mardi 31 mars 2015

"மாத்தியோசி" (சிறுகதை)

  மாத்தியோசி

 








காண்பதெல்லாம் கனவா ? அல்லது நனவா?
அவனது கண்களை அவனாலே நம்ப முடியவில்லை சூர்யாவுக்கு!

எப்படி இந்த ஏழாம் பொருத்தம் ? 
எட்டாவது அதிசயமாக மாறியது?

தனது மனதின் தம்புராவை தாருமாறாய் மீட்டியபடி,
தனது மனைவி ஹேமாவுக்கும், தாய் பாக்கியத்துக்கும் இடையே நடைபெறும் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சிகளை, "லைவாக" பார்த்துக் கொண்டே இருந்தான். சமீபத்திய, உலக கோப்பை கிரிக்கெட் மேட்சில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடிய மேட்சை பார்த்ததை  போல!

அத்தை வாங்க! எங்களோட வந்து உட்காருங்க!
டீவி(TV) போடட்டுமா?

வாணி ராணி சீரியல் வர்ற் நேரம். பாருங்களேன்!

வேண்டாம் ஹேமா!

கரெண்ட் பில் அதிகமாயிடுச்சின்னு சண்டைக்கு வருவியே?

அதெல்லாம் அன்றைக்கு,  இன்னைக்கு ஸ்பெஷல்?
கேள்விக்கு இடமே இல்லை ! என்று சொல்லிவிட்டு ரிமோட் எடுத்து ஆன் செய்தாள் !

ஆஹா!

‘’அவள் பூக்களாலே கோர்த்து வைத்த அன்பின் மாலை!
அவள் உள்ளமெல்லாம் ஓய்வில்லாமல் ஓடும் சாலை!
அவள் தியாகம் என்னும் தீபம் ஏற்றும் விடியற்காலை!
இவள் தைரியத்தின் தேர்வு மட்டும் எழுதும் சேலை!’’

என, சீரியலின் டைட்டில் சாங் கேட்டதுமே பாக்கியம் உண்மையிலேயே
பாக்கியவதியாய் ஆகிதான் போனாள்!

சீரியலின் விளம்பரம் நிகழ்வின்போது, சட்டென்று எழுந்து, சிட்டாக பறந்து சென்று அத்தை குடித்த காபி டம்ளரை கொண்டுபோய், அடுப்படியில் கழுவி வைத்து விட்டு வந்தமர்ந்தாள் ஹேமா!
 
சீரியலின் முடிவில் கதாநாயகியின் குளோசப் ஷாட்டோடு தொடரும்! "போட்டுட்டானே!"
என்று முனுமுனுத்தபடியே, எழுந்தார்கள் மாமியாரும் மருமகளும் ஒருமித்த குரலை ஒலித்தபடி!

இவர்கள் இருவரின் "லைவ்" நிகழ்ச்சிகளை பார்த்து மனதுக்குள் "லைக்" கமெண்ட்ஸ் கொடுத்தபடியே அவனது அறைக்குள் சென்று அமைதியாகி அமர்ந்தான் சூர்யா!

சற்று நேரத்தில்,
ஹேமாவும் வந்துவிடவே!

ஒருநாள் முதல்வராய் இருந்தால்கூட செய்ய முடியாத
சாதனைகளை எப்படி உன்னால் செய்ய முடிகிறது?

எப்படி இந்த அதிரடி ஆட்டம்?

அட்டகாசமான மாற்றம்என்றான், மனைவியை பார்த்து!

அவளது பதில் பளீர் வெளிச்சத்தை பாய்ச்சியது
அறை முழுவதும்!

மாற்றம் இல்லைங்க!

"ஏமாற்றம்"

ஏமாற்றம் !

என்றாள்! 

சுவரில் மாட்டியிருந்த "தேதி காலண்டரை" பார்த்த படியே!

காலண்டரை பார்த்தான் சூர்யா....

இன்று.....

ஏப்ரல் 1

"முட்டாள் தினம்" 

என்றே சிரித்தது காலண்டர்   சூர்யாவை பார்த்து!!!!

புதுவை வேலு




32 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    தலைப்புக்கு அமைவாக கதை நன்றாக உள்ளது...படித்த மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம1
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. கவிஞரே கதையை ரசித்து கருத்தினை தந்தமைக்கு தகுதிமிக்க நன்றி!
      தங்கள் ஜீவ நதியில் குளித்தேன்! களித்தேன் கருத்தினை வடித்தேன்!
      ஜீவ நதியில் வலம் வரும்
      கவி நிதி ரூபனின் கவிதை
      புவியில் 'பொங்கு தமிழ்' போல்
      மேவி சிறப்புற வாழ்கவே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. கடைசியில் ஏப்ரல் 1 என்று கூறிவிட்டீர்களே? எதிர்பார்த்து ஏமாந்தோம்.

    RépondreSupprimer
    Réponses
    1. முனைவர் அய்யா வின் வருகை
      நினைக்கும் பொழுதே சிறப்பு தரும்
      குழலின்னிசைக்கு!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் சொன்னதுபோல் கடைசியில் ஏமாந்தேன். உண்மையில் மாற்றி யோசித்திருக்கிறீர்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. "மாத்தியோசி" கதையை ரசித்தமைக்கு
      நன்றி நடனசபாபதி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. ஹா ஹா! சிரிப்புடன் வருகை தந்த
      வார்த்தைச் சித்தருக்கு
      ஒஹோ! ஒஹோ! போடுகிறோம்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. மாற்றம் ஏமாற்றம்..சூப்பர். த.ம.4வரிசை

    RépondreSupprimer
    Réponses
    1. ஏமாற்றம் தராத மாற்றமிகு
      கருத்து அளித்தமைக்கு,
      மிக்க நன்றி வலிப் போக்கரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. ஆஸ்த்ரேலியா, இந்தியா போட்டியின் முடிவை போலவே ஏமாற்றமாய் முடித்துவிட்டீர்களே... அது சரி, வாணி ராணி சீரியலின் மாமியார் மருமகளே அப்படித்தான் எனும்போது.... !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer
    Réponses
    1. சீரியலின் சிந்தையோடு வந்து
      சீறும் புயலாய் சீற்றம் தரும் கருத்தினை வடித்த
      சாமானியரே நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ஏப்ரில் மாதம் ஒன்றாம் தேதிவந்தாலும் வந்தது ரூம் போட்டு யோசித்துக் கதை எழுதி ஏமாற்றுகிறாரோ என்றே நினைக்கத் தோன்றியது.

    RépondreSupprimer
    Réponses
    1. பளீச் என்று பட்டவர்த்தனமாய் கருத்தினை கனகச்சிதமாய் தரும் அய்யாவின்
      சிந்தைமிகு கருத்தினை கண்டு நான் வியக்காத நாளே இல்லை அய்யா!
      இது போன்ற கருத்து பின்னூட்டங்களை எப்படி எழுதுவது கொஞ்சம் டிப்ஸ் தருவீர்களா! அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சூப்பர்ப்பா,,,,,,,,,,,,,,,,,, சொல்வேன் என்று நினைப்பா? ஏமாந்ங்களா?

    RépondreSupprimer
    Réponses
    1. வலைப்பூவுலகின் சூப்பர் லேடி
      இங்கே வந்து கருத்து இடும்போது
      கதையின் சிறப்பை பற்றி
      நான் சொல்லவும் வேண்டுமா?
      சகோதரி!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. ஏப்ரல் ஒன்று என்று நினைத்துதான் ஆரம்பித்தோம் வாசிக்க அதுவும் இத்தனை இழைசலா என்று! ஓ ! அப்படி என்றால் கதையில் கூட மாமியாரும் மருமகளும் ஜோடி சேர மாட்டாங்களோ....ம்ம்ம்ம்கதை சூப்பர்!!!! பாவம் சூர்யா! இருபக்கமும் மத்தளம் தான் போங்க!

    RépondreSupprimer
    Réponses
    1. மத்தளம் கொட்டும் மகத்தான கருத்தோடு வந்து
      மங்கள கருத்திட்ட ஆசானே
      வணங்கி ஏற்கின்றேன்
      உங்களது உன்னத கருத்தினை!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. நல்லவேளை நான் இந்த மாமியாரும், மருமகளும் டிவியில சீரியல் பார்த்த கதையெல்லாம் படிக்கவே இல்லை.... தப்பிச்சுட்டேன்.
    தமிழ் மணத்தில் நுளைக்கவே வந்தேன் அதற்காக 7

    RépondreSupprimer
    Réponses
    1. (இந்த மாமியாரும், மருமகளும் டிவியில சீரியல் பார்த்த கதையெல்லாம் படிக்கவே இல்லை.... தப்பிச்சுட்டேன்)
      நம்பற மாதிரி தெரியலையே நண்பா!
      இருவரும் டீவி பார்த்தது உமக்கு எப்படி அய்யா தெரிந்தது!
      தேவக் கோட்டை பட்சி சொல்லியதா?
      வருகைக்கும் ஏற்றம் தரும் எழிற்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. ஒரு நாளாவது நம்மையெல்லாம் முட்டாளாக்கி பார்கிறதில அவருக்கு ரொம்ப சந்தோஷம் அதை ஏன் கெடுப்பான். இருந்திட்டு போகட்டுமே இப்போ என்ன வந்தது நமக்கு. இப்ப happy தானே சகோ வாழ்த்துக்கள் ...! அதற்க்காக டெய்லி வேணாம் சொல்லிட்டேன். ஹா ஹா

    RépondreSupprimer
    Réponses
    1. சகோதரியே வருக!
      "அதற்க்காக டெய்லி வேணாம் சொல்லிட்டேன். ஹா ஹா "
      அப்படி என்றால் என்ன பொருள்?
      தினந்தோறும் திருவிழா அப்படித்தானே?
      --ஹா! ஹா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. அன்புள்ள அய்யா,


    "மாத்தியோசி" (சிறுகதை)- தலைப்பைப் படித்தவுடனே யோசிக்காமல் போய்விட்டேன். மாமியார்... மருமகள்... கதை நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம. 8.

    RépondreSupprimer
    Réponses
    1. வருக! மணவை ஜேம்ஸ் அய்யா அவர்களே!
      கதையின் தலைப்பை பற்றி யோசிக்காமல் விட்டாலும்,
      வாசிக்காமல் விட வில்லையே அய்யா!
      நல்ல சான்றிதழ் வழங்கியமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. நல்ல மாற்றம் என்று நினைத்தால் முட்டாள்கள் தினம்! :)

    RépondreSupprimer
  14. மாற்றம் தரும் மனது மங்கையர்க்கு வேண்டும்
    நண்பரே! நாடி வந்து நல்ல கருத்தினை தந்தமைக்கு
    குழலின்னிசை நன்றி ராகம் இசைக்கின்றது!
    தொடர் வருகை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  15. அட! அதானே மாற்றம் எப்படி வரும்! ரசிக்க வைத்த கதை! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. ஏமாற்றம் தராத வருகை!
      ஏற்றம் தரும் கருத்து
      போற்றும் வகையில் தந்த
      நண்பர் தளீர் சுரேஷ் அவர்களுக்கு
      இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. என்னடா இது இப்படிக் கூட நடக்குமான்னு நினச்சேன்.
    ரசிக்க வைத்த கதை

    RépondreSupprimer
    Réponses
    1. "என்னடா இது இப்படிக் கூட நடக்குமான்னு நினச்சேன்!"
      தாங்கள் நினைத்ததை "மாத்தியோசி"க்க வைத்த கதையை
      நன்கு ரசித்த டி.என்.எம் (T.N.M) அய்யாவுக்கு நன்றீ§
      வருகை தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. மாத்தியோசி இல்லை எனில் பொங்கலோ பொங்கல். ஏப்ரல் மாத முதல் நாள் குசும்பு அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer

  18. "மாமியார் மருமகள் குசும்பு" பற்றி
    வசும்பு தடவிய வார்த்தைகளால்
    சொன்னமைக்கு நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer