jeudi 21 mai 2015

"பாக்கியவான் ஜி"

படம் சொல்லும் பாடம்


பாரதப் பிரதமர்

ல நாடு பயணங்கள்


ல்வேறு விமர்சனங்கள்


சொல்லேறு வல்லுனர்கள்வில்லேந்தி வினவியதெல்லாம்


வீணாகி போக வில்லை!


டம் சொல்லும் பாடத்தில்


விடை உண்டோ ?


புதுவை வேலு

பட உதவி: தினமலர்

18 commentaires:

 1. இந்தியப்பிரதமரின் வெளிநாட்டுப்பயணங்கள் பல்வேறு நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பதுடன், ஆங்காங்கே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, நம் நாட்டுக்கு பல கோடிக்கணக்கில் வருமானமும், வளர்ச்சிகளும், நீண்ட கால பயன்களும், நம் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும், படித்த நம் நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் உத்தரவாதம் தருவதாக அமையக்கூடியவை.

  அதைப்பற்றி ஆழமாக ஏதும் தெரியாமல்+புரியாமல், பாமர மக்களாகிய நாம் வாய் புளிச்சுதோ, மாங்காய் புளிச்சுதோ என இதுபோல கேலி செய்தல் தவறு என்பது என் தாழ்மையான அபிப்ராயமாகும்.

  RépondreSupprimer
  Réponses
  1. அன்புள்ள அய்யா!
   புரியாதவர்களுக்கும் புரியும்படியான கருத்தினை நெத்தியடியாக சொல்லி உள்ளீர்கள் ஏற்புடைய கருத்துக்களை ஏற்கின்றேன்! நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. ஆம் சகோ,
  நாம் படும் கஷ்டம் நீக்கும் அரசு என நினைத்தால் இங்கு எல்லாம் தலைகீழ். அவர் நல்லவரா? இவர் நல்லவரா? எவரும் இல்லையப்பா,,,,,,,,,,,,,,,
  கேள்விப்பட்ட வகையில் உலகம் முழுவதும் இவர் 2 வருடத்திற்குள் சுற்றிவிடவார். உண்மையான உலகம் சுற்றும் வாலிபர் இவர். நன்றி.

  RépondreSupprimer
  Réponses

  1. உலகம் சுற்றும் வாலிபர்
   இந்தியாவை சுற்றியுள்ள பின்னடைவுகளை
   முன்னெடுத்து சென்று சரி செய்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம் சகோ!
   வருகைக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. உலகம் சுற்றும் மோ(ச)டி இன்னும் ஒரு வருடத்தில் சாதனை படைப்பார் 80 நிச்சயம்
  தமிழ் மணம் 1

  RépondreSupprimer
  Réponses

  1. நண்பர் கில்லர்ஜி அவர்களே! தாங்கள்,
   மீசை துடிப்புடன் இட்ட கருத்து இதுவாகத்தான் இருக்கும் போலிருக்கு!
   வசை அதிகம்!
   வருகைக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. வணக்கம்
  நல்ல படத்துடன் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் . விதை விதைத்தால் இறுதியில் அறுவடை செய்தாக வேண்டும் பார்க்கலாம் த.ம2
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. கவிஞர் அவர்களே!
   அறுவடை நாளை அனைவரும் காண்போம்!
   அதுவரை அமைதியும் காப்போம்!
   நன்றி! நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. இந்த பகவான்ஜியால் கற்பனை உலகத்தை தான் சுற்றி வர முடிகிறது ,நிஜத்தில் உலகைச் சுற்றும் அவர் பாக்கியவான் ஜி தான் :)
  ஆகா ,நேற்று ,ஊமைக் கனவின் தலைப்பில் என் பெயர் ,இன்று நீங்களும் :)

  RépondreSupprimer
  Réponses

  1. பாக்கியம் பெறுவதற்கும் பகவான் அருளாசி வேண்டுமே!
   பகவான் ஜி!

   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. அருமையான, நல்ல செய்தி சொல்லும் அங்கதம் அழகான புகைப்படத்துடன். நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. அருமை பாராட்டிய முனைவர் அய்யாவுக்கு
   அன்பு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. நல்லதே நடக்க வேண்டும்! என்றே நம்புவோம்! நண்பரே!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 8. மாற்றத்துக்காக வந்த மனிதன். இன்னும் குறைந்தது 18 மாதங்கள் காத்திருக்க வேண்டும். நடப்பவை எதுவாக இருந்தாலும் அரசியலில் சகஜமப்பா. என்ன புதுவை வேலு அவர்களே சரியா ?

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. வருக! நண்பர் சத்தியா அவர்களே!
   அதிக பணிகளுக்கிடையேயும் தவறாது வந்து
   கருத்தினை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!
   தங்களது அரசியல் அரித்மேட்டிக் அபாரமா? அல்லது
   மக்களுக்கு பாரமா? எனபதை பொறுத்திருந்தே பார்க்க்கலாம்!
   ஒரு வருட ஊழலற்ற ஆட்சி அவர் தந்திருப்பதாக அவர்கள்
   கூறி வருகிறார்களே? அது குறித்தும் கூறி இருக்கலாம் அல்லவா?
   நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. காத்திருப்போம் நல்லது நடக்குமென்று. அப்படி நடக்காவிடில் இனி வருபவராவது நல்லது செய்வார் என நம்புவோம்!

  RépondreSupprimer
 10. அன்புள்ள அய்யா!
  காத்திருப்போம்! வரும் காலங்களில் நாட்டு மக்கள் நலம் பெறுவார் என்ற எண்ணத்தோடு!
  வருகைக்கு நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer