அமுத மொழி பேசி அழைக்கின்றான்
ஆனந்த குழலெடுத்து ராக- ராதாவை!
தடாகம் தகதகக்க தவிக்கின்றாளோ?
தாமரையாய் தளிர்மேனி ராதை!
ராதையின் நெஞ்சமே! - என்றும்
கண்ணனுக்கு சொந்தமே!
'குழலின்னிசை' மயக்கத்தில் மயங்குகிறாள்!
குளிக்கையிலே! குலமகள் ராதை !
இதழின் வழியே இரவு விடியலை!
இதமாய் இசைக்கிறான் கண்ணன்
பட்டாம் பூச்சிகள் பரவசத்தில் பறந்து
தட்டாது சொல்லும் ராதையின் காதலை!
செவ்விதழில் செந்தேனிசை இசைக்கின்றான்
செம்மணலில் பெய்த மழையாய் காதலை!
-புதுவை வேலு
அருமை நண்பா இசைக்கட்டும் தொடர்ந்து.....
RépondreSupprimerஇசை நாடி
Supprimerஇன்ப நாடி
மிசைஎழிலோடு
தேன் கருத்து தந்தமைக்கு நன்றி நண்பா
ரசித்தேன்...
RépondreSupprimerபார்த்தேன்
Supprimerரசித்தேன்
பக்கம் வந்து கருத்தை
வார்த்தேன் என்றீர்!
இனிய நண்பருக்கு நன்றி!
அழகான வரிகளுடன் ’அமுத மொழியின் ஆனந்த ராகம்’ நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
RépondreSupprimer//ராதையின் நெஞ்சமே! - என்றும்
கண்ணனுக்கு சொந்தமே!//
கண்ணன் நம் எல்லோருக்கும் சொந்தமே ! :)
அனைவருக்கும் சொந்தமானவன்
Supprimerஆனந்த கிருஷ்ணன்.
ஆம் ஐயா!
நற்கருத்து! நலம்! நன்றி!
குழலின்னிசையில் நாங்களும்தான் மயங்கிவிட்டோம்.
RépondreSupprimer
Supprimerஆனந்த கானம்
அன்பின் வேதம்
மயக்கும் இசையில் மயங்கிய கருத்தோ மகிமை!
கவிதையினப் படிக்கப் படிக்க
RépondreSupprimerஅந்த இரம்மியமான சூழல்
எமக்குள்ளும்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Supprimerஅற்புதம்! ஆனந்த கருத்தை அள்ளித் தந்தமைக்கு நன்றி ஐயா!
"ராதையின் நெஞ்சமே! - என்றும்
RépondreSupprimerகண்ணனுக்கு சொந்தமே!" என
அருமையாகச் சொன்னீர்கள்!
அற்புதம்! ஆனந்த கருத்தை அள்ளித் தந்தமைக்கு நன்றி ஐயா
Supprimer