dimanche 2 juillet 2017

நன்றியுடன் நாமாவோம்



நாலடியில் நற்றமிழில் சொல்லெடுத்து நற்கவிதை :-



உள்ளம் சிலிர்க்குது
வெல்லமாய் இனிக்குது
'ஒற்றுமை' ஓர் குடையில்
...
ஓங்கி ஒதுங்கி ஒலிக்குது.




மழை நடத்தும்
சமத்துவப் பாடம்
நனையாது கேட்கிறார்
நன்றி யாளராடு!



இயற்கை மழை
கொடை தந்தது!
இதயங்கள் ஓர் குடையில்
இணைந்து நின்றது.



நன்றி!
நாயின் நற்குணம்
வென்றிடும் !
இளஞ்சிறார் நல்மனம்.



உயிர் விதைக்கும்
சமத்துவப் பயிர்கள்
காக்கின்றது
கறுப்புக் குடை!



ஆனந்த மழை பொழியுது
அன்பு மழை மொழியுது
ஆராதணை அழகு மிளிருது
ஆதரவுக் கரம் துளிருது!



குணம் குடையானது
மனம் கோபுரமானது
இனம் வேறுஆயினும்
அன்பு பொதுவானது.



தாலாட்டும் மழையும்
கோலாட்டம் போடுதோ?
வாலாட்டும் நாயும் 
பூந்தளிரோடு நட்புக்கூடுதோ?



சூழ்ச்சியற்ற சுடர் மழை
சூழ வலம் வந்து -குடையுடன்
தாழாத தத்துவப் பாடம்
தகைமையோடு நடத்துதப்பா!



நன்றியுடன் நாமாவோம்
நட்புக்குள் பூவாவோம்
நல்லோருடன் நாமாவோம்
ஐப்பூதம் நாயகன் அருளோடு!!!
  


-புதுவை வேலு








11 commentaires:

  1. // இனம் வேறுஆயினும்
    அன்பு பொதுவானது... //

    ஆகா....!

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை ரசித்தமைக்கு நனி நன்றி! நண்பரே!

      Supprimer
  2. புந்தளிரோடு = பூந்தளிரோடு

    தத்திவப் பாடம் = தத்துவப்பாடம்

    கவிதையை ரசித்தேன். நானொரு நாலுகால் நேசன்!

    RépondreSupprimer
    Réponses
    1. பிழை நீக்க பேருதவி புரிந்தமைக்கு
      பெரும் நன்றி நண்பரே!
      இனி இவ்வாறு நிகழாது பார்த்துக் கொள்கிறேன்.
      கவிதையை ரசித்தமைக்கு நனி நன்றி! நண்பரே!

      Supprimer
  3. கவிதையினைக் கண்டோம், மகிழ்ந்தோம். நன்றி.

    RépondreSupprimer
  4. கவிதையை ரசித்தமைக்கு நனி நன்றி! நண்பரே!

    RépondreSupprimer
  5. நான்கு வரிகளில் நறுக்கான கவிதைகள்! இரசித்தேன்!

    RépondreSupprimer

  6. கவிதையை ரசித்தமைக்கு நனி நன்றி! நண்பரே!

    RépondreSupprimer
  7. நறுக்கான நான்கு வரிகளில் - நன்றே
    சிந்திக்க வைக்கிறியளே!

    RépondreSupprimer
  8. நனி நன்றி! நண்பரே!

    RépondreSupprimer
  9. குடையினால் தடுத்தாலும் அந்த நன்றியுள்ள ஜீவன் அன்பினால் நனையுது கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer