dimanche 24 mai 2015

" நல்லதை நாடு கேட்கும்!"

 



ஒரு பணக்காரருக்கு தீராத வயிற்றுவலிவந்தது. வைத்தியம் பலன் அளிக்காததால்,
தங்கள் ஊருக்கு வந்த சாமியாரிடம் சென்றார்.
பகவான் ஜி!  விஷயம் இப்படி!
நீங்கள் தான் இது குணமாக வழி சொல்ல வேண்டும், என்றார்.

தம்பி! உன் வயிற்று வலிக்கு காரணம் கண்கள். எனவே, நீ பார்க்கும் பொருள்களை எல்லாம் பச்சை வண்ணமாக செய்து கொள். குணமாகி விடும்.
 அடுத்த வாரம் வந்து பார்க்கிறேன், என்றார்.

பணக்காரர் ஊரில் இருக்கும் எல்லா பெயின்டர்களையும் வரவழைத்து, வீட்டிலுள்ள நாற்காலி, கட்டில், சுவர், பாத்திரங்களில் கூட பச்சை வண்ணத்தை பூசச் சொல்லி விட்டார். ஏதேச்சையாக!
ஒரு வழியாக அவரது வலியும் குறைந்து விட்டது.

அடுத்த வாரம் சாமியார் அங்கு வந்தார்.  அப்போது பத்து பேர் பச்சை வண்ண டின்களுடன் ஓடி வந்தனர்.
சாமி! பணக்காரரை பார்க்கவா போறீங்க!
ஆமாம்... ஏனப்பா கேட்கிறீர்கள்?
கொஞ்சம் நில்லுங்க!

உங்க அங்கி சிவப்பா இருக்கு. அதை இந்தபச்சை வண்ணத்தாலே மறைத்து விடுகிறோம், எனச் சொல்லி அவர் மீது பச்சை வண்ணத்தை வாரி இறைத்தனர். சாமியாருக்கு கோபமான கோபம்.
நேரே செல்வந்தனிடம் சென்றார்.

முட்டாளே!
பார்க்கும் இடமெல்லாம் பசுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான்
பச்சையாக இருக்கட்டும் என்றுசொன்னேன்.
உன்னால் இந்த பூமிக்கும், வானத்துக்கும் பச்சை வண்ணத்தை பூச முடியுமா!
வண்ணத்துக்காக ஆயிரக்கணக்கில் செலவழித்த நீ,
ரூபாய்க்கு இரண்டு "பச்சைக் கலர் கண்ணாடி"  வாங்கிப் போட்டிருந்தால்,
நீ! பார்க்கும் இடமெல்லாம் பச்சையாகத் தெரிந்திருக்குமே!

இது கூடவா உன் மர மண்டைக்கு ஏறவில்லை, என்றார்.


இந்த பணக்காரரைப் போல,
சிலர்! பல குறைகளை வைத்துக் கொண்டு உலகத்தை சீர்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
அவர்கள் அனைவரும், தம்!  தவறை திருத்திக் கொண்டாலே போதும்!
உலகமும் ஒருநாள் திருந்தும்.
எனவே!
நல்லதை நாடு கேட்கும்! என்பதைப் போல! நல்லதையே 
நாம் நினைப்போம்! நலங்களை நாம் பெறுவோம்!

பகிர்வு:

புதுவை வேலு

நன்றி: தினமலர்

33 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.
    உண்மைதான் நல்ல கதை வழி அனைவரையும் விழிப்படைய வைத்துள்ளீர்கள் அதிலும் இறுதியில் சொல்லி முடித்த விதம் நன்று...த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் கவிஞரே!
      முதல் வருகை முதல் வாக்கு
      இதமான கருத்து இன்பம் பயத்தது!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நல்லதையே நினைப்போம் நண்பரே
    நன்றி
    தம 2

    RépondreSupprimer
    Réponses
    1. நல்லதை நினைத்ததால்தான் தாங்கள்
      நாடு போற்றும் நல்ல பதிவாளரை/படைப்பாளரை
      சகோ. மகேஸ்வரி பாலச்சந்திரனை வலை உலகிற்கு வழங்கி உள்ளீர்கள்!
      வாழ்த்துகள் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அழகான கதை. சுருக்கமாக, அதே சமயம் நல்ல செய்தியைத் தந்தது.

