mardi 2 février 2016

"அறிஞர் அண்ணாவின் கருத்தோவியம்"


தமிழ்
" தமிழ் இனியது, அழகியது, ஆற்றல் மிக்கது, வற்றாத ஊற்றான சொற்செறிவும் , பொருட்செறிவும், நாகரிக நயமும், நேர்த்தியும் கொண்டது. அது தொன்மையானது, தூயது! என்றும் அழியாத வியத்தகு சீரிளமைத் திறன் உடையது!".
உலகம்
" எல்லாப் புத்தகங்களையும் விட  சிறந்த புத்தகம் இந்தப் பரந்தஉலகம்தான் உலகத்தைவிட உன்னதமான புத்தகம் வேறு கிடையாது

ஆட்சி
"மலர் விரிந்தால் மணம்வீசத்தான் செய்யும்.
 மேகங்கள் கூடினால் மயில் ஆடத்தான் செய்யும்.
தென்றல் வீசினால் குளிர்ச்சி ஏற்பட்டுத்தான் தீரும்.
அவை போல ஆட்சி அலங்கோலமானால் மக்கள் கண்டிக்கத்தான் செய்வர்".
சட்டம்
"சட்டம் ஒரு இருட்டறை ! அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு! அந்தப் பிரகாசமான விளக்கை ஏழையால பெற முடிவதில்லை!"


 நற்சிந்தனை
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்"
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல, நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.
பகிர்வு:
புதுவை வேலு

14 commentaires:

  1. அருமையான சிந்தனைகள்...
    அவை போல ஆட்சி அலங்கோலமானால் மக்கள் கண்டிக்கத்தான் செய்வர்".// இப்போது மக்கள் கண்டிக்கவே இல்லையே...வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்களே.

    சட்டம் சிந்தனை மிகவும் யதார்த்தம் இன்றளவு...

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    RépondreSupprimer
    Réponses
    1. வேதனையில் வாடும் வேடிக்கை மனிதர்களை அடையாளப் படுத்தி விட்டீர்கள் அய்யா.
      வருகை சிறப்பு நன்றி ஆசானே.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. அறிஞர் அண்ணாவின் தத்துவங்கள் அனைத்தும் மனித வாழ்வுக்கு மேம்படக்கூடிய நல்ல விடயங்களே

    இருப்பினும் இன்று கூத்தாடிகளின் கையில் ஆட்சி பொம்மையாகிப் போனதற்கு அடிப்படை காரணம் இவர்தான் என்பதை மறக்க முடியவில்லை நண்பா.

    RépondreSupprimer
    Réponses
    1. மனித வாழ்வுக்கு மேம்படக்கூடிய நல்ல விடயங்களை சொன்னவரை போற்றியமைக்கு நன்றி நண்பா.
      மற்ற விடயங்கள் யாவும் வாக்கு வங்கியின் முதலீடாகும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  3. அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று, அவரது பொன்மொழிகளை பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்திய தங்களோடு நானும் கலந்துகொள்கிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது அஞ்சலி தமிழுக்கு பெருமை சேர்க்கட்டும்.
      நன்றி அய்யா.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. எல்லாமே அருமையான சிந்தனைகள்!
    த ம 5

    RépondreSupprimer
    Réponses
    1. சிறகடித்து பறந்து வந்து சிறப்பான கருத்தினை பதிவு செய்த நண்பருக்கு
      நன்னன்றி.
      வருகை சிறப்புற வேண்டுகிறேன்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. சிறப்பான வருகையின் மூலம்
      சிறப்பான பகிர்வு பாராட்டியமைக்கு
      நன்றி நண்பரே,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அன்பு நண்பருக்கு வணக்கம்!
    அண்ணாவின் நினைவு நாளைச் சிறப்பாக நினைவு கூர்ந்து இருக்கிறீர்கள்!
    பாராட்டுகள்!

    அண்ணா
    - அடுக்கு மொழியின் பிறப்பிடம்
    - மிடுக்கு நடையின் இருப்பிடம்...என
    அடுக்கிகொண்டே போகலாம்.

    பிறர் கூற்றுகளையும் தன் கூற்றாக்கிச் சொல்லியவர் ;
    முதலில் சொல்லியவர் யார் என்ற மூலத்தை
    மறந்தும் சொல்லியறியாதவர் !
    விளைவு -
    'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'
    இப்படை தோற்கின் எப்படை செயிக்கும்?'...
    போன்றவை எல்லாம் அண்ணா சொன்னவை என்றே இன்று வரை வழங்குகின்றன!

    அன்புடன்
    பெஞ்சமின்


    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் பேராசிரியர் அய்யா,
      வருகைக்கும், நெறிப் படுத்தும் கருத்தினை தந்து சிறப்பித்தமைக்கும் சிறப்பு நன்றி
      அண்ணாவைப் பற்றிய அறியாத செய்தி தங்களது பதிலுரையில் அறிந்தேன் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பயனுள்ள நல்ல சிந்தனைகள், உரிய நாளில்.

    RépondreSupprimer
  8. வருகைக்கும், வளப்படுத்தும் கருத்தினை தந்தமைக்கும் நன்றி முனைவர் அய்யா
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer