ஆசையே அழிவுக்கு அஸ்திவாரம்
இரண்டு
தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும்
வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின்
கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.
சிறிது
நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை
நுழைத்தது.
கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு,
“குருவி அக்கா. எங்கள்
வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக்
கேட்டுக்கொண்டது.
“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்.
இனிமேல்
இது என் வீடு.
நான் இதை விட்டுப் போகமாட்டேன்”
என்று குருவி மறுத்து விட்டது.
தூக்கணாங்குருவி
அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.
சிட்டுக்குருவியோ, கூட்டில் மகிழ்ச்சியாய் இருந்தபடி கூவிக் கொண்டிருந்தது!
திடீரென்று
தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தன!
ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி
வந்து,
கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின.
கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.
முதலில்
சிட்டுக்குருவியின் கழுத்து,
அப்புறம் தலைமட்டும்,
கடைசியாக அலகு
என்று
தெரிந்துகொண்டே வந்து,
கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை.
தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை
கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.
சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே
பின்பு, மூச்சடைத்து இறந்து போனது.
அடுத்தவர் இடத்துக்கும் / பொருளுக்கும்
ஆசைப்பட்டால் இதுதான் கதி!
நீதி: உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! தத்துவத்தை போதிக்கும் நீதி
பகிர்வு
புதுவை வேலு
புதுவை வேலு
பட உதவி: இணையம்
சிம்பிளான கதை மூலம் பெரிய தத்துவத்தை புரிய வைத்திருக்கிறீர்கள். நன்றி நண்பரே!
RépondreSupprimerத ம 1
வாருங்கள் நண்பரே,
Supprimerதத்துவம் சொன்னல்தான் வருவீர்கள் போல் இருக்கிறது. இருப்பினும் தங்களது வருகையும், கருத்தும், இனிக்கின்றது நண்பரே.
மிக்க நன்றி! மீள் வருகை சிறக்கட்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல நீதிக்கதை. தற்காலச் சூழலுக்கும் சமுதாயத்திற்கு இது போன்ற கதைகள் அவசியம்.
RépondreSupprimerசாதிகள் பற்றி பேசப் படும் அளவுக்கு,
Supprimerநீதிகள் அதிகம் பேசப் படுவதில்லை என்பது
உண்மையே முனைவர் அய்யா.
நல் வருகை நல்லாதரவு, நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஆசையே அழிவுக்கு அஸ்திவாரம்!.. நல்லதொரு நீதி..
RépondreSupprimerவேண்டும்! வேண்டும்! ஆட்டம் காணாத விகையில் அஸ்திவாரம்.
Supprimerஅன்பு வருகைக்கும், ஆதரவுமிகு கருத்துக்கும் நன்றி அருளாளர் அய்யா.
நட்புடன்,
புதுவை வேலு
புதுவை வேலு
கதையையும ்அது சொல்லும கருத்தையும இரசித்தேன!
RépondreSupprimerரசித்து, புசித்து, நேசக் கருத்தை தந்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
தூக்கணாம் குருவி செய்தது சரிதான் இன்று பல மனிதர்கள் இப்படித்தான் ஐயா நல்ல நீதிக் கதை பகிர்வுக்கு நன்றி த.ம 2
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நதி நீராய் ஓடுதடி.:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீதிக்கு குரல் கொடுத்த கவிஞரின் குரலுக்கு குழலின்னிசையின் நன்றி.
Supprimerதங்கள் தளம் வந்து கருத்தினைத் தந்துள்ளேன் காண்க!
நட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு படிப்பினை தந்த கதைதான் நண்பா,
RépondreSupprimer"நல்லதொரு படிப்பினை தந்த கதைதான் நண்பா",
RépondreSupprimerநன்றி நண்பா,
வலைப்பதிவர் கையேடு
நகலை ( குழலின்னிசை இடம்பெற்ற பக்கம்) அனுப்பி வைத்தமைக்கு
மிக்க நன்றி.
நட்புடன்,
புதுவை வேலு
நல்லதோர் நீதிக்கதை. நன்றி.
RépondreSupprimerபயணச் சித்தரின் நயனமிகு நல்ல பாராட்டுக்கு நன்றி
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
நீதிக் கதை அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimerநீதிக் கதை அருமை! பாராட்டிய பண்புக்கு நன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
எளிமையான வரிகளில்
RépondreSupprimerஅருமையான கதை நண்பரே
நன்றி
தம+1
வாருங்கள் கரந்தையாரே,
RépondreSupprimerபோற்றுதலுக்குரிய கருத்தினை பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல குட்டிக் கதை சகோ.
RépondreSupprimerதம. கூ
மெட்டி ஒலி ஓசையோடு வந்து,
Supprimerகுட்டி நீதிக் கதை படித்தறிந்து,
தீட்டிய நல்ல கருத்து ,
ஊக்கத்தின் உயர் கருத்து சகோ.
நன்றி,
நட்புடன்,
புதுவை வேலு
Ce commentaire a été supprimé par l'auteur.
RépondreSupprimerகுட்டிக் கதையை தட்டிக் கொடுக்கிறேன் ... பேஷ் ..பேஷ் .. ரொம்ப நல்லா இருக்கு... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
RépondreSupprimer