lundi 1 juin 2015

"உள்ளம் உருகுதய்யா!"


                                                                               உள்ளம் உருகுதய்யா!


 தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
 தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை


ஒவ்வொரு தாய் தந்தையருக்கும் அவர்களது உலகம் எது என்றால்?
அது! அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பதுதான் நிதர்சன உண்மை!

தாயின் சிறப்பை சொல்ல எண்ணிலடங்காத கதைகளும், பாடல்களும் பார் முழுவதும் பரவி இருப்பதை நாம் அறிவோம். ஆனால், தந்தையின் சிறப்பு என்றால்?
பூவோடு (தாய்) சேர்ந்த நாராகவே, அவர்களும், மணம் பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை!

தங்களது பிள்ளைகளுக்கு மழலை பருவத்தில், பல்வேறு அறிவு சார்ந்த செய்திகளை போதிக்கும்போது, பெற்றோர், கடைபிடித்த பொறுமையை, பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள்  ஆனதும் கடைபிடிப்பது என்பது குதிரைக் கொம்பாய் தெரிகிறது. 

மேலும் பெற்றோர்களின் பேச்சை "மணிரத்னம்" படத்தின் வசனத்தை போன்று ஒரிரு வார்த்தைகளுக்கு மேல் செல்வதை, பிள்ளைகளின் மனம் என்னும் 'சென்சார் போர்டு' இப்போதெல்லாம் அனுதிப்பதில்லை.

இத்தகைய இன்றைய சூழ்நிலையில், வயதான காலத்தில், பெரியவர்களுக்கு,
எத்தைகைய மரியாதை நாம் தர வேண்டும்!
எப்படி நாம் தர வேண்டும்! 
என்பதை விளக்கும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான 'யூ டியூப்'  காணொளியை உங்களோடு பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன். கருத்தினை  கண்டு கருத்தினை பகருங்கள்!

நன்றி!
                           

புதுவை வேலு

37 commentaires:

 1. Réponses
  1. நண்பரே!
   முதல் வருகை!
   முதல் வாக்கு
   தங்களது (DDD) பதிவின் இடையேயும் வந்து விட்டு சென்றமைக்கு நன்றி!
   வாங்க கருத்தோடு பதிவினை களம் இறக்கிய பிறகு!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. வணக்கம்
  ஐயா
  அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. கவிஞரே!
   தங்களது கவிதை போட்டி நிலவரம் எப்படி உள்ளது?
   தினமும் கவிதை மழையில் நனைந்து கொண்டே! - இங்கே!
   என்னையும் நினைந்து வந்து கருத்தோடு கலந்த வாக்கினை
   பதிவு செய்த தங்களது தமிழ் அன்புக்கு நான் அடிமை!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. அருமை நண்பரே காணொளி கண்டு உள்ளம் உருகியதே....

  RépondreSupprimer
  Réponses
  1. நண்பரே!
   காணொளியில் "தமிழ்வாணன்" கண்ணில் தெரிந்தாரோ?
   உள்ளம் உருகுதய்யா! உனது கருத்தினை காண்கையிலே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. அருமையானம் காணொளி சகோ...முதலில் வரவில்லை. இப்போது சரி செய்து விட்டீர்கள் நன்றி.தம 2

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி சகோதரி!
   உண்மைதான்!
   முதலில் காணொளிக் காட்சியானது பதிவாகவில்லை!
   பின்னர்தான் நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டிய பிறகே சரி செய்தேன்!
   அந்த நண்பருக்கு முதற்கண் நன்றி!
   தங்கள் வருகை + வாக்கு !
   இரண்டும் இனிப்பு!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  RépondreSupprimer
  Réponses

  1. சிறந்த பதிவினை சிறப்பு வருகை தந்து
   சிறப்பிக்க செய்தமைக்கு
   சிறந்த பாவலருக்கு பணிவான நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. காணொளி கண்டு நெகிழ்ந்தேன் நண்பரே
  நன்றி
  தம +1

  RépondreSupprimer
  Réponses
  1. நெகிழும் நெஞ்சை
   கொஞ்சும் தமிழ் சீராட்டி மகிழட்டும்!
   நன்றி கரந்தையாரே

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. Réponses
  1. பின்னூட்ட புயல்
   வேகமெடுத்து வந்து பாராட்டியமைக்கு நன்றி

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. சிறந்த பதிவு சகோ. காணொளி மிக அருமை.