    RépondreSupprimer
    Réponses
    1. முனைவர் அய்யாவின் முத்தய்ப்பான கருத்துரைக்கு,
      முழு நிலவாய் ஒளி வீசும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. இந்த பதிவை யாரேனும் தவறாக புரிந்துகொள்ளாமல் இருந்தால் சரி.

    RépondreSupprimer
    Réponses
    1. பார்க்கும் பார்வையின் பிழையே! அதுவாகும்! அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. உதாரணம் சிறப்பை வாக்கு தோரணம்
      கட்டி வரவேற்ற வார்த்தைச் சித்தருக்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. என்ன செய்வது..முட்டாப் பயல்களைத்தானே காசு பணக்காரனாக்கிறது

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மைதான் தோழரே!

      முக்கால்வாசி முட்டாளை-பணம்
      முழுவாசி ஆக்கி விடும்!

      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. கதையும் கருத்தும் நன்று!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்று என்னும் விதை விதைத்தீர்
      வென்று அதை மகிழவே அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses
    1. நல்ல கதை என்று நற்சான்றிதழ் நல்கிய நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. பச்சை பச்சையான ஓர் நகைச்சுவை கலந்த கதையை இச்சையுடன் இன்று மீண்டும் படித்து இன்புற்றேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. கோகுலத்து பசுக்கள் எல்லாம் கோபாலன் கதையைக் கேட்டு நான்குபடி பால் கறந்ததை போன்றதொரு மகிழ்வு!
      அய்யா!
      பசுமை நிறைந்து நிற்கும் தங்களது பின்னூட்ட கருத்தினை கண்டபோது! தொடருங்கள்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. இதைதான் லேட்டரல் திங்கிங் என்பார்கள். தரமான கட்டுரை. எழுதிய உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பு நண்பர் காரிகன் அவர்களுக்கு,
      "இசைக் களஞ்சியம்" இன்று
      குழலின்னிசை நாடி வந்து
      பாராட்டு இசை வாசித்தமைக்கு நன்றி!
      "குழலின்னிசை" மேலும்,
      தன்னை தகுதி படைத்துக் கொள்ள
      இந்த பாராட்டானது உதவும் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. நல்ல கதை, நாம் விழிப்படைந்தால் அனைத்தும் நலமாக இருக்கும் என நினைப்போம். நன்றி.

    RépondreSupprimer
  12. நன்றி சகோ!
    விழிப்படைவோம்!
    பழிப்பின்றி வீழாது வாழ்வோம்!
    தங்களது பணி நனிபோல் சிறப்புற்று வாழ்க!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. கதையின் வழியே நல்லதொரு வாழ்க்கைப்பாடம் கற்றுக்கொண்டேன் நண்பரே..
    தமிழ் மணத்தில் நவரத்தினமாய் ஜொலிக்கட்டும்.

    RépondreSupprimer
    Réponses

    1. கருத்திட்டமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. நல்ல விழிப்புணர்வு கதை சகோ.

    RépondreSupprimer
    Réponses

    1. கருத்திட்டமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. நாட்டுக்குத் தேவை நல்லவை
    ஆகையால்
    நல்லதை நாடு கேட்கும்
    அருமையான பதிவு

    RépondreSupprimer
    Réponses

    1. கருத்திட்டமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. #பகவான் ஜி! விஷயம் இப்படி!#
    புரிந்து கொண்டேன்உங்கள் கதையை ,என் கண்ணாடி வெம்மையைக் குறைக்கும் ,வெற்றிடத்தை பார்க்காது :)

    RépondreSupprimer
    Réponses

    1. கருத்திட்டமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. Réponses

    1. கருத்திட்டமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. போட்டி உலகத்தில் குணம் என்பது குப்பையிலே (ஐயையோ குப்பையும் காசாகிவிடும்). பணம் ஜனநாயகத்தையே நிர்ணயக்கும்போது (நீதி, பிரதிநிதி, பத்திரிகை சுதந்திரம்) அமைதி மற்றுமே நம் இன்பம் என்பதால்
    நாம் ஒரு வகையில் அடிமைகளே. சரி புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer