lundi 9 février 2015

சிலேடைச் சிங்கம் கவி காளமேகப் புலவர்










07/02/2015 அன்று பாரிசில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்றிருந்தேன். அப்போது நடைபெற்ற நூல் வெளியீட்டின்போது லண்டனில் வந்திருந்த ஒருவர் பேசும்போது கூறுகையில்....

கவிச் சக்ரவர்த்தி கம்பன் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் "காமத்தை" பற்றியே  அதிகம்!
கூறுவான், ஆனால் வாய்மைப் புலவன் வள்ளுவனோ எழுதும்போதெல்லாம் கல்வியைப்
பற்றித்தான் எழுதுவான் என்று பேசி கைத்தட்டுதல்களை பரிசாக பெற்று அமர்ந்தார்.

அந்த வேளையில் எனது செவிகளில் சிலேடை சிங்கத்தின் கர்ஜனை  ஒலி  கேட்டது.

ஆம் அது கவி காள மேகப் புலவரின் கம்பனை மிஞ்சும்  சிலேடை பாடல்!


கட்டி தளுவுவதால் கால் சேர ஏறுவதால்

எட்டி பன்னாடை இழுத்ததால் -முட்ட போய்

ஆசைவாய் கள்ளை அருந்துதலால்  அப்பனையும்

வேசையென விரைந்து

அதாவது,

 பாடலிலே ஒரு விலைமாதையும், பனைமரத்தையும் சிலேடையாகப் பாடியுள்ளார்.


கட்டி பிடித்து மரத்தில் ஏறுவதாலும் அதேபோல் கால்களை பிணைத்து ஏறுவதாலும் ,மேலே சென்று மரத்தில் இருக்கும் பன்னாடைகளை இழுத்தாலும் .பின் அங்கே இருக்கும் கள்ளை ஆசையுடன் அருந்துதல் என்பதாகும். 

அழகுற பாடலை அமைத்த கவி காளமேகம்  சிலேடையாக கலவியல் இன்பத்தை இன்னொரு பொருள்படும் வகையில் இதே பாடலுக்கு பொருளாக தந்திருப்பார்.
(இலைமறைவாக பொருள் கொள்க)

காளமேகப் புலவர்,

கலைவாணியின் அருளைப்போற்றி  பாடிய ஒரு கவியோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன். நன்றி!







வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு

வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை

அரியாசனத்தில் அரசரோடென்னைச்

சரியாசனம் வைத்த தாய்.

புதுவை வேலு

27 commentaires:

  1. இலைமறைவு காய் மறைவாகப் பொருள் கொள்க என்று சூட்சுமமாகப் பதிந்துள்ளவிதம் நன்று. கலைமகளின் மீதான கவி சுருக்கமாக அழகாக உள்ளது.

    RépondreSupprimer
    Réponses
    1. முனைவர் அய்யா! முகம் சுளிக்காமல் முன்வந்து முதல் கருத்தினை பதிவிட்டமைக்கு
      பகர்கின்றேன் நெஞ்சார்ந்த நன்றியினை!
      கலைமகள் கவியை பாராட்டி கருத்தினை தந்தமை மிகச் சிறப்பு!
      வருகை தொடர வேண்டுகிறேன்!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. காளமேகப் புலவரின் சிலேடை பாட்டை பகிர்ந்தமைக்கு நன்றி. அவரது மற்ற மற்ற சிலேடைப் பாடல்களையும் தரலாமே?

    RépondreSupprimer
    Réponses
    1. காள 'மேகம்' சூழ்ந்ததுதான் கவிதை வானம் அய்யா!
      சிலேடை மழை சில்லென்று சிறப்புற பொழியும் இனி வரும் பதிவுகளில்!
      வருகைக்கு மிக்க நன்றி!

      நட்புடன்,
      ப்புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. வார்த்தைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்
      வாழ்த்தும் சித்தர் ஆகி கருத்துரை தந்தமைக்கு நன்றி!
      வருகை தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. நயம் பட உரைத்தீர்...

    RépondreSupprimer
    Réponses
    1. நயம் பாராட்டியதோடு நில்லாமல் கூகுள் பதிவிலும் கொண்டு சேர்த்த சகோதரி.உமையாள் காயத்ரி அவர்களுக்கு மிக்க நன்றி!
      மீண்டும் வருக! கருத்தினை புனைக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. கட்டி தளுவுவதால் கால் சேர ஏறுவதால்
    எட்டி பன்னாடை இழுத்ததால் -முட்ட போய்
    ஆசைவாய் கள்ளை அருந்துதலால் அப்பனையும்
    வேசையென விரைந்து

    இதனுள் பொதிந்த அர்த்தம் கண்டு வியந்தேன் நண்பரே...

    RépondreSupprimer
    Réponses
    1. சிலேடை சிந்திய பொருளை சிறப்புற அறைந்தமைக்கு மிக்க நன்றி நண்பா!
      வருகை தொடரட்டும் மீசை முறுக்குடன்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. தாங்களே சொல்லிவிட்டீர்களே.......சிலேடைச் சிங்கம் என்று .... மறுப்பவர் உண்டோ...???

    RépondreSupprimer
    Réponses
    1. சிலேடைச் சிங்கத்தின் அங்கத்தில் ஏறி அமர்ந்தமைக்கு நன்றி தோழரே!

      தோழமையுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ஒரு பாடலில் இரு பொருள்கள்
    அறிந்தேன் வியந்தேன் நண்பரே
    நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. சிலேடைப் பாடலின் கருப் பொருளை உணர்ந்து கருத்திட்ட கரந்தையார் அவர்களுக்கு
      மிக்க நன்றி!
      வருகை தொடரட்டும் நண்பரே!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. காளமேகப்புலவரின் சிலேடைகள் எல்லாமும் சிறப்புத்தான் சுவைபட பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் குழலின்னிசையின் குடும்ப நண்பரே!
      தங்களது வேலூர் பயணம் வெற்றியைத் தந்ததா?
      தளீரின் பசுமை வருகை கண்டு மகிழ்ச்சி!
      தங்களின் சுவைமிகு கருத்து சுகம்!
      வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம்
    ஐயா.
    பாடலின் பொருள் அறிந்தேன்... சிலேடை நயம்...இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் ரூபன் அவர்களே!
      பார்த்தீர்!
      ரசித்தீர்!
      குழலின்னிசை பக்கம் வந்து உரைத்தீர்!
      தங்களின் இனிய கருத்து இன்பத்தை தந்தது.
      வருகை தொடரட்டும் நண்பரே!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. ஒரு பாடலில் இரு பொருள்கள் இருப்பதை கண்டு வியந்தேன். என்னுடைய வலைப்பூவிலும் உறுப்பினராகி கருத்துக்களை சொல்லுங்கள்சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் சகோதரி!
      குழலின்னிசையில் இணைந்தமைக்கு மிக்க நன்றி!
      இதோ தங்களது வலிப் பூ வந்து சேர்கிறேன்!
      கற்கண்டு கருத்து இனித்தது. தொடர்க!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. காளமேகம் ... இன்றும் வாழ்கிறார்.

    RépondreSupprimer
    Réponses
    1. காளமேகம் ... இன்றும் வாழ்கிறார்.
      ஆம் தோழரே!
      தங்களது கருத்து மழை காள மேகம் பொழிய செய்தது அல்லவா?
      தொடர்ந்து வருகை புரிக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. சிலேடைச் சிங்கம் கவி காளமேகப் புலவர் கலைவாணியின் அருளைப்போற்றி பாடிய பாடல் அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vengadassamy

    RépondreSupprimer
  13. காமத்தில் கம்பனையிம் மிஞ்சிவிடும் பாடல்களை இரு வகையில் பொருள் கொள்ள செய்த கவி காளமேகத்தின் சிறப்பு கருத்து வரவேற்புக்குரியது நண்பரே!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. சிலேடைப் புலவர் காளமேகம் அவர்களின் இப்பாடலை மீண்டும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.

    RépondreSupprimer
  15. சிலேடைப் பாடலின் கருப் பொருளை உணர்ந்து கருத்திட்ட வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு
    மிக்க நன்றி!
    வருகை தொடரட்டும் நண்பரே!

    RépondreSupprimer
  16. அந்நஞ்சுண்ணி அக்காளை ஏறி அச்சங்கூதி செம்புடுக்கை ஆட்டும் என்ற பாடலின் முழு வடிவம் வேண்டும்

    RépondreSupprimer