'கல்விப் பேரரசு'
இன்று நமது பாரத தேசம் பட்டொளி வீசி அழகுற பறக்கிறது என்றால் அதற்கு  காரணம் கல்வி என்னும் காற்றின் அசைவினால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்று  கல்வியின் அரசி கலைவாணி (சரஸ்வதி தேவி) 
தனது வீணை இசையை  மீட்டிய நாள்,  இலவசக் கல்வி திட்டத்தை  நமக்கு அளித்திட்ட கர்மவீரர் காமராஜரை நமது நினைவுக்கு கொண்டு வந்த நாள்.
இவை எல்லவற்றிற்கும் மேலாக...
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மிகச்சிறந்த கல்வியாளரும், முதல் கல்வி அமைச்சருமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான  இன்று  நவ., 11ம் தேதி... 
அவரை கவுரவிக்கும் பொருட்டு 'தேசிய கல்வி தினமாக
நாம் கொண்டாடுவது  ஒன்றுபட்ட இந்தியாவின் புகழை உலகின்
உச்சத்திற்கு கொண்டு செல்லும் நாள் என்பதில் துளியும் ஐயம் இல்லை!
அபுல் கலாம் ஆசாத்தை, 'கல்விப் பேரரசு' என மகாத்மா காந்தி அழைத்திருப்பது அவரின் புகழுக்கு  மேலும் பெருமை சேர்க்கும் எனலாம்.
தனக்கென சிறப்பு வரலாற்றைக் கொண்டவர் மெளலான அபுல்கலாம் ஆசாத். மதரீதியாக பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து நின்று, சவாலான காலகட்டத்தில் இந்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்று, நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
 இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆஸாத், கல்வி முறையில் பல அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். கிராமப்புற ஏழை மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கிட முன்னுரிமை அளித்தவர் முதியோர் கல்விக்கு வித்திட்டவர் மெளலான அபுல்கலாம் ஆசாத்.
பல்கலைக்கழகக் கல்விக்குழு, இடைநிலைக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவை அவரது பதவிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.
கலை, இலக்கியம், பண்பாடு  ஆகியவற்றைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தேசிய ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டதும் அவரது பதவிக் காலத்தில்தான்.
 "தேசிய கல்வி தினம்" (11/11/2008) முதல் நமது நாட்டில் கொண்டாடப் பட்டு வருகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் சிறந்த தத்துவ ஞானியுமாகிய, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதை நம் நாடு நன்கறியும். 
அதுபோல் ஆசிரியர் பணியின் மகத்துவத்தை அந்நாளில் நாம் அறிந்ததைப் போன்று « தேசிய கல்வி தினமான » இன்று இந்நாளின் சிறப்பை உணர்ந்து மேலும் இன்புற்று மகிழ்வோமாக!
கல்வியின் சிறப்பு சாலச்சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள்:
கல்விக்கு அழகு
 கசடுஅற மொழிதல்
கல்வி பெருமையுடையது; கற்றவர்கள் மதிக்கப்படுவார்கள் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை.
கற்கை நன்றே; கற்கை நன்றே; 
பிச்சை புகினும் கற்கை நன்றே 
கல்வி கற்பது ஒன்றே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு நன்மையைத் தரும். கல்வி மட்டும்தான் நன்மையைத் தரும் என்றால் அந்தக் கல்வியை எந்த வகையிலாவது பெற வேண்டும் அல்லவா?
கல்வி கற்பதற்குப் பொருள் தேவைப்படுகிறது. அந்தப் பொருள் இல்லாதவர்கள் அதற்குத் தேவையான பொருளை முயன்று திரட்ட வேண்டும்.   
ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும்         நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்பதை இந்த வரிகள்         உணர்த்துகின்றன.
கல்விச் செருக்கு
கல்வியில் சிறந்து விளங்கி அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்தவர்களில் சிலருக்குக் கல்விச் செருக்கு ஏற்படுவது உண்டு.
 
கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்குஆழ்த்தி - விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்
அடலேறு அனைய செருக்குஆழ்த்தி - விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்
(அனையம் = போன்றவர், அடல் ஏறு = வலிமையான ஆண் சிங்கம், முனிக்கு
அரசு = அகத்தியர், முகந்து = மொண்டு, முழங்கும் = ஒலிக்கும், பனிக்கடல் = குளிர்ந்த நீரைக் கொண்ட கடல்) 
முனிவர்களுக்கு அரசர் என்று போற்றப்படுபவர் அகத்தியர்.
அவர் குள்ளமான உருவம் கொண்டவர். அந்தக் குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் பெரிய கடலையே குடித்துவிட்டார் என்னும் புராணக் கருத்து இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தாரகன் முதலான அசுரர்கள் கடலில் மறைந்து கொண்டு, அவ்வப்போது தேவர்கள் முதலானவர்களுக்குத் துன்பம் செய்து வந்தனர்.
அந்தக் தாரகன் முதலான
அசுரர்களை வெளியேற்றுவதற்காக அகத்தியர் கடலைக் குடித்தார் என்று மச்ச புராணம்
தெரிவிக்கிறது. பெரிய கடலைக் கூட, குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர்
குடித்துவிட்டார். 
எனவே, கடல் அளவு மிகுதியான கல்வி அறிவு உடையவன் என்று ஆணவம் 
கொள்ளக்கூடாது என்று நன்னெறி கூறுகிறது.
தேசிய கல்வி தினமான இன்று கல்வியின் சிறப்பினை உணர்ந்து அகந்தை இன்றி இனிய முறையில் இமயத்தின் உச்சிக்கு கல்வியின் புகழை இலக்கியத்தில் சொல்லியபடி நிறைவேற்றிடுவோம். 
அபுல் கலாம் ஆசாத் கண்ட கனவினை மெய்ப்பட செய்வோமாக!
கனவு மெய்ப் படவே வேண்டும்.
அபுல் கலாம் ஆசாத் கண்ட கனவினை மெய்ப்பட செய்வோமாக!
கனவு மெய்ப் படவே வேண்டும்.


விரிவான தகவல்களுக்கு நன்றி தோழர்
RépondreSupprimerகல்விக்கு அழகு
RépondreSupprimerதருவதும் பெறுவதும்
பெருமை தரும் வருகை
பெருகியதே எனதுள்ளத்தில் உவகை!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஒவ்வொரு நாடாக சென்று பிச்சை எடுக்கும் நாட்டில் ,பிச்சை எடுத்தால் சட்டப்படி குற்றமாமே...??? இன்று..படித்தவன் பாட்டை கெடுத்தான்.எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழமொழி.. உண்மையாகிக் கொண்டு இருக்கிறது..
RépondreSupprimerவலிமையான கருத்துக்கள்.
Supprimerவாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
புதுவை வேலு
கிராம மக்களுக்கு கட்டாய இலவச கல்வி திட்டம், முதியோர் கல்வி திட்டம் போன்ற மிக பெரிய சமுதாய வளர்ச்சி பாதையை காட்டிய திரு மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்கு நாம் நன்றியை செலுத்துவோம் புதுவை வேலு அவர்களே. நல்ல தகவல் வாழ்த்துகள்.
RépondreSupprimersattia vingadassamy
திரு மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை பாராட்டும் அதே வேளையில்
Supprimerதென்னகத்தில் கர்மவீரர் காமராஜரையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது
அல்லவா நண்பரே!
நன்றியுடன்,
புதுவை வேலு
"கல்வி கற்பது ஒன்றே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு நன்மையைத் தரும்." என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
RépondreSupprimerதொடருங்கள்
"கல்வி கற்பது ஒன்றே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு நன்மையைத் தரும்." கல்வியின் சிறப்பினை வடித்த வரிகள்!
Supprimerவருகையால் மனம் பொலிவு பெற்றது!
கருத்துக்கும் நன்றி! அய்யா!
வணக்கத்துடன்,
புதுவை வேலு
மிகவும் விரிவான, விளக்கமான தகவல்கள்!
RépondreSupprimerஅபுல் கலாம் ஆசாத்தை, 'கல்விப் பேரரசு' என மகாத்மா காந்தி அழைத்திருப்பது அவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் எனலாம்.//
இதுவரை யாரும் நினைத்திராத மவுலானாவைச் சிறப்பித்ததற்கு பாராட்டுக்கள், ஐயா! மிக்க நன்றி!
கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பன்றோ?!!! மிக நல்ல பதிவு ஐயா!
RépondreSupprimer