mercredi 24 août 2016

"வா! கண்ணா வா!"



அடியார்க்கு அடியார்க்கு அடி யராகி
அருஞ் சேவை ஆற்றும் அன்பர்க்கு
ஆலிலைக் கண்ணா அருள் செய்
ஆயர்பாடிக் கண்ணா அமுது செய்!

அமுது செய்ய அடியெடுத்து வருவாயோ?
அச்சுமலர் பாதம் பதித்து மகிழ்வாயோ?
அழகு மயில்பீலி சூடிய மணவாளா
அகிலம்
அகம்மகிழ வா! கார் வண்ணா!

கார்வண்ண மேனி மணிவண்ணா!
கவர்ந்திழுப்பாய்  கோபியரை கோவிந்தா
குருவாயூரில்  குடியிருப்பாய்  மாதவா
குறையொன்றும் இல்லாத கீதை நாயகா! 

நாயகா யதுகுல நந்த கோபாலா
நலம் தருவாய்  மாய மதுசூதனா
நாலாயிர திவ்விய பிரபந்தம்- ராசலீலா
நாராயண நம்பியின் புகழ்
பாடும்

பாடும் பாவைத் தமிழ் தந்த கோதை
சூடும் மலர் மாலை தரித்த பரந்தாமா!
காரிருள் நீக்கும் கதிரவனாய் கண்ணா
பேரருள் புரிய
வா! கலியுகக் கண்ணா!

புதுவை வேலு

10 commentaires:

  1. ஆகா.. வெகு நாட்களுக்குப் பிறகு இனிய பாடலுடன் அழகான பதிவு..

    வாழ்க நலம்!..

    RépondreSupprimer
  2. நன்னன்றி நானுரைத்தேன் நல்லவருக்கு
    நாமகள் நமக்கருளிய நற்றமிழின்
    நற்சொல் நறுந்தேனில் நனைத் தெடுத்து
    வாழ்க நலம் ஐயா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  3. அந்தாதி முயற்சியா வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்னன்றி நானுரைத்தேன் நல்லவருக்கு
      நாமகள் நமக்கருளிய நற்றமிழின்
      நற்சொல் நறுந்தேனில் நனைத் தெடுத்து
      வாழ்க நலம் ஐயா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாழ்த்துப்பாவுடன் வந்திருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே!
    த ம 2

    RépondreSupprimer
    Réponses
    1. நன்னன்றி நானுரைத்தேன் நல்லவருக்கு
      நாமகள் நமக்கருளிய நற்றமிழின்
      நற்சொல் நறுந்தேனில் நனைத் தெடுத்து
      வாழ்க நலம் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வெகு நாட்களுக்கு பிறகு அழகான பாடலை கொடுத்திருக்கும் சகோவுக்கு வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  6. நன்னன்றி நானுரைத்தேன் நற்சகோதரிக்கு,
    நாமகள் நமக்கருளிய நற்றமிழின்
    நற்சொல்! நறுந்தேனில் நனைத் தெடுத்து!
    வாழ்க நலம் சகோதரி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. அருமை. நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பக்கத்தில் பகிர்வு. தொடர வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  8. வாழ்த்தினை வடித்த தலைநகரத்து தலை சிறந்த நண்பருக்கு நன்றி! தொடர்க!

    RépondreSupprimer