vendredi 7 octobre 2016

"மீண்ட சொர்க்கம்" (ஒரு நிமிடக் கதை)



 என்ன ஆச்சு! ஏன் வேலையை விட்டுட்டு இங்கே வந்துட்டீங்க!
இந்த கேள்விக்கான பதிலை தேடி தேடி தேய்பிறை நிலவாய் வாடியபடி வாசலில் வட்டமிட்டுக் கொண்டிருந்தான் வசந்த்.

வேலையில் இருக்கும் வரை மதிப்போடு மார்க் போட்டு மரியாதை செய்த சமூகம்
கை விட்டுப் போய் கைம்பெண்ணாய்
வந்தவளை பார்ப்பது போல்  ஏளனப் பார்வையால்....
பார்ப்பவர்களை காணும்போது,

 "அக்னிக்கு அரஸ்ட் வாரண்ட்" வாங்கி வந்தவர்களாகவே
வசந்த் கண்களுக்கு பட்டது.

ஒவ்வொரு நிலைப்பாட்டிற்கும் ஒருவிதமான காரண காரியங்கள் இருக்கத்தான் செய்யும்.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடியே....
வலை தளம் சென்று,
பதிவுகளை படித்தபடியே இருந்தான்.
அப்போது அவனது கண்களில் பட்டது ஒரு தலைப்பு

அது!

பூமாலை வாங்கி வந்தான்! பூக்கள் இல்லையே"

ஆமாம்,

அருமை! என்று பின்னூட்டம் இட்டுவிட்டு பெருமையோடு பார்த்தான்
சுவரில் மாட்டி இருந்த அந்த வாசகத்தை.....

" இதுவும் கடந்து போகும்"


நம்பிக்கை நாதம் நறுமலராய் பூத்தது.

வசந்த்க்கு வசந்த கால வேலை மீண்டும் வராமலா போகும்?

வாழ்த்துகள் சொல்ல வருங்காலம் வரும்!

விரைவில்......

புதுவை வேலு

12 commentaires:

  1. விரைவில் வரட்டும் வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. நேர் மறை கருத்தாய்
      பார் மறை போற்றியமைக்கு
      நன்றி

      Supprimer
  2. காத்திருக்கடும் கிடைக்கும் நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. நேர் மறை கருத்தாய்
      பார் மறை போற்றியமைக்கு
      நன்றி

      Supprimer
  3. விரைவில் வசந்தம் விரைந்து வரட்டும் கார்கால குளிர் போல)))

    RépondreSupprimer
    Réponses
    1. நேர் மறை கருத்தாய்
      பார் மறை போற்றியமைக்கு
      நன்றி

      Supprimer
  4. அருமையான படைப்பு

    RépondreSupprimer
  5. நேர் மறை கருத்தாய்
    பார் மறை போற்றியமைக்கு
    நன்றி

    RépondreSupprimer
  6. வசந்த காலத்திற்காகக் காத்திருப்போம்.

    RépondreSupprimer
  7. நேர் மறை கருத்தாய்
    பார் மறை போற்றியமைக்கு
    நன்றி

    RépondreSupprimer
  8. நல்லதாகவே நடக்கும்.....

    RépondreSupprimer
  9. நேர் மறை கருத்தாய்
    பார் மறை போற்றியமைக்கு
    நன்றி

    RépondreSupprimer