mercredi 11 février 2015

"மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)
அவசியம் குடும்பத்தோட வந்திடுங்க! என்று அழைத்தவாறே தான் 

கொண்டு வந்த திருமண பத்திரிகையை  தனது நண்பர் சத்யாவுக்கு

வழங்கிவிட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியேறினார் தில்லை.

என்னங்க! உங்க நண்பர் வீட்டு திருமணத்துக்கு எல்லா அரசியல்

தலைவர்களும் வருவாங்க இல்ல...

ஆமாம்! இதிலென்னடி உனக்கு சந்தேகம்?

அது வந்துங்க!

என்னடி! வந்து.... போயின்னு! விஷயத்துக்கு வா!

இவ்வளவு சொத்துபத்து எல்லாம் இருந்தும்....

அதுதான் நமக்கு தெரிந்த விஷயமாச்சே?

இதோ பார்! கல்யாண பத்திரிகையை எவ்வளவு சிறப்பாய் இருக்குது?

அது இல்லைங்க! ஒரு நல்ல இடமா அவருக்கு கிடைக்க வில்லை?

ஏன் இதுக்கு என்னடி குறைச்சல்?

குறைச்சல் ஒன்னும் இல்லிங்க!

பின்னே வேறு என்னடி?

ஒரே இரைச்சலாய் இருக்குமில்லையா?

 ஏன் சொல்றேன்னா! 

அரசியல்வாதிகள் மணமக்களை வாழ்த்தி பேசுவார்களே!


அப்படின்னா இரைச்சல்  இருக்கத்தானே செய்யும்!

அப்படி எல்லாம் இருக்காது ஏன்னா?

 


"மாங்கல்யம் தந்துனா ஹேனா மமஜீவன ஹேதுனாம்...
என்று ஐயர் மந்திரம் சொல்லி இந்த கல்யாணம் நிகழும் இடம் "கோயில்"  
கோயிலில் அரசியல் கூடாது!

ஏன்? பேசக் கூடாது ?

கோயிலில் பேசினால்?

அதற்கு பெயர்"மத (ம்) அரசியல்". 

பதிலை கேட்டதும் சத்யாவின் மனைவி,  
அடுப்படியில் இருந்து வரும் சமையல் நெடியைவிட ...
இந்த அரசியல் நெடி கலந்த வார்த்தை மூக்கை துளைக்குது சாமி 'அச் ஹூம்!' என்றவாறே! தும்மியபடியே நகர்ந்தாள்.
(இப்படியும் பெயர் வைத்து சொல்லுவார்களோ சிலர்)புதுவை வேலு

 

29 commentaires:

 1. அரசியல்வாதிகள் மணமக்களை வாழ்த்தி பேசுவார்களே!//

  நடப்பதை சொல்லும் கதை.
  நன்றாக இருக்கிறது.

  RépondreSupprimer
  Réponses
  1. வாழ்த்தி பேசும் வாய்ப்பு கிடைக்கும் போது வேண்டாதவர்களை வீழ்த்தியும் பேசுவார்கள்!
   கதையினை படித்து துடிப்பான கருத்தினை முதலில் வடித்தமைக்கு சகோதரிக்கு குழலின்னிசை நன்றி பாராட்டுகிறது.
   தொடர்ந்து நல்லூக்கம் தந்து வழி நடத்த வேண்டுகிறேன்.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. இரைச்சலை தக்நூண்டாய் பதிவு செய்திருகிறீர்.. கொஞ்சம் விரித்திருந்தால் நன்றாக இருக்கும்.

  RépondreSupprimer
  Réponses
  1. கதையினை ஆழ்ந்து படித்து கருத்துரை வழங்கிய தோழர் மது அவர்களுக்கு நன்றி!
   கதையின் முடிவில் ஓரிரு வரிகள் தங்களது வேண்டுதலின்பேரில் சேர்த்துள்ளேன்!
   காணவும். நல்ல ஊக்கம் தந்து கூகுள் வரை கொண்டு போய் சேர்த்தமைக்கு மீண்டும் நன்றி!
   தொடர்ந்து ஆதரவு அலை வீசட்டும். படைப்புகள் படகாய் அதில் செல்லட்டும்.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. யதார்த்தம், பகிர்ந்த விதம் நன்று.

  RépondreSupprimer
  Réponses
  1. சிறுகதை பகிர்ந்ததை பாராட்டி கருத்தினை தந்த முனைவர் அய்யா
   ஜம்புலிங்கம் அவர்களுக்கு, குழலின்னிசை நன்றி பாராட்டுகிறது.
   தொடர்ந்து தங்களின் ஊக்கம் என்னும் அரும அருந்தினை வேண்டுகிறேன்.

   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. Réponses
  1. இரைச்சல் பேசும் அரசியல்வாதிகள் குறித்த கருத்து உண்மையே வார்த்தச் சித்தரே!
   வருகைக்கு நன்றி! ஆதரவு பெருகட்டும்.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. அரசியல்வாதிகள் திருமணம் நடக்கும் இடம் கோவிலாக இருந்தாலும் அரசியல் பற்றித்தான் பேசுவார்கள்.

  RépondreSupprimer
  Réponses
  1. கோவிலை வாக்குச் சாவடியாக மாற்றாதவரை புண்ணியமே!
   நல்ல கருத்தை நவின்ற அய்யாவுக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. இரைச்சல் இன்றி இனிய திருமணம் கோவிலில் நடக்க இயன்ற வரை விட்டால் தேவலை..
  அரசியலில் விடுவார்களா...? தெரியவில்லை.....

  RépondreSupprimer
  Réponses
  1. "விடாது கருப்பு (பணம்) சகோதரி!
   மழை விட்டாலும் தூவானம் தூறிக் கொண்டேதான் இருக்கும்.
   வருகைக்கு நன்றி! தொடர்க!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. அரசு இயல் இல்லாமல் எதுவுமில்லை......

  RépondreSupprimer
  Réponses
  1. அரசு இயல் இன்றி எதுவும் நிகழாது இது உண்மைக் கூற்று தோழரே!
   மக்கள் இன்றி மகேசன் இல்லை!
   வருகைக்கும், கருத்து தந்தமைக்கும் நன்றி தோழரே!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. Ce commentaire a été supprimé par l'auteur.

  RépondreSupprimer
 9. வேலியிலே போற ஓணானை பிடித்து ஜீன்ஸுக்குள்ளே விட்டால் இப்படித்தான் நண்பா...

  RépondreSupprimer
  Réponses
  1. உலக கோப்பை கிரிக்கெட் வந்ததும் வேட்டியை தடை செய்துவிட்டீர்கள் போலும். ஜீன்ஸை கொண்டு வந்து விட்டீர்களே!
   (முன்பு ஒரு முறை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் வேட்டியோடு உள்ளே நுழைய
   தடை விதித்ததாக நினைவு நண்பா!) நல்ல குசும்பு! நன்று!
   வருகை தொடரவும்!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 10. கோவிலில் திருமணம் நடத்தும்போது அரசியல்வாதிகளை அழைப்பார்களா என்ன? அவர்களே வரமாட்டார்களே!

  நல்ல கருத்து.

  RépondreSupprimer
 11. இரைச்சல் இல்லா திருமணம்
  வாய்ப்பே இல்லை
  நண்பரே

  RépondreSupprimer
  Réponses
  1. சுற்றமும் நட்பும் எழுப்பும் குதுகூல இரைச்சல் சுகமே!
   ஆனால்? அரசியல் சத்தமென்பது கெட்டிமேளம் ஒலிப்பதன் பொருளாகவே கொள்ளப்படும் நண்பரே!
   தங்களது கருத்தின் சத்தம் சுப நாதம்!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. கோயில்களில் கூட இன்றைய அரசியல் புகுந்துவிட்டது நண்பரே! சுவையான கதைப்பகிர்வுக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. அமைதியை நாடும் இடத்தில் வாழ்த்து என்னும் பேரில் அரசியல் நுழைவது இரைச்சலால் இறையாண்மை பாதிக்கபடும் என்பதை உணர்த்தும் தளீர் சுரேஷ் அவர்களே! தங்களது கருத்து, அனைவராலும் வரவேற்கபடுவது என்பது உறுதி!
   நல்ல கருத்தினை தந்தமைக்கு நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. வணக்கம்
  ஐயா.
  காலம் உணர்ந்து கதை புனைந்த விதம் கண்டு மகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி ஐயா.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
 14. "பருவத்தே பயிர் செய்" என்பதை போன்று காலம் உணர்ந்து புனைந்த கதைக்கு
  நல்லதொரு கருத்தினை தந்தீர் ரூபன் அவர்களே!
  கருத்து பகிர்விற்கு குழலின்னிசையின் நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 15. இரைச்சலாய் இருக்கும் இடங்களில் திருமணம் நடக்கும் இடமும் ஒன்று, ஆனால், கோவிலில் திருமணம் நடக்கும்போது அரசியல்வாதிகள் அடக்கி வாசிப்பார்கள் (அசிங்கமாக சிரிப்பார்கள்) என்பதே என் கருத்து புதுவை வேலு அவர்களே.

  sattia vingadassamy

  RépondreSupprimer
 16. அடக்கி வாசித்தாலும் மைக் கொடுத்து சவுண்டு பார்ட்டி ஆக்கி விடுகிறார்களே
  விசுவாசிகள்!
  சிரிப்பை சிந்தும்போது வாட்ஸ அப் கலக்கல் இனி கலகலப்பாய் மாறி விடும்!
  நன்றி நண்பரே!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 17. மத அரசியல்.... எங்கும் எதிலும் அரசியல் - கோவிலிலும்!

  RépondreSupprimer
 18. இரைச்சல் பேசும் அரசியல்வாதிகள் குறித்த கருத்து உண்மையே!.என்பதே என் கருத்து .
  நன்றி நண்பரே!
  நட்புடன்,
  புதுவை வேலு
  வருகைக்கு நன்றி! ஆதரவு பெருகட்டும்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 19. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  RépondreSupprimer