vendredi 6 février 2015

மசாஜ் மகா ராஜா ( இன்று ஒரு தகவல் )


"தாய்லாந்தில் வித்தியாசமான யானை மசாஜ்"யானையிடம் காசு கொடுத்து ஆசிர்வாதம் பெற தலையைக் காட்டவே நம்ம ஊரில் பலரும் பயப்படுவார்கள். ஆனால், தாய்லாந்து மக்களின் தைரியத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும்.
 
அவர்கள் யானையிடம் சாகவாசமாக மசாஜ் செய்து கொள்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

தாய்லாந்தில் வனவிலங்குகள் முகாம் ஒன்று நடைபெற்றது. பொதுவாக வனவிலங்குகளை வைத்து நாம் சர்க்கஸ், வித்தை செய்ய வைப்போம், மிகப்பெரிய யானையை வைத்து ஆசிர்வாதம் செய்ய வைப்போம்.
ஆனால் தாய்லாந்துக்காரர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்ததில் யானையை வைத்து மசாஜ் செய்ய பிரத்யேக பயிற்சி அளித்துள்ளனர்.

சுமார் 4000 முதல் 5000 எடையுள்ள யானையிடம் உடல் வலிக்கு மசாஜ் செய்து கொள்ள இதயம் பலவீனமானவர்களுக்கு அனுமதி கிடையாது.


இந்த மசாஜ் எப்படி செய்யப்படுகிறது என்றால்.?
மசாஜ் செய்து கொள்ள வேண்டியவரை தரையில் படுக்க வைத்து அவர் மீது ஒரு டவல் போடப்படுகிறது. அங்கு யானையை அழைத்து வருகின்றனர். யானையும் அதன் பயிற்சியாளர் சொல்வதற்கு ஏற்ப, தரையில் படுத்திருப்பவருக்கு தனது தும்பிக்கை மற்றும் முன்னங்கால்களால் மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து விடுகிறது.

இந்த மசாஜ் செய்து கொள்ள உடல் வலி மட்டும் இருந்தால் போதாது. நெஞ்சில் தைரியமும் இருக்க வேண்டும். தைரியமாக படுத்த பிறகு, எழுந்து ஓடவோ, அலறவோக் கூடாது. அப்படி செய்தால் உங்களுக்கு மசாஜ் இல்லை, ....... தான்.

(இந்த கோடிட்ட இடத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளலாம்)நண்பர்களே!

இது தியான மசாஜா?  அல்லது மயானத்திற்கு கொண்டு செல்லும் மசாஜா 

என்பதை ஊகிக்கும் பொறுப்பு உங்களுடையது மட்டுமே! 


புதுவை வேலுநன்றி: தினமணி

 

23 commentaires:

 1. Réponses
  1. இளன்கன்று பயம் அறியாது
   தாய்லாந்து மக்கள் பயமறியாத இளங்கன்று இனமோ என்னவோ?
   நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 2. நல்லாத்தான் மிதிக்குது...

  RépondreSupprimer
  Réponses
  1. மிதிக்கும் யானையிடம் சதி இருப்பதாக தெரிய வில்லை நண்பா!
   துதிக் கையால் பெற்று இருகை உள்ளவரிடம் கொடுப்பதை தவிர!
   வருகைக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. எப்படியெல்லாம் மசாஜ் செய்து பணம் வசூலிக்கிறார்கள்! விசித்திர ஆசைகள்!!

  RépondreSupprimer
  Réponses
  1. வன விலங்குகளை வதை செய்வது வன்முறையான செயல்தானே அய்யா!
   நல்ல கருத்து நல்கியமைக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. சூப்பர் மசாஜர்ஸ்!!! யானை இருந்தாலும் ஆயிரம் பொன்னில் இதுவும் சேர்ந்துவிட்டது போலும் காலத்திற்கேற்ப!

  RépondreSupprimer
  Réponses
  1. யானையை வைத்து பொன்னை (பணம்) பெறும் வழிமுறையை கற்றுத் தேர்ந்து விட்டார்கள் ஆசானே!
   நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. மலைப்பாம்பினை மேலே ஊர்ந்து செல்லும்படி வைத்து ஒரு மசாஜ் - காணொளியைக் கண்டிருக்கின்றேன்.. அது கருமம் - தொடையிடுக்கில் எல்லாம் ஊர்ந்து வருகின்றது.

  ஹலால் என்றும் ஹராம் என்றும் கோட்பாடுகளை உடைய இஸ்லாமிய நாடாகிய குவைத்தில் பார்க்கும் இடந்தொறும் மசாஜ் மற்றும் Spa என்றாகி விட்டது.

  வெற்றுடம்பில் ஏதோ ஒரு பசையைத் தடவிக்கொண்டு மானங்கெட்டுப் போய் கிடக்கின்றதுகள்.. சாண்ட்விச் மசாஜ் கேள்விப்பட்டதுண்டா!?..

  வெள்ளித் தோலன் எதைச் செய்தாலும் அதைக் கண்டு புளகாங்கிதம் அடைவதே வழக்கமாகி விட்டது.

  கூடிய விரைவில் யானை மசாஜ் பூனை மசாஜ் எல்லாம் தமிழகத்திலும் நடக்கக்கூடும்..

  காலம் இன்னும் என்னென்ன கோலங்களைக் காட்ட இருக்கின்றதோ?..

