vendredi 20 février 2015

உலக தாய்மொழி தினம்



"தாய் மொழி தினம்"

 


அன்னை அருளிய அன்பு மொழி
விண்ணைத் தாண்டிய ஆசை மொழி
மண்ணின் மாண்பை போற்றும் மொழி
உருவம் வெல்லும் உலகமொழி!


அருகும் மொழி போல் ஆகாது !
பருகும் மொழி போல் பயின்றிடுவோம்
உருகும் உணர்வின் உதய(ம்) மொழி
பெருமை பேசிட செய்திடுவோம்!


தாய் மண்ணே வணக்கம் என்போம்
தாய் மொழி இணக்கம் கொள்வோம்
தாய் மொழி பற்றுக் கொள்வோம்
தமிழ்மொழி கற்று வெல்வோம்!


புதுவை வேலு














தாய்மொழி நம் உயிர்மொழி. அது நம் தாயைப் போல புனிதமானது. சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்கத் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும்.

காந்தி, வாழ்க்கை வரலாற்று நூலான சத்தியசோதனையை தன் தாய்மொழியான குஜராத்தியில்தான் முதலில் எழுதினார்.

பத்திற்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்த மகாகவி பாரதி இறவாப் புகழ் மிக்க கவிதைகளையும் கட்டுரைகளையும் தந்தது நமது தாய்மொழியான தமிழில்தான்.

தாகூர், கீதாஞ்சலி எனும் நோபல்பரிசு பெற்ற படைப்பை முதலில் உருவாக்கியது அவரது தாய்மொழியான வங்கமொழியில்தான்.

ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. 

உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.


இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில், "உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை தெரிவித்தனர்.

கடந்த, 1952, பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது. 


தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர்.ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும்.

எந்த மொழியையும் அழிக்கக் கூடாது. "ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது. 









கடல் கடந்தும் இனிக்கும் தாய்மொழி:


மலேசியாவின் நெருக்கடி மிகுந்த ஒரு நெடுஞ்சாலையின் பெயர் மாமன்னர் ராஜராஜசோழன் சாலை!

சிங்கப்பூரின் ஆட்சி மொழியாய் தமிழ் அமர்ந்திருப்பதால் அடுமனையகம், நகையகம், பனிக்கூழகம், துணியகம் என்று விமானநிலையம் முதல் இல்லம் வரை பெயர் பலகைகளில் ஆங்கிலத்தோடு தமிழ் கொலுவிருப்பதைக் காண முடியும்.

பிரான்சு தேசத்தில் பல்வேறு பகுதிகளில் நன்கு செயல்படும் தமிழ் வகுப்புகளும்,
பரத நாட்டிய வகுப்புகளும், மேலும், பல்வேறு தமிழ் இலக்கிய விழாக்களுமே நாம் சான்றாக கொள்ளலாம்.


இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


.
மொழியின் பிறப்பிடம் எது?  தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும்.

மனிதனின் அடையாளம்,  அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான, நமது மொழியின் அருமை தெரியாமல், பிறமொழி மோகத்தில் தமிழை, தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம்.

தாய் மொழி தமிழின் அருமையை, இனிமையை, மேன்மையை உளமார உணர இந்த நாள் உதவட்டும்.






தகவல்: புதுவை வேலு

நன்றி: தினமலர்
 



26 commentaires:

  1. தாய் மொழிக்கு கவிதை அருமை, பெரும்பாலும் குழந்தை பேசும் அர்த்தமுள்ள முதல் சொல் தாத்தா (தாத்தாதா ...), சிறப்பு புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்!

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம்“

    ஐயா.
    தாய்மொழிக்கவிதை நன்று அதற்கான வரலாறும் நன்று.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்!

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. சிறப்பான பகிர்வு ஐயா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்!

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!
      நட்புடன்,

      புதுவை வேலு

      Supprimer
  4. தாய்மொழி தொடர்பான தங்களின் விரிவான பதிவு பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. உணர்வுகள் தாய்மொழியாக வெளிப்படும்போதுதான் அதில் உண்மைகள் காணப்படும். பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்!

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அறியாத விடயங்கள் அறிந்து கொண்டேன் பல நன்றி நண்பரே...

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்!

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அருமையான பதிவு. தாய்மொழி நாளன்று அது குறித்து செய்திகளை பதிவிட்டு அறியத்தந்தமைக்கு நன்றி. மொழி மீது பல்முனைத் தாக்குதல் நடந்து வரும் இந்நாட்களில் இது போன்று நாட்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும்.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்!

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. இனிய பதிவு!..

    தமிழ் வாழ்க!.. தமிழரும் வாழ்க!..

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்!

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. உங்கள் கவிதையை இங்கே கேட்கலாம்.

    வாழ்த்துக்கள்.
    இனிய பதிவு!..

    தமிழ் வாழ்க!.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. கவிதை அருமை! தாய்மொழியில் பேசுவதை தமிழன் மட்டுமே இன்று வெறுக்கிறான்! தன் குழந்தை கான்வெண்டில் படித்து ஆங்கிலத்தில் பேசுவதை ரசிக்கிறான்! இந்த நிலையில் தாய்மொழி தினமாவது தமிழ் மொழியை காப்பாற்றட்டும்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்!

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. பாடலும் இணைந்தொரு பதிவு
    பாடலுடன் ஆடலைக் கேட்கும்போது மட்டுமல்ல
    பதிவைப்பார்க்கும் போதும் சுகம் எனச் சொல்ல வைத்துவிட்டீர்கள்.
    சுப்புத்தாத்தாவின் குரலும் பாடலுக்கு இனிமை கூட்டியுள்ளது.
    தொடருங்கள்!
    நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்!

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. Réponses
    1. அன்புடையீர்!

      அன்னை அருளிய அன்பு மொழி
      அருகும் மொழி போல் ஆகாது !
      தமிழ்மொழி கற்று வெல்வோம்
      தாய் மண்ணே வணக்கம் என்போம்!

      வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. தாய் மொழி வரலாற்றை அழகாய் படம் பிட்டித்துக் காட்டி விட்டீர்கள். நன்றி பகிர்விற்கு.
    வாழ்த்துக்கள்.....

    RépondreSupprimer
  13. அன்புடையீர்!

    அன்னை அருளிய அன்பு மொழி
    அருகும் மொழி போல் ஆகாது !
    தமிழ்மொழி கற்று வெல்வோம்
    தாய் மண்ணே வணக்கம் என்போம்

    வருகைக்கு வளர் தமிழ் நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. அருமையான பாடல்.....ஆம் தாய் மொழியைப் போற்றி அடுத்த தலைமுறைக்கும் கடத்துவோம்...

    அமுதே தமிழே அழகிய மொழியே எமதுயிரே!!

    RépondreSupprimer
  15. "உலகத் தாய் மொழி தினம்" கவிதையை வரி வடிவிலும், இசை வடிவிலும் கண்டு, கேட்டு, இன்புற்று கருத்து பின்னூட்டம் புனைந்தமைக்கு மிக்க நன்றி ஆசானே!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer