samedi 17 juin 2017

இப்படியும் சிலர்



தலைப்பு: இப்படியும் சிலர்


வானம் ஏறி வைகுண்டம் போவதற்கு
வழி  யறிவேன் என்பார் சிலர்


ஊழல் ஊஞ்சல் உற்சவத்திற்கு
உபயதாரராக உள்ளார்கள் சிலர்


ஒவ்வாத காதல் செய்து
ஓர் கொலையும் செய்வார் சிலர்



துப்புரவு செய்ய வேண்டின்
துப்பிய பின்பு துடைப்பார் சிலர்


இருண்ட வானத்திற்கு
வெள்ளையடித்தேன் யென்பார் சிலர்


பன்னாட்டு வங்கியில்
பண(ம்) நாட்டாமை யானர்கள் சிலர்



அரசியலை ஆயுத எழுத்தாக்கி...
ஆஸ்திக்கு  ஆயுள் விருத்தி  செய்வார் சிலர்






ஆதரவற்றோர் ஆசிரமத்தில்
அன்னை தந்தையரை விடுவார் சிலர்


சட்டம் என்னும் இருட்டறையில்
வெளிச்சத்தோடு வாழ்வார் சிலர்


தமிழ்ப் பட்டறையில் தமிழே!
அமுதை பொழியும் நிலவென்பார் சிலர்


குருதி தந்து - மனிதர்
இறுதியாத்திரையை தடுப்பார் சிலர்


மது அரக்கனை அழிப்பதற்கு
மல்லுக்கட்டி நிற்பார் மங்கையர் சிலர்


அதிகாரம் யாருக்கு என்று!
அக்கப் போர் செய்வோர் சிலர்


ஒரே தேசம் ஒரே வரி
ஒப்புதலை தருவார் சிலர்


உழவர் உலகம் உவகையில்
உழல வேண்டுமென்பார் சிலர்


தமிழ்த் தேர் வடம் பிடித்திழுத்து
தரணியில் வலம்வருவோம் யென்பார் சிலர்

-புதுவை வேலு

10 commentaires:

  1. இரசித்தேன் நண்பா உண்மைகளை...

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே!
      தங்களுக்கு,
      நன்றி சொல்லி மகிழ்கின்றேன்

      Supprimer
  2. இப்படிப் பட்ட ஒரு சிலர்தான் ,பலருக்கும் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் :)

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே!
      தங்களுக்கு,
      நன்றி சொல்லி மகிழ்கின்றேன்

      Supprimer
  3. இப்படி சிலர் அல்ல பலராகப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்! 'ஒவ்வாத காதல் செய்து' வரி இரண்டு முறை வந்திருக்கிறது ஜி!

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே!
      தங்களுக்கு,
      நன்றி சொல்லி மகிழ்கின்றேன்

      Supprimer
  4. Réponses
    1. நண்பரே!
      தங்களுக்கு,
      நன்றி சொல்லி மகிழ்கின்றேன்

      Supprimer
  5. .வணக்கம்
    ஐயா

    சொல்லியது உண்மைதான் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே!
      தங்களுக்கு,
      நன்றி சொல்லி மகிழ்கின்றேன்

      Supprimer