  RépondreSupprimer
  Réponses

  1. தொடர் ஆதரவு அளித்து வரும்
   சகோதரியே!
   அள்ள அள்ள குறையாத அன்பும்
   அடைய பெற்றவர் தாங்கள்.
   நன்றி சகோ!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. Réponses

  1. வலிபோக்கரின் வருகை நாளொரு மேனி
   பொழுதொரு வண்ணம் சிறப்புற வேண்டுகிறேன்!
   நன்றி தோழரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 10. இந்த காணொளியை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய காணொளி. பகிர்ந்தமைக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses


  1. தாங்கள் ஏற்கனவே கண்டிருந்தாலும்,
   காணொளியை அனைவரும் தவறாது காண பரிந்துரை செய்து "U" (universal)
   சான்றிதழ் தந்தமைக்கு நன்றி அய்யா!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 11. அருமை by the way, தந்தை மனம் குறித்து இரண்டு மூன்று பதிவுகள் எழுதி உள்ளேன் படிக்க விருப்பமானால் சுட்டி தருகிறேன்

  RépondreSupprimer
  Réponses

  1. வருகைக்கு நன்றி அய்யா!
   தங்களது பதிவுகளை படித்து மேம்பட ஆசை!
   சுட்டிகளை தாருங்கள் அய்யா!

   அல்லது தங்களது மின்னஞ்சல் முகவரி தாருங்கள்
   தொடர்பு கொள்கிறேன்!
   நன்றி

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. சிறந்த பகிர்வுங்க...
  பகிர்வுக்கு நன்றி.

  RépondreSupprimer
  Réponses

  1. மனமுவந்து பாராட்டும் மனம் படைத்த சகோதரியே!
   உமது வருகை சிறக்கட்டும் நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. அருமையான காட்சி! மனம் நெகிழும் மைந்தன்!

  RépondreSupprimer
  Réponses

  1. மனம் நெகிழும் மைந்தன்! காணொளியைக் கண்டு
   உள்ளம் உருகியமைக்கு நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 14. எதுவுமே
  இல்லாதபோது ஏக்கத்துடன் நெகிழ்ச்சி.
  இருக்கும்போது வலியுடன் சுகம்.
  இதுதான் உண்மை புதுவை வேலு அவர்களே.

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. இருப்பதுவும்
   இல்லாது போகையிலே
   நினைப்பதுவும்
   நினைவுகளின் நிஜமா? நண்பரே!
   வருகைக்கு நன்றி!
   தங்களது தாய் நாடு பயணம் சிறக்க வாழ்த்துகள்

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 15. நெகிழ்ச்சி தரும் காணொளி !

  RépondreSupprimer
 16. எனது மின் அஞ்சல் முகவரி
  gmbat1649@gmail.com

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 17. அருமையான காணொளி.இதோ குட்டனின் கவிதை..

  உன் மூன்று வயதில் ஒரு நாள் நாம்
  பூங்காவில் அமர்ந்திருந்த நேரம்
  பறந்து வந்தமர்ந்ததொரு குருவி அங்கே!
  இருபத்தொரு முறை கேட்டாய் மகனே நீ
  அப்பா அது என்ன என்று!
  இருபத்தொரு முறை சொன்னேன் நான்
  குருவி குருவி அதுவென்று அன்புடன்
  கோபம் வரவில்லை எனக்கு
  அலுத்துக் கொள்ளவில்லை நான்
  அன்பு மட்டுமே மிகுதியாகி
  அணைத்தேன் உன்னை ஒவ்வொரு முறையும்
  இந்த எழுபது வயதுக் கிழவனுக்கு
  பார்வைக் குறைபாடு,காதும் கொஞ்சம் மந்தம்
  இன்று நான் கேட்கும் கேள்விக்கு
  மூன்றாவது முறை பதில் சொல்ல
  மூக்கின் மேல் வருகிறது கோபம் உனக்கு
  மகன் தந்தைக்காற்றும் உதவி இதுவோ!
  மகனே,மகனே!  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 18. நண்பரே,

  இது மிகப் பிரபலமான தகவல். மேலோட்டமாகப் பார்த்தால் சரியென தோன்றும். ஆனால் ஒரு தந்தை எதுவும் அறியாத மூன்று வயது மகனுக்கு ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்வதற்கும் அதே மகன் வளர்ந்த பின் தன் தந்தைக்கு ஒன்றைச் சொல்வதற்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகவே நினைக்கிறேன். ஒரு விதத்தில் இது சுய பரிதாபத்தை தன் மீது திணித்துகொள்ளும் சுயநல செயலாகவே எனக்குத் தெரிகிறது.

  RépondreSupprimer
 19. காணொளி அருமை ஆனால் மனதை உருக்கிவிட்டது.....நல்ல பகிர்வு ஐயா!

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 20. அருமையான படிப்பினை காணொளி கண்ணீர் கசிய வைத்தது .நன்றி

  RépondreSupprimer