mardi 6 juin 2017

"ஒரே தேசம் ஒரே வரி"



அந்தி மழை பெய்தாலும்
மந்திமகன் ஓதுங்க மாட்டேன்
பந்திபோட்டு காய் கறியை
முந்தி விக்காமல் போகமாட்டேன்!

தொந்தி பார்த்து தோழர்களே!
தொந்தரவு செய்யாதீர்!
காலணியை வீசி யெந்தன்
கவனத்தை சிதைக்காதீர்!

உழவர் சந்தையிலே!
உழவனுக்கு வேலையில்லை
உழுத நெல்லுக்கு விலை வைக்க
வாழும் நாட்டில் உரிமை இல்லை

பச்சை காய்கறிகள்..
பாட்டி வைத்திய நெறிமுறைகள்!
பக்குவாய் சொல்லுத் தாரேன்
பக்கத்தில் வந்து கேளுங்களேன்!


ஒரே தேசம்! ஒரே வரி!
என்று சொல்லி!
நன்றே பாடு ராமா!
வென்று ஆடு ராமா!
என்று கூறுங்களேன்.

-புதுவை வேலு!




17 commentaires:

  1. இரசித்தேன் நண்பா

    RépondreSupprimer
  2. தாவி வந்து
    தன் கருத்தை
    தங்கத் தட்டில்
    தந்து விட்டு
    சென்ற நண்பா!
    தரணியிலே சிறப்போடு
    நீ வாழ்க!

    RépondreSupprimer
  3. அருமையான கவிதை. ஒரே வரி இருத்தல் நல்லது தானே நாட்டுக்கு!

    RépondreSupprimer
    Réponses
    1. தனி வரி அல்ல தனிமரமே!
      பொது வரி இதுவே
      பொது நல்மே!

      நல்வருகைக்கு நனி நன்றி நண்பரே!

      Supprimer
  4. படம் தந்த கவிதை
    அருமையிலும் அருமை
    மிகவும் இரசித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. நல் வருகை
      சொல் வண்ணம் அருமை

      நன்றி ஐயா

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா
    ஒவ்வொரு வரிகளையும் இரசித்து படித்தேன் மிக அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. கவிதை
      ஒவ்வொரு வரியை ரசித்து படிப்போம்
      அரசின்
      ஒவ்வொரு வரியை செலுத்தி பார்ப்போம்
      நன்றி நண்பரே!

      Supprimer
  6. "உழவர் சந்தையிலே!
    உழவனுக்கு வேலையில்லை
    உழுத நெல்லுக்கு விலை வைக்க
    வாழும் நாட்டில் உரிமை இல்லை" என
    வரும் வரிகள் உள்ளத்தில் உறைக்க
    நாடு எங்கே பயணிக்கிறது?

    RépondreSupprimer
    Réponses
    1. உலகம் ஏர்வழி சென்றால்
      திலகம் தீர்க்க சுமங்கலி ஆகும்
      நன்றி ஐயா!

      Supprimer
  7. Réponses

    1. அருமை கருத்து
      அருங்கனியாய்
      புசித்தேன்!
      நன்றி நண்பரே!

      Supprimer
  8. இந்த ஒரே வரி புரியாத ஒன்றாக இருக்கிறதே

    RépondreSupprimer
    Réponses
    1. தெரியாத பொருளுக்கு
      புரியாத வரி
      அறியாத அரசுக்கு
      அதுவும் வரி?
      ஆம் ஐயா!

      Supprimer
  9. அருமையான கவிதை சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய வருகை
      இன்பம் பயக்கும்
      இனிய கருத்து
      இதயம் உவக்கும்
      நன்றி சகோ!

      Supprimer
  10. படத்தை பார்த்த உடன் ''உழவனுக்கு நியாயம் கேட்டு சந்திக்கு வந்து விட்டது மந்தி '' என்றுதான் தோன்றியது. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer