mercredi 3 juin 2015

"நள பாகம் நாயகியர்கள்/நாயகர்கள்" (இன்று ஒரு தகவல்)


"சமையல் சாம்ராஜ்யம்" சமையலறையில் அதிக நேரத்தை செலவழிப்பவர்கள் யார்? 
தெரியுமா? 
இது பற்றிய ஆய்வுக்காக 22 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியர்கள் வாரத்திற்கு சராசரி 13.2 மணிநேரங்களைச் செலவழிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் சமையலில் அதிக நேரம் செலவழிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

ஆனால் சமைப்பதில், அதிக ஆர்வம் காட்டுவது  இந்தோனேசியர்களே. இவர்கள் ஆசியா பசிபிக்கில் முதல் நிலையிலும் அனைத்துலக அளவில் நான்காம் இடத்திலும் இருக்கின்றனர். 

ஜெர்மனியின் மிக பெரிய சந்தை ஆய்வு மையமான ஜி.எஃப்.கே, 22 நாட்டைச் சேர்ந்த 15 வயதுக்கு மேற்பட்ட 27,000 பேரிடம் உணவு மற்றும் சமையல் பற்றிய அறிவு, அனுபவம், ஆர்வம் மற்றும் செலவழிக்கும் நேரம் என ஆய்வை நடத்தியது. 

ஆசியா பசிபிக் நாடுகளில் குறிப்பாக இந்தோனேசியா, ஆஸ்ரேலியா, தென் கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஏனைய நாடுகள் அவ்வளவாக சமைப்பது கிடையாதாம்.

நுகர்வோர் அனுபவங்களைப் பற்றி "மைக்கல் முல்லர்" கூறுகையில், அனைத்துலக அளவில் சமைப்பவர்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இரு மடங்கு அதிக நேரம் சமையலில் செலவழிப்பது ஆச்சரியமான செய்தியாகும்.

இதற்கு மாறாக, குறைந்த நேரம் அதாவது 3.7 மணிநேரம் மட்டுமே சமையலில் ஈடுப்படும் நாடாக "தென் கொரியா" விளங்குகிறது.
வட்டார அளவில் 40 விழுக்காடு இந்தோனேசியர்கள் சமைப்பதில் ஆர்வம் காட்டுவதைக் காணமுடிகிறது.

இவர்களை அடுத்து இந்தியா 39%, 

சீனா 32%, ஆஸ்ரேலியா 24% ஆர்வம் காட்டுகின்றனர்.
அதுமட்டுமின்றி, மேலும், சில சுவாரஸ்யமான தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

"நள பாகம் நாயகர்கள்" 

இந்தியாவில் ஆண்கள் வாரத்திற்கு 6 மணிநேரம் சமைப்பதில் செலவழிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

"நள பாகம் நாயகியர்கள்"

அதேநேரத்தில் பெண்கள் 14.2 மணிநேரம் சமையலறையில் செலவழிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக 22 நாடுகளிலிருந்து 37% பெண்களும், 27% ஆண்களும் உணவு மற்றும் சமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

இப்போது!  இந்த ஆய்வு தகவலின்படி, 
நமக்கெல்லாம் ஒரு உண்மை தெளிவாகி விட்டது என்றே சொல்லலாம்! எப்படி?
நமது  வலைப் பூவுலகில்....
"சமையல் சாம்ராஜ்யம்" அல்லவா கொடி கட்டி பறக்கிறது!
இத்தகைய சிறப்பினை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த நமது "சமையல் சாம்ராஜ்யத்தின்" 
'நளபாம் நாயகியர்கள்/நாயகர்களை'
நாமும் போற்றுவோமே!!!!

பகிர்வு

புதுவை வேலு

நன்றி:(V.Malaysia)


31 commentaires:

 1. நான் சாப்பிடுவதில்கூட அதிக நேரம் ஈடு படுவதில்லை நண்பரே.... இனி மேலாவது பார்ப்போம்.
  நல்லதொரு தகவல்.

  RépondreSupprimer
  Réponses
  1. நண்பரே தங்களது ஆரோக்கியத்தை பார்த்தால் அப்படி தெரிய வில்லையே?
   கண் வைத்தான் கருங்காலி என்று ஒரு பதிவு போடுங்கள்!
   முதல்கருத்தோடு முதல் வாக்கையும் சேர்த்து அளிக்க வருகிறேன்!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. வலைப்பூவையும் உள்ளே கொண்டுவந்துவிட்டீர்கள். உண்மைதான். எங்கெங்கும் சமையல் ராஜ்யம்தான். போற்றுவோம் நளபாக நாயகர்களையும், நாயகிகளையும்.

  RépondreSupprimer
  Réponses
  1. தங்களோடு இணைந்து நாமும் போற்றுகிறோம் நளபாக நாயகர்களையும், நாயகிகளையும். நன்றி முனைவர் அய்யா
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. வணக்கம்
  ஐயா
  தரவு விபரங்களுடன் சமயல் குறிப்புக்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. பதிவினை பாராட்டி கருத்திட்ட கவிஞருக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. புதுவையாரே, வணக்கம்.
  நான் அடுத்து பிறப்பது தென் கொரியாவில், அப்பாடா கொஞ்ச நெரம் மட்டும் சமையல் அறையில்,
  தங்களின் தரவிகள் அருமை, பதிவுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. அப்படியென்றால் எங்களுக்கு தமிழ் வகுப்பு எடுப்பது யார் சகோ!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. கூடிய விரைவில் இந்தியாவிலும் சமையல் செய்யும் நேரம் குறையும் என்று எதிர் பார்க்கலாம். ஹோட்டல்களில் கூடும் குட்டத்தை பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.
  த ம 4

  RépondreSupprimer
  Réponses
  1. ஆராய்ச்சிப்பூர்வமான உண்மையை உலகறிய கருத்தாக தந்தமைக்கு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. அக்கறையுடன் சமைப்பதில் - நம்மவர்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது..

  அதை - அன்புடன் பரிமாறுவதிலும் நமக்கு நிகர் வேறு யாரும் கிடையாது..

  வாழ்க நலம்!..

  RépondreSupprimer
  Réponses
  1. விருந்தோம்பி விருந்துண்டு வாழ்வதுவே தமிழர் பண்பாடு!
   நினைவூட்டி சிறப்பு செய்த அருளாளர் அய்யாவுக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. சுவாரஸ்யமான தகவல்கள்... நன்றி...

  RépondreSupprimer
  Réponses
  1. வார்த்தைச் சித்தரின் வருகையும், வாக்கும், வளர்ச்சிக்க்கான் வாழ்த்து!
   நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. தகவலுக்கு நன்றி! திரு செந்தில்குமார் அவர்கள் சொன்னதுபோல் வருங்காலத்தில் சமையல் செய்யும் நேரம் நம் நாட்டில் குறையலாம்.

  RépondreSupprimer
  Réponses
  1. உணவைத் தேடி திரியும் பறவைகளாகி விட்டோம் அய்யா!
   அதுவும் அவசர பறவை!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. சமையலுக்கு தேவையான நவீன எந்திரங்கள் நம்மிடம் குறைவோ :)

  RépondreSupprimer
  Réponses
  1. வளரும் நாடு என்று சொல்லாமல் சொல்கிறாரோ பகவான் ஜி!
   புதுவை வேலு

   Supprimer
 10. உங்கள் பதிவை பார்த்ததும் வலைப்பூ ஆரம்பித்து விட்டீர்களோ என்று ஒரு சிறிய சந்தேகம் வந்தது சகோ. அருமையான தகவல்களை தெரிந்து கொண்டேன்.

  RépondreSupprimer
  Réponses
  1. நளபாகம் நாயகியிடம் நற்பாராட்டு! நன்றி சகோ!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 11. நானும் சமைத்திருக்கிறேன்! சுவையாகவே!

  RépondreSupprimer
  Réponses
  1. நளம் பாகம் நாயகர் புலவர் அய்யா
   அவையும், சுவையும் அறிந்தவர் என்பதில் மகிழ்வே!
   புதுவை வேலு

   Supprimer
 12. பல தகவல்களை தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றிங்க.

  RépondreSupprimer
  Réponses
  1. வருகைக்கும், வளமான கருத்து பதிவிற்கும் நன்றிங்க! சகோதரி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. "நள பாகம் நாயகியர்கள்/நாயகர்களை அறிய தந்தமைக்கு நன்றி! நண்பரே...

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி! நண்பரே!.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 14. பல நேரங்களில் சுயம்பாகத்தின்போது கைகொடுப்பது நம் நாயகன்/நாயகியர்தாம்!

  RépondreSupprimer
  Réponses
  1. கை கொடுத்த நள பாகம் நாயகர்/நாயகிகளை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 15. எல்லாஅ நளபாகம்நாயக நாயகியர்க்க்கு வாழ்த்துகள்! பொறுமைக்கு பாராட்டுகள்!

  RépondreSupprimer
 16. வாருங்கள் ஆசானே!
  இந்த வளர்ச்சி! தங்களது ஊக்கத்தால், உன்னதமான பின்னூட்டத்தால் வந்தது.
  நன்றி அய்யா!
  பொறுமையாக காத்திருக்கிறேன். வாருங்கள் வந்து விலைமதிப்பில்லாத கருத்தினை தாருங்கள் அய்யா!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer