தமிழ்
" தமிழ் இனியது, அழகியது, ஆற்றல் மிக்கது, வற்றாத ஊற்றான சொற்செறிவும் , பொருட்செறிவும், நாகரிக நயமும், நேர்த்தியும் கொண்டது.
அது தொன்மையானது, தூயது! என்றும் அழியாத வியத்தகு சீரிளமைத் திறன்
உடையது!".
உலகம்
" எல்லாப் புத்தகங்களையும் விட சிறந்த புத்தகம் இந்தப் பரந்தஉலகம்தான் உலகத்தைவிட
உன்னதமான புத்தகம் வேறு கிடையாது
ஆட்சி
"மலர் விரிந்தால் மணம்வீசத்தான் செய்யும்.
மேகங்கள்
கூடினால் மயில் ஆடத்தான் செய்யும்.
தென்றல் வீசினால்
குளிர்ச்சி ஏற்பட்டுத்தான் தீரும்.
அவை போல ஆட்சி
அலங்கோலமானால் மக்கள் கண்டிக்கத்தான் செய்வர்".
சட்டம்
"சட்டம் ஒரு இருட்டறை ! அதில் வக்கீலின் வாதம் ஒரு
விளக்கு! அந்தப் பிரகாசமான விளக்கை ஏழையால பெற முடிவதில்லை!"
நற்சிந்தனை
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்"
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
வைரம் ஜொலிக்க
வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க
வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல, நல்வாழ்வு பெற வேண்டுமானால்
நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.
பகிர்வு:
புதுவை வேலு
புதுவை வேலு