  RépondreSupprimer
  Réponses
  1. "வெள்ளித் தோலன் எதைச் செய்தாலும் அதைக் கண்டு புளகாங்கிதம் அடைவதே வழக்கமாகி விட்டது".
   அருமை அய்யா இலக்கிய நயமிகு நடையில் அமைந்த நற்கருத்து!
   விரைவில்.....

   கூடிய விரைவில் யானை மசாஜ் பூனை மசாஜ் தமிழகத்திலும் தவழ்ந்து வரும்!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. ஒரு மிதி மிதித்தால் சட்னியும் வெளி வரலாம்....அதற்கும் தகிரியம் வேண்டும்.

  RépondreSupprimer
  Réponses
  1. மிதியின்போது சட்னி மட்டுமல்ல! சாம்பார் கூட வெளியில் வரும் வாய்ப்பு அதிகமே!
   துணிச்சல் துண்டு அணிந்தவர் ஆயிற்றே தாங்கள்!
   துணைவே துணை
   தோழமையுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. நம்பமுடியாத செய்தி. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் படமெல்லாம் எடுத்து ஊர்ஜிதப் படுத்தப் படுகிறதே.

  RépondreSupprimer
  Réponses
  1. காணொளி செய்தியாக இருந்தாலும்
   யானையை வைத்து காசு பெறும் செயல் கண்டிக்கத் தக்கது அய்யா!
   வருகைக்கு மிக்க நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. குணமானால் வைத்தியம் இல்லையென்றால் மோட்சம்.
  எமனிடமே ஏகத்தாள பந்தயமா ? பலபரிட்சைக்கு முன்னே மாரடைப்பா ?
  கண்ணை காணவில்லை புதுவை வேலு அவர்களே.
  தாய்லாந்தில் புளு கிராஸ் இருக்கிறதா ?

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. தயவு தாட்சயணம் பாராத பளீர் கருத்து பளிச்சிடுகிறது
   நண்பர் சத்யா அவர்களே!
   எமனிடம் ஏகத்தாள பந்தயம் வைத்தால்?
   ஏக போக தாளமான தாரை தப்பட்டை ஒலி ஓங்கி ஒசையெழுப்பும்
   என்பது நிச்சயம் நிகழும் வாய்ப்பே அதிகம்.
   புளு கிராஸ் சிந்தனை சிகரம் நண்பா!
   வாழ்த்துகள்!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. அய்யா தங்கள் தளத்தில் கீழ்காணும் சொற்கள் உள்ளன. vendredi 6 février 2015,Membres,Accueil
  Publié par yathavan nambi à vendredi, février 06, 2015,Afficher mon profil complet, Recommander ce contenu sur Google,8 commentaires:Répondre

  ஆனால் புரியவில்லை. அநேகமாக பிரெஞ்ச் மொழியாக இருக்குமென நினைக்கிறேன். அதையெல்லாம் படிக்க திரு கில்லார்ஜீ அளவுக்கு பன்மொழி வித்தவர்தான் வரவேண்டும். தயவு செய்து சரிபார்க்கவும்

  சரி வேலூருக்கு வருகை தரும்போது முன்னதாக சொல்லவும் தங்களை நேரில் சந்திக்கிறேன்.

  RépondreSupprimer
  Réponses
  1. அன்பு நண்பர் அவர்கட்கு,
   வணக்கம்!
   (அய்யா தங்கள் தளத்தில் கீழ்காணும் சொற்கள் உள்ளன.
   vendredi 6 février 2015,Membres,Accueil
   Publié par yathavan nambi à vendredi,
   février 06, 2015,Afficher mon profil complet,
   Recommander ce contenu sur Google,
   8 commentaires:
   Répondre

   ஆனால்? புரியவில்லை. அநேகமாக பிரெஞ்ச் மொழியாக இருக்குமென நினைக்கிறேன்.)


   உண்மை நண்பரே!
   அது பிரெஞ்சு மொழிதான்!

   "கூகுள் பிரான்சு" தேசத்தில் இருந்துவெளியாகும் பதிவாக உள்ளதற்கான அடையாளம் அது!
   வெள்ளிக் கிழமை 6 பிப்ரவரி 2015, உறுப்பினர்கள், , கருத்துக்கள்/பதில்கள்/பழைய இடுகை/ புதிய இடுகை என்பதே!
   எனது ஊர் புதுச்சேரி(புதுவை) ,விடுமுறையின்போது வரும்போது, தங்களுக்கு தகவல் தருகிறேன்! நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 10. யானைக்கு மதம் பிடித்தால்.....யானை மசாஜ் நினைத்தாலே .....பயமாத்தான் இருக்கு.....!!!

  RépondreSupprimer
 11. "நினைத்தாலே பயம் மயம்"
  அபயம் என்று சொல்லி அன்பிற்கு உபயம் செய்தால்
  வாழ்வு வளம் பெறும் வழி காணலாமோ?
  அன்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 12. நல்ல மசாஜ்.

  முன்பொரு சமயம் இதை காணொளியாக கண்டதுண்டு.....

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி நண்பரே!
   காணொளியை செய்தியுடன் கண்டு மகிழ்ந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!*
   வருகை தொடர்க!

   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் .. அது இங்கு நிஜமானால் கிட்டினி சட்டினி ஆகி விடும். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

  RépondreSupprimer