samedi 20 février 2016

" தாய் மொழி தினம்".




இந்த இனிய நாளில் நா மகளின் நா வின் நாதத்தை இசைத்து, பெருந்தொண்டாற்றி வரும்
திரு சுப்பு தாத்தா வின் காந்தக் குரலில்,
புதுவை வேலு  இயற்றிய, பாடலை க் கேட்டு
செவிஇன்புற்று மகிழ்ந்தேன்! 


புதுவை வேலு  இயற்றிய,

"உலகத் தாய் மொழி" கவிதையை உலகறிய செய்தமைக்கு திரு சுப்பு தாத்தா அவர்களுக்கு மிக்க நன்றி! 

தமிழ் வாழ்க!




அன்னை அருளிய அன்பு மொழி
விண்ணைத் தாண்டிய ஆசை மொழி
மண்ணின் மாண்பை போற்றும் மொழி
உருவம் வெல்லும் உலகமொழி!


அருகும் மொழி போல் ஆகாது !
பருகும் மொழி போல் பயின்றிடுவோம்
உருகும் உணர்வின் உதய(ம்) மொழி
பெருமை பேசிட செய்திடுவோம்!


தாய் மண்ணே வணக்கம் என்போம்
தாய் மொழி இணக்கம் கொள்வோம்
தாய் மொழி பற்றுக் கொள்வோம்
தமிழ்மொழி கற்று வெல்வோம்!


புதுவை வேலு


"சுவாசமே! தமிழ் நேசமே!"






அன்னை அளித்த அமுத மொழி
கண்ணின்  இமையாய் காக்கும் விழி
மண்ணின் எல்லை மொழியின் வழி
மாண்புடன் சொல் வராது பழி

வாழ்வாங்கு வாழ்ந்திடவே வழி செய்வோம்
வீழாது விண்புகழ் எய்திடவே  செய்வோம்
தாழாது தழைத்து வளர்த்திடவே செய்வோம்
புகழேந்தி மொழி செழித்திட  தவம்செய்வோம்

உலகம் போற்றும் வளர்த் தமிழ்மொழியை
திலகமிட்டு வணங்கிவாழ்த்தினைப் பெறுவோம்
வாய்மொழி வாழி ! திருவாய்மொழி வாழி !
தாய்மொழி  வாழி ! தமிழ் மொழி வாழி !

புதுவை வேலு
















































19 commentaires:

  1. அருமையான தாய்மொழி கவிதையும் அதை இசையாக பாடிய சுப்பு தாத்தாவுக்கும் பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்!
    த ம 1

    RépondreSupprimer
  2. உங்களுக்கும் சுப்பு தாத்தாவுக்கும் வாழ்த்துகள்!

    RépondreSupprimer
  3. கவிதை அருமை நண்பா வாழ்த்துகள் தாத்தாவுக்கும்.

    RépondreSupprimer
  4. ஊரில் இல்லாததால் உடனே கருத்திட இயலவில்லை. கவிதை படைத்த தங்களுக்கும் அதை இசைத்த சுப்பு தாத்தா அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

    RépondreSupprimer
  5. அய்யா தாய்மொழிபோற்றும் உங்கள் வலைப்பக்கத்தை எனது இணைப்பில் சேர்த்திருக்கிறேன். நன்றியும் வணக்கமும். த.ம.6

    RépondreSupprimer
  6. நண்பா பதிவுகள் என்னாயிற்று வாருங்கள் விரைவில்.

    RépondreSupprimer
  7. நண்பரே நலமா ? பதிவுகள் வருவதில்லையே காரணம் என்ன ?

    RépondreSupprimer
  8. வணக்கம்
    தொடர்ந்து எழுதுங்கள் தோழர்..
    சுப்புத் தாத்தாவிற்கு வாழ்த்துகள்

    RépondreSupprimer