dimanche 9 octobre 2016

கலைவாணி அருள்வாய் நீ!




கலைவாணி அருள்வாய் நீ!!!

வீணை மடி யேந்தி கல்வி
யானை பிடி யேறி வருவாள்
தேனமு தாய் தமிழை  தருவாள்
உனை  பணிவோம் கலை வாணி!



வானை வசப் படுத்தும் அறிவு
வினை தீர்க்கும் வித்தக பரிவு!
திணை ஐந்தும் போற்றும் தேவி
நினைவோம் நா மகளை வேண்டி!



கீழ்  கூத்தானூர் கோயில் நாயகி
வீழா! தாழா! நிலை கல்விதேவி
வெள்ளைத் தாமரை மலரின் மகளே
கொள்ளையின்பம் செழிக்க நீ! வருக!



எல்லை யில்லா ஏட்டறிவுப்  பெட்டகம்
கல்லும் கசிந்துருகும் காவியத்  தடாகம்
வெல்லும் வெள்ளையாடை  வெற்றி தேவி
துள்ளும் மானாய் விரைந்தே வருக!



அல்லும் பகலும் அருந்தும் அருந்தமிழே!
அகிலத்தின் அமுதே  கலை மகளே!


ஆயக் கலை அரசி கலைவாணி
தேயாத நிலவாய் அருள்வாய் நீ!


 புதுவை வேலு

2 commentaires:

  1. கலைவாண்யின் அருள்மழை உங்களுக்கு என்றும் கிட்டும் நண்பரே வாழ்க நலம்

    RépondreSupprimer