dimanche 14 juin 2015

பொய்க்கு பொற்காசு (குட்டிக் கதை)




"பொய் சொல்லுபவருக்கு ஆயிரம் பொற்காசுகள்" !!


ஒரு அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. 
 ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.
 
அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.
அந்த ஏழை சொன்னான், ”அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா
நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன். அரசனுக்கு கோபம் வந்து விட்டது. நீ பொய் சொல்கிறாய்!. நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?’ என்று கத்தினான்.
உடனே ஏழை சொன்னான், ”அரசே, நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று., எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள். என்றான். 

அரசன், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.
உடனே சொன்னான், ”இல்லை, இல்லை, நீ பொய் சொல்லவில்லை.
என்று அவசரமாக மறுத்தான். 

ஏழை சொன்னான், ”நல்லது அரசே, நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள் என்றான்.
அரசன், அரசவையில் அந்த ஏழையின் சொல் திறனை வியந்து, 
பொய் சொன்னாலும்  பொருந்த பொய் சொல்லிய,
ஏழ்மையின் விளிம்பில் நிற்கும் அந்த ஏழைக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக தந்து மகிழ்ந்தான்.

பகிர்வு:
புதுவை வேலு
நன்றி: (one/indiatoday)

35 commentaires:

  1. ஹஹாஹ்ஹ் இந்தக் கதையை வாசித்திருந்தாலும் மீண்டும் தங்கள் பதிவாக வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிற்து. நல்ல சம்யோசித புத்தியைக் காட்டும் கதை....அருமை!

    RépondreSupprimer
    Réponses
    1. "பொய்க்கு பொற்காசு" கதையினை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி அய்யா!
      தங்களது வருகையும், வாக்கும் சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. "பொய்க்கு பொற்காசு" கதையினை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே!
      தங்களது வருகையும், வாக்கும் சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. பொய்யைப் பொய்யாகச் சொன்னால் வெற்றி கிடைக்குமோ? பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. "பொய்க்கு பொற்காசு" கதையினை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி அய்யா!
      தங்களது வருகையும், வாக்கும் சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. வார்த்தையில் கிடுக்கிப்பிடி போட்டுவிட்டார்....

    RépondreSupprimer
    Réponses
    1. இந்த வாரத்தின் வலைச்சரம் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! வாருங்கள் ஆசிரியர் அவர்களே!
      "பொய்க்கு பொற்காசு" கதையினை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே!
      தங்களது வருகையும், வாக்கும் சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. சுவாரஸ்யம் அருமையாக போனது...

      Supprimer
    2. மணம் வீசும் நட்பு மனதிற்கு நன்றி நண்பா!
      தங்களது வருகையும், வாக்கும் சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பது சரிதான். அருமையான கதையை பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "பொய்க்கு பொற்காசு" கதையினை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி அய்யா!
      தங்களது வருகையும், வாக்கும் சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. "பொய்க்கு பொற்காசு" கதையினை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே!
      தங்களது வருகையும், வாக்கும் சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. பொய் சொன்ன வாய்க்கு சோறு கிடைக்காது என்பார்கள்..

    ஆனால் - பொற்காசுகள் கிடைத்திருக்கின்றதே!..

    RépondreSupprimer
    Réponses
    1. "பொய்க்கு பொற்காசு" கதையினை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி அய்யா!
      தங்களது வருகையும், வாக்கும் சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. கேட்டகதைதான் இருந்தாலும் ரசிக்கும்படி சொன்னதற்கு பாராட்டுக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. "பொய்க்கு பொற்காசு" கதையினை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி அய்யா
      தங்களது வருகையும், வாக்கும் சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. சிறந்த கதை! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "பொய்க்கு பொற்காசு" கதையினை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி /நண்பரே/
      தங்களது வருகையும், வாக்கும் சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. என்ன புதுவை வேலு சார் !!

    நான் தானே நேற்று இந்தக் கதையை உங்க கிட்ட சொன்னேன்.

    அத அடுத்த 24 மணி நேரத்துலே எதோ உங்க கத மாதிரி
    போட்டுட்டு இருக்கீகளே !!!

    சுப்பு தாத்தா.

    இது super super சூப்பர் பொய்.
    ஆமாம். உங்கள் பாட்டை நீங்கள் கேட்க வில்லையா/
    www.subbuthathacomments.blogspot.com

    RépondreSupprimer
    Réponses
    1. பாட்டாலே புத்தி சொன்னார்
      இல்லை இல்லை
      இசையாலே பாட்டை வென்றார்
      இசையாலே பாட்டை வென்றார்
      அது யார்?
      திரு சுப்பு தாத்தா என்பதை சொல்லவும் வேண்டுமோ?
      தங்களது கேள்வியின் நாயகனை எனது இன்றைய பதிவினை பாருங்கள் இசையுடன் இசைந்தே அய்யா!
      எனது கேள்விக்கு பதில் சுக ராகத்தில் வலைச்சரத்தில் எதிர்பார்க்கிறேன்!
      நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. வணக்கம்
    ஐயா
    அற்புதமான கதை பகிர்வுக்கு நன்றி... த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி கவிஞரே!
      அருங்கருத்தை அள்ளித் தந்தமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. #நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள்# அரசருக்கு வேறு வேலை இல்லை போலிருக்கே :)

    RépondreSupprimer
    Réponses
    1. கஜானாவை காலியாக்கும் வேலை இருக்கிறதே பகவான் ஜி அவர்களே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. ஆகா! இரசித்தேன்! ருசித்தேன்

    RépondreSupprimer
    Réponses
    1. ரசிப்பும், ருசிப்பும் கவிஞரகளின் அடையாளம் என்னும் போது புலவர்களுக்கு இன்னும் சொல்லவும் வேண்டுமோ?
      தங்களின் மகிழ்வு பெரும்பாக்கியம் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. அருமையான கதை!

    RépondreSupprimer
    Réponses
    1. பெருமைமிகு பொற்காசு!
      இன்று எனக்கு கிடைத்து விட்டது!
      தங்களது கருத்தின் மூலம்.
      நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. மாட்டிக்கிடார் மன்னர்!

    RépondreSupprimer
    Réponses
    1. மன்னரிடம் நிதி இருந்தால் மட்டும் போதாது,
      நல்ல மதியும் வேண்டும் எனபதை கருத்தால் உணர்த்தி விட்டீர்கள் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. இதுதான் போட்டு வாங்குவதா ? அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. கொடுப்பவரிடம் வாங்குகிறேன் நண்பரே!
      கொடுக்கும் குணம் யாரிடம் உள்ளது இதுபோன்றவர்களை தவிர!!!!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer