dimanche 22 février 2015

வறுமை (கவிதை)








பசி!

கண்ணைக் கட்டுகிறதே!

புசித்திட 

உணவினை யார் தருவார்?

படைத்தவன் படி அளப்பானா?

பாழும் வயிற்றுக்கு?



பசிப் பிணி நீங்கி வாழ!

நீக்கமற நிறைந்திருக்கும்

எனக்குள் மறைந்திருக்கும்

கடவுளின் கடவுளைத்

தேடினேன்!

காணவில்லை!



உழைப்பின் உயர்வை

உலகிற்கு சொல்லிவிட்டு

மாயமாய்!
மறைந்தே போனார்!



புதுவை வேலு

22 commentaires:

  1. Réponses
    1. வாருங்கள் கரந்தையாரே!
      அருமையை அழைத்து
      வறுமைக்கு பிழைப்பினை
      கற்றுத் தருவோம்!
      வருகைக்கு நன்றி! தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. வாருங்கள்! வார்த்தைச் சித்தர்
      திண்டுக்கல் தனபாலரே!
      அருமையை அழைத்து
      வறுமைக்கு பிழைப்பினை
      கற்றுத் தருவோம்!

      வருகைக்கு நன்றி! தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அழகிய கவிதைவரிகள். அருமையான வார்த்தைகள். வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. அழகிய கவிதைக்கு
      எழில் சேர்த்தது
      சகோதரி!
      உமது
      மயிலாடும்
      பின்னூட்ட நடனம். நன்றி
      வருகைக்கு நன்றி! தொடர்க!

      புதுவை வேலு

      Supprimer
  4. வறுமை கவி அருமை நண்பா....

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள்!
      தேவக்கோட்டை நண்பா!

      அருமையை அழைத்து
      வறுமைக்கு பிழைப்பினை
      கற்றுத் தருவோம்!

      வருகைக்கு நன்றி! தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. உழைப்பே கடவுள் என்பதை அருமையாய் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் அய்யா!
      நன்னெறி நடன சபாபதி அவர்களே!

      உழைப்பே கடவுள்!
      உலகம் உணர்ந்த உண்மை!
      கலகமின்றி சிறக்கட்டும்!
      வலம் வந்து வாழ்த்திடுவோம்!
      வருகைக்கு நன்றி! தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. உழைப்பின் உயர்வை சொல்லி அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் நண்பரே!
      "தளீர் சுரேஷ்" அவர்களே!

      உழைப்பே கடவுள்
      உலகம் உணர்ந்த உண்மை
      கலகமின்றி சிறக்கட்டும்
      வலம் வந்து வாழ்த்திடுவோம்!
      வருகைக்கு நன்றி! தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வணக்கம்
    ஐயா

    அருமையாக உள்ளது இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கவிஞரே
      "ரூபன்" அவர்களே!
      அருமையை அழைத்து
      வறுமைக்கு பிழைப்பினை
      கற்றுத் தருவோம்!

      வருகைக்கு நன்றி! தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வறுமையை வறுமையாக்குமளவு மனதை மேம்படுத்துவோம்.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் முனைவரே!
      சோழ நாட்டில் பௌத்தம் பேசிய
      திரு B.ஜம்புலிங்கம் அவர்களே!

      வறுமைக்கு வறுமையை வார்ப்போம்!
      அந்த அறப் பணிக்கு
      நம் கரத்தினைக் கோர்ப்போம்!

      வருகைக்கு நன்றி! தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வறுமை வறுத்தெடுக்கிறது உண்மையே! வறுமையை களைய பொறுமை வேண்டுமோ?!!!! நல்ல பதிவு ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் ஆசானே!
      நல்ல பதிவு என்று வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. கடவுள் என்றால் - தன்னம்பிக்கை, சுயபுத்தியை எழுப்பும் அறிவுகோல், தன்னலமிலா பண்பு, பயத்தின் எண்ணத்தை உடைக்கும் கருவி, மற்றும் பல... வறுமை என்பது எமனிடம் தாயக்கட்டை உருட்டுவடு போல். வறுமை உண்மையை வெற்றிகொள்ளுமா ? தோல்வியே மிஞ்சும் என்பது என் கருத்து.
    ஊக்கம் தரும் புதிய நல்ல வரிகள். (வறுமை வந்தால் வாடாதே - முடியாது : வசதி வந்தால் ஆடாதே - முடியாது) நாம் சராசரி மனிதர்களே..
    நல்ல கருத்தை சொல்லும் புதுவை வேலு அவர்களுக்கு பாராட்டுக்கள்

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. ஆடாமலும், வாடாமலும் இருக்க முடியாது என்றுரைத்து, ஆணித்தரமான பின்னூட்டத்தை தந்த நண்பர் சத்யாவுக்கு நன்றி: வருகைத் தொடரவும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அருமை தோழர்
    வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  12. வாருங்கள் மது S, அவர்களே!
    நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்துள்ள தங்களது கருத்து பின்னூட்டம் கண்டு
    கண்ணனின் குழலின்னிசை நன்றி நவின்று வரவேற்பு நாதம் இசைக்கின்றது!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer