vendredi 24 avril 2015

"சர்வதேச மலேரிய விழிப்புணர்வு தினம் "


இன்று ஒரு தகவல்





"கொசு"

தேங்கிய குட்டைநீர் உனக்கு தேனாறு
தேகமே நீயமரும் தேன் கூடு!
உதவாத ரத்தவங்கி உன்னிடமோ?-மிதவாத
உயிர்க் கொல்லியும் நீதானோ?




லகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ந்தேதி
"சர்வதேச மலேரியா  விழிப்புணர்வு" நாளாக  கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

கொசுக்களின்மூலம் பரப்ப படும் பல வகையான கொடிய நோய்களில் மலேரியாவும் ஒன்று.

1.மலேரியா "Anopheles gambiae" - என்னும்  வகையைச் சேர்ந்த பெண்  கொசுவால் (நுளம்பால்) பரப்ப பட்டு வருகிறது.


மேலும்,

2.    சிக்குன்குனியா (Tiger mosquito)  எனும் வகை கொசுவால் (நுளம்பால்) பரப்பப்படும்.

3.    மூளைக்காச்சல் Culex tarsalis எனும் வகை கொசுவால் (நுளம்பால்) பரப்பப்படும்.

4.    டெங்குக் காச்சல் Aedes Aegypti  எனும் வகை கொசுவால்  (நுளம்பால்) பரப்பப்படும் .

 5.    ஆனைக்கால் நோய் (Filaria) - Culex quinquefasciatus எனும் வகைகொசுவால்  (நுளம்பால்) பரப்பப்படும்.

 கொசு   "குலிசிடை" (culicidae) என்னும்   குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சினமாகும்.


கொசுவை பற்றி மேலும் பல தகவல்கள் இதோ!




உலகளவில், மக்கள் அறிந்திருக்கும் கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.
அதிலும், சில கொசுக்கள், தங்களது வகையைச் சேராத கொசுக்களையே சாப்பிட்டு விடும். கொசுக்களின் பரிணாம வளர்ச்சி, ஓர் அற்புதமான நிகழ்வு. ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே. முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரியமுனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


(1)ஒன்று, கொசுவால் மிக மோசமான வானிலையில் பறக்கலாம்.
மழைத்துளியின் எடை, கொசுவை விட 50 மடங்கு அதிகம். இருப்பினும், மழை பெய்யும்போது, கொசு சுதந்திரமாக பறக்கலாம். கொசு அதன் குறைவான வலிமையைப் பயன்படுத்தி மிகுவிரைவாக செயல்படுவதால், மழைத்துளிகள் தாக்காது தப்பிச் செல்லாம் என்று மக்கள் பொதுவாக கருதுகின்றனர். ஆனால், இது உண்மையா? 2011-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ச்சோஜியா மாநில அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள், உயர்வேக ஒளிப்பதிவு வசதியில், கொசு மழை பெய்யும்போது பறக்கும் நிலைமையைச் சோதனை செய்து பார்த்தனர். அவர்களது சோதனை முடிவின்படி, கொசுக்கள் மழையும்போது மெதுவாக பறப்பதால் தான், மழைத்துளிகளை கடந்து செல்ல முடிகிறது என அறிய வந்தனர். இது, மக்களின் பொதுவான கருத்தை விட வேறுபட்டதாக உள்ளது. 

(2)Texas மாநில கொசு 


உலகளவில், மக்கள் அறிந்திருக்கும் கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது என்று நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே அறிவித்தோம். அமெரிக்காவில் மட்டுமே, 150 வகை கொசுக்கள் உள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவின் Texas மாநிலத்திலுள்ள கொசுக்களின் வகைகளினஅ எண்ணிக்கை, 85 ஆகும். இது, அந்நாட்டின் அனைத்து மாநில கொசு வகைகளை, மிகவும் அதிகமாக உள்ளது. 

(3)கொடுமையான பெண் கொசு 


பெண் கொசுக்கள், விலங்கு மற்றும் மனிதரின் இரத்தத்தை உறிஞ்சுவதோடு, பல நோய்களையும் பரப்பி விடுகிறது. இது, உலகிலேயே கொடுமையான உயிரிகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும், கொசு பரப்பும் மலேரியா காய்சலால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை, 20 முதல் 30 இலட்சம் வரை இருக்கும். மேலும், சுமார் 20கோடி மக்கள் இந்நோய் தொற்றால் அல்லல்படுகின்றனர். தவிரவும், மஞ்சகாமாலை, டெங்கு காய்ச்சல், மஞ்சக்காமாலை நச்சுயிரிதொற்று முதலியவற்றை பரப்புவதற்கு காரணமாகும். 

(4)ஆண் கொசு


பெண் கொசுவுடன் ஒப்பிடும்போது, ஆண் கொசு அவ்வளவு கொடுமையானதல்ல. ஆண் கொசு, விலங்கு மற்றும் மனிதரின் இரத்தத்தை உறிஞ்சாது. அவை உண்ணும் அனைத்து உணவுகளும், மலரின் தேன் மற்றும் தாவரங்களிலிருந்து கிடைகின்றன. உண்மையில், முட்டையிலிருந்து பிறக்கும் போது தான், பெண் கொசு மனிதரின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. மனிதரின் இரத்தத்தில், கொசு முட்டை உருவாவதற்கு தேவையான எண்ணெய், வெண்புரதம் மற்றும் இதர ஊட்டச் சத்துப் பொருட்கள் இடம்பெறுகின்றன. இதர நேரத்தில், ஆண் கொசு போல், அவை மலரின் தேனையும் தாரவங்களின் சாற்றையும் தான் உண்ணுகின்றன. 

(5)கொசுவின் பங்கு 


ரஷியாவின் வட துருவ மண்டலத்திலும் கானடாவிலும் காணப்படும் impiger மற்றும் nigripes எனப்படும் இரு வகை கொசுக்கள், கூட்டம் கூட்டமாக பறக்கும்போது, வானிலில் மேகமூட்டம் போல் தோன்றுகின்றன. அவையே, இடபெயரும் பறவைகளின் முக்கிய உணவாகும். தவிர, உலகின் தெற்குப் பகுதியில், பறவை, புழுப் பூச்சி, தவளை, மீன் முதலியவற்றின் முக்கிய உணவாக, கொசுவும் உள்ளது. மேலும், சில மலர் மற்றும் தாவரங்களின் சூலக முகட்டில் சேர்க்கையில், கொசு முக்கிய பங்காற்றுகிறது. 

(6)ஆத்திரச்சியடைய வைக்கும் கொசு!


மக்கள் உடலிலிருந்து நுகரும் வேதி மணத்தை நாடும் திறமை கொசுவுக்கு மிகவும் வலிமையாக உள்ளது. கொசுவின் உணர்வறி உறுப்புக்களில், மணங்களையும் வேதிப் பொருட்களையும் உணர்வதற்காக 70க்கு அதிகமான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் வெளிவிடும் மூச்சு காற்றையும் மனித உடலின் மணத்தையும், கொசுக்கள் அவற்றின் உணர்வறி உறுப்புக்கள் மூலம், உணர்ந்துக் கொள்கின்றன. கரியமில வாயு உள்ளிட்ட கரிம பொருளாயதங்களையும் கூட, இந்த உணர்வறி உறுப்புக்கள் நுற்றுக்கு மேலான அடி தொலைதூரத்தில், கொசுக்கள் இந்த பொருளாயதங்களை உணர்ந்து கொண்டு, இலக்கை உறுதிப்படுத்தி கண்டறிய முடியும். ஆழமான சிவப்பு ஆடையை அணிந்திருக்கும் மக்களை, கொசுக்கள் கடிக்க விரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது. 

(7)கொசுக்களின் தேர்வு 


சில மக்கள் பல ஆடைகளை அணித்து, அவர்களது சரும்ம் வெளிப்படுவதைத் தடுக்கும் போதிலும், கொசுக்கள் இந்த மக்களையும் தாக்குதல் இலக்காக கருதுகின்றன. என்ன காரணம்? இதர மக்களை விட, இந்த மக்களது உடல்கள் மேலதிக மணங்களையும் கூட்டுப் பொருட்களை எளிதாக வெளியிடுவது தான். எனவே, இந்த மக்கள், கொசுக்களிடம் மேலதிக ஈர்ப்பாற்றல் கொண்டுள்ளனர்.


(8)கொசுக்கள் இரத்தத்தை உறிஞ்சும் போக்கு மிகவும் சிக்கலானது
கொசுக்கள் இரத்தத்தை உறிஞ்சும் போது, அவற்றின் வாய், எளியதாக சருமத்தில் நுழைந்து உறிஞ்சுவது இல்லை. உண்மையில், கொசுக்கள் முதலில் வாயின் கீழ் உதட்டைப் பயன்படுத்தும். இந்த கீழ் உதடு வளைந்து திரும்பும் போது, வாயின் இதர பகுதிகள் வெளிப்பட்டு, இரத்தத்தை உறிஞ்சத் துவங்கும். வாய்க்குப் பாதுகாப்பு கொடுப்பது தான், இந்தச் செயலின் நோக்கமாகும். அதற்குப் பின், கூர்மையான மேல் தாடை நரம்பு கீழ்தாடை நரம்பின் கூட்டு ஒத்துழைப்பு மூலம், வாய் முழுமையாக சருமத்தில் நுழையும்.


(9)கொசுக்களின் எச்சிலில் வேதியல் பொருட்கள்
இரத்தத்தை உறிஞ்சும் போது, கொசுக்களின் வாயில் வெளியும் எச்சில், இரத்தத்தின் திரளைப் பாதிக்கும். இந்த எச்சிலில் இருக்கின்ற வேதியல் பொருட்கள், இரத்த நாளத்தின் சுருங்குதல், இரத்த வட்டுகளின் திரட்டல் முதலியவற்றைக் கட்டுப்படுத்த முடியும். இது, இரத்தத்தை தங்கு தடையின்றி கொசுக்களின் மேல் உதட்டை கடக்க உதவும்.


(10)ரத்தக் கொதிப்பின்னால் பங்கில், இரத்தம் விரைவில் கொசுக்களின் வயிற்றுக்குள் நுழையும். இரத்தத்தை உறிஞ்சும் போது, கொசுக்களின் வயிற்றுக்கு முழு நிறைவு ஏற்படாது. எனவே, கொசுக்களின் வாயை மனிதரின் தோலிலிருந்து வெளியே எடுத்தால், கொசுக்கள் தொடர்ந்து இரத்தத்தை உறிஞ்சி, அவற்றின் வயிறு சீர்குலைந்து இறக்கும். உடலின் உள் உறுப்புகள் மிகுதியான இரத்தத்தால் வெடிப்பு ஏற்பட்ட பின், கொசுக்கள் மேலும் இரத்தத்தை உறிஞ்சும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.




எனவே ,
தூய்மையை பேணுவோம்!   சுத்தம்/சுகாதாரத்தை கடை பிடிப்போம் என்று இந்த நாளில்,  "உறுதிமொழி" யை  நாம் ஏற்போமாக!!!


தகவல்:

புதுவை வேலு

நன்றி: tamil.cri.cn 







26 commentaires:

  1. கொசுவைப்பற்றி இத்தனை தகவலா? பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. முதல் கருத்தை முழங்கிய அய்யா அவர்களே
      வருக! நாளும் நல்லதை எடுத்துச் சொல்லி
      குழலின்னிசையை நல்வழி பாதையில் கொண்டு செல்வதற்கு!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. கொசுவைப் பற்றி அதிகமான கொசுறுத் தகவல்கள். அனைத்தும் பயனுள்ளவை. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியவை. பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. முனைவர் முத்தாய்பு முக்கனிசுவை கருத்து
      முழங்கட்டும் புவியில் ஒலித்து!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. விளக்கமான பல தகவல்கள் வியக்க வைத்தன...

    RépondreSupprimer
    Réponses

    1. நல்லுதவி செய்து அனைவரையும் மலைக்க வைக்கும் வலைச் சித்தரே!
      உமது வருகைக்கும், வாக்கிற்கும் குழலின்னசை நன்றி நாதம் இசைக்கின்றது.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. கொசுவைப் பற்றிய தகவல்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். எனது தளத்திற்கு வர வழி மறந்து விட்டதா சகோ ? எனது பக்கத்திற்கும் வருகை தாருங்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. விழியில் பதிந்துவிட்ட தங்களது தளத்தை எப்படி சகோ மறக்க முடியும்?
      அலுவல்தான் காரணம்!
      எனது பதிவுகளுக்கே என்னால் உரிய நேரத்தில் பதில் அளிக்க முடியவில்லை!
      அனைத்து அன்பர்களும் தவறாக எண்ண வேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்!
      நிச்சயம் வருவேன் சகோ!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. பிரமாண்டமான தகவல்கள் பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே..

    RépondreSupprimer
    Réponses
    1. பிரமாண்டமான ஆதரவினை வாசகர்களிடம் நாளும் பெற்று வரும் நண்பரே!
      உமது வருகைக்கும் வாக்கிற்கும் வலிமை உள்ளது என்பதை குழலின்னிசை
      உணர்ந்தே உள்ளது! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வணக்கம்
    ஐயா
    விளக்கம் வாயில் பல தகவலை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி.த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் கவிஞரே!
      அடாது பணியிலும், விடாது வந்து கருத்தினையும், வாக்கினையும் பதிவு செய்யும் பண்புள்ளத்திற்கு நன்றி நண்பரே!
      தங்களது கவிப் பணி சிறக்கட்டும்!
      வாழ்க! வளர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. தங்கள் தகவல்களுக்கு நன்றி. பரவாயில்லை, கொசுவில்லாவது ஆண் கொசு கொஞ்சம் நல்லதா இருக்கே.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் சகோ!

      "கொசுவில்லாவது ஆண் கொசு கொஞ்சம் நல்லதா இருக்கே"?
      கொசுவில் மட்டுமல்ல சகோ!
      வாழ்விலும் பசு வாக பல சகோதரர்கள் இருக்கிறார்கள்,
      என்னைப் போல....
      ஹா- ஹா- ஹா!
      ஹாசியக் கருத்தினை வடித்தமைக்குùம், வருகைக்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. நல்லவிளக்கங்கள், தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி! ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. அறிவு விசாலமடைய வேண்டும் அய்யா!
      ஆசானே தாங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கள்தான்
      அதை உர்வாக்குவதற்கான ஊக்கசக்தி!
      வாருங்கள் தாருங்கள்!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. பயனுள்ள தகவல்கள் த.ம.5

    RépondreSupprimer
    Réponses
    1. தோள் கொடுக்கும் தோழரின் வருகைக்கும், வாக்கிற்கும்
      வாள் கொண்ட தமிழ் மறவரின் வாழ்த்துகளும், நன்றிகளும்!
      நல்வருகை நலம் பயக்கட்டும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அன்புள்ள அய்யா,

    கொசுவைப் பற்றி பல செய்திகளைத் தந்தீர்கள்...! படித்தோம். பயனுள்ள தகவல்கள்.

    நன்றி.
    த.ம. 7.

    RépondreSupprimer
    Réponses
    1. பயனுள்ள தகவலை பாராட்டி கருத்தினை
      பகிர்ந்தளித்த பாவலரே! உமது பண்புமிகு வாக்கால்
      ஏழினை பெற்று பதிவு ஏற்றம் பெற்றது தமிழ் மணத்தில்!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய விழிப்புணர்வுத் தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
  12. விழிப்புணர்வு தகவலை படித்ததுமே
    விரைந்தோடி வந்து பாராட்டி,
    நற்கருத்தினை வடித்த நண்பருக்கு நன்றி!
    குழலின்னிசையின் தரம் உயர்வுக்கு, தங்களை
    போன்றோரின் வருகையே காரணம்!
    வருக! நற்கருத்தினை நலமுடன் தருக!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. கொசு சிறுசு, ஆபத்தானது, சிந்திக்க செய்யும் கட்டுரை சமுக அக்கறை கொண்ட எண்ணம் பெருசு, தகவலை கோர்த்த விதம் சிறப்பு புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. விழிப்புணர்வு தகவலை படித்ததுமே
      விரைந்தோடி வந்து பாராட்டி,
      நற்கருத்தினை வடித்த நண்பருக்கு நன்றி!
      குழலின்னிசையின் தரம் உயர்வுக்கு, தங்களை
      போன்றோரின் வருகையே காரணம்!
      வருக! நற்கருத்தினை நலமுடன் தருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. பயனுள்ள தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. விழிப்புணர்வு தகவலை படித்ததுமே
      விரைந்தோடி வந்து பாராட்டி,
      நற்கருத்தினை வடித்த நண்பருக்கு நன்றி!
      குழலின்னிசையின் தரம் உயர்வுக்கு, தங்களை
      போன்றோரின் வருகையே காரணம்!
      வருக! நற்கருத்தினை நலமுடன் தருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer