களது இணைய முகவரி
      ( e-mail ) வேண்டுகிறேன்! ஆவன செய்யவும் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. இன்றைய முகநூல் பதிவர்கள் பலர் அறியவேண்டிய நீதி இது

    RépondreSupprimer
    Réponses
    1. இன்றைய முகநூல் பதிவர்கள் பலர் அறியவேண்டிய நீதி மட்டுமல்ல நண்பரே!
      இணையத்து பதிவர்கள பலருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும் என்றே சொல்லலாம்! வருகைக்கும், வணங்கும் கருத்தினை பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. Réponses
    1. அருமை பாராட்டி சிறப்பு வருகை புரிந்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பர் மணிமாறன் அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. "வீண் பழி" குட்டிக் கதை அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நீதிக்கு மட்டுமே தலை வணங்கி சிறப்பு செய்ய வருவீர்கள் போல் உள்ளது சகோதரி! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. நல்லதோர் நீதிக்கதை.....

    RépondreSupprimer
    Réponses
    1. நீதிக் கதையை பாராட்டி கருத்தும், வாக்கும் அளித்து சிறப்பு சேர்த்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. ந்ல்ல அருமையான நீதிக் கதை...

    RépondreSupprimer
    Réponses
    1. நீதிக் கதை நிலையானது!
      நித்திய ஆயுள் கொண்டது!
      பாராட்டி சிறப்பித்தமைக்கு நன்றி ஆசானே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. செய்த தவற்றை உணரத் தொடங்கியதே பெரிய மாற்றம்தான்.

    RépondreSupprimer
  19. நீதிக் கதை நிலையானது!
    நித்திய ஆயுள் கொண்டது!
    பாராட்டி சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer