vendredi 22 mai 2015

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
என்ற உண்மைக் காதலோடு வாழ்ந்து வந்த தம்பதியர் கிராமம் ஒன்றில் மனம் ஒத்து வாழ்ந்து வந்தனர்.  
அவ்வேளையில், அவர்களை வறுமை வாட்டியது!
வறுமையின் பிடியில் இருந்து மீள்வதற்குரிய வழியினை, மனைவியானவள் தனது கணவனை பார்த்துக் கூறினாள்! அதாவது, அவர்களது வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் ? குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டியபடி சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.

வழியில் அவனது மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.

அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவர் ; அவரைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றார் . அதற்கு அவர் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றார் .

எதிரேயொருவர் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தார் . அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும்அதற்கும் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவரிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டார்.

போகும்போது வழியில் ஒரு பிரியாணிக் கடையை கண்டார். அந்தக் கடைக்காரர் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு கணவனிடம் நயமாகப் பேசிஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டார்.

கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் அவரைப் பார்த்து,  ”அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். 

"மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய்!"

"ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய்!"

"கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய்!"

-இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்அல்லது,


உன்னை அடித்துத் துரத்துவாள்என்றார்.

அதற்கு கணவன்அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை . நான் அறிவேன் என்றார். 
தான் சொல்வதுதான் நடக்கும் என்றார் பக்கத்து வீட்டுக்காரர் .

நடக்குமா ? நடக்காதா ? என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். 

நடந்தால் கணவன் அவரது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி தந்துவிட வேண்டும். 
நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன்அவனது பெட்டிக்கடையை கணவனுக்குத் தந்துவிடவேண்டும்.
இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.

அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான்.

அறிவிலியின் மனைவியோ ! தன் கணவனைப் பார்த்து
அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?” என்று அன்பொழுகக் கேட்டாள்.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி.

பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்து விட்டான்.
மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து,  
என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?’  
என்று கேட்டான்.

அப்படியொன்றுமில்லை! என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். 

அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்என்றான் அந்த கணவன்.
 
எனவே ! இந்த குட்டிக் கதையின் மூலம் நாம் அறிவது,
உன்னை அறிந்தால்?
என்னை அறிந்தால்?  மட்டும் போதாது. 

தன்னை நம்பி கை பிடித்த மனைவியையும் அறிந்தால்?
உலகத்தில் போராடுவதோடு வெற்றியும் பெறலாம் அல்லவா?

பகிர்வு:

புதுவை வேலு

நன்றி: (டு டே இந்தியா)32 commentaires:

 1. ஆகா
  இப்படியல்லவா இருக்க வேண்டும்
  நன்றி நண்பரே
  தம 1

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் நண்பரே!
   முதல் கருத்தும், முதன்மை வாக்கும் பதிவுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. Réponses
  1. வார்த்தைச் சித்தரின் வாக்கும் வளமை, கருத்தும் பெருமை!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. விசுவின் திரைப்படம் பார்ப்பது போல ஆரம்பித்து எங்கெங்கோ போய், கடைசியில் ஒரு நல்ல பாடம். நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் முனைவர் அய்யா அவர்களே!
   நல்ல பாடம் என்று நற்சான்றிதழ் வழங்கியமைக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. அருமையான கதை! மிகவும் இரசித்தேன்!

  RépondreSupprimer
  Réponses
  1. மிகவும் ரசித்தமைக்கு
   மிக்க நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. உண்மையைச் சத்தமாக சொன்னதற்கு தங்களுக்கு என் நன்றிகள்.

  RépondreSupprimer
  Réponses
  1. (உண்மையைச் சத்தமாக சொன்னதற்கு தங்களுக்கு என் நன்றிகள்.)
   ஆமாம் சகோதரி!
   வலைப் பூவுலகில் தங்களது கருத்து பின்னுட்டச் சத்தம் உண்மைய சங்கொலியாய்
   ஒலிப்பதை நானும் அறிவேன்! வாழ்த்துகள்!
   வருகை தொடர்க!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. கதை படிக்க மிகவும் அருமை.

  //“அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?”//

  சூப்பர் !

  RépondreSupprimer
  Réponses
  1. //“அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?”//
   ஒவ்வொரு இல்லத்தரசியும் இதுபோல் பண்போடும், பரிவோடும் இருந்தாலே போதும் வாழ்வில் இன்ப நதி பெருக்கெடுத்து ஓடும்.
   வருகைக்கு நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. கதையும் கதை சொல்லும் கருத்தையும் இரசித்தேன்.

  RépondreSupprimer
  Réponses
  1. அன்புள்ள அய்யா!
   ரசனைமிகு கருத்தினை வடித்தமைக்கு நன்றி பாராட்டுகின்றேன்.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. கதையும் கருத்தையும் ரசித்து படித்தேன் சகோ.

  என்னுடைய பதிவு திருநெல்வேலி அல்வா ! நேரம் கிடைக்கும் போது சுவைத்து பார்த்து கருத்தை சொல்லுங்கள்.

  RépondreSupprimer
  Réponses
  1. தொடர் ஆதரவு அளித்து வரும் அன்பு சகோதரிக்கு நன்றி!
   தங்களது பதிவுக்கு வந்தேன்!
   கருத்திட்டு மகிழ்ந்தேன்!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. வணக்கம்
  ஐயா
  கதை அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. கவிஞர் அய்யாவின் கவின்மிகு கருத்தும், வாக்கும் வளமை!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 10. அடடே...அசத்தல்...கதை.சகோ

  தம +1

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் சகோதரி!
   தங்களது அசத்தல் கருத்திற்கும், வாக்கிற்கும் இனிய நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 11. ஆஹா சூப்பர் ஜோடி.நல்ல பண்பும் கூட..

  RépondreSupprimer
  Réponses
  1. வாருங்கள் சகோ!
   "சூப்பர் ஜோடி" நல்ல பொறுத்தமான தலைப்பை தந்தமைக்கும், கருத்தை வழங்கியமைக்கும் நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. அந்தம்மா ரொம்ப வெவரம் தான் பின்ன சண்டை போட்டிருந்தா வீடும் போயிருக்குமே:)))) ரமணிச்சந்திரன் தலைப்பா இருக்கேனு நினைத்தேன் அண்ணா! கதையும் டச்சிங்கா தான் இருக்கு!

  RépondreSupprimer
 13. வணக்கம்!
  வாருங்கள் சகோதரி!
  குழலின்னிசை தங்களை வரவேற்க காத்திருக்கின்றது.
  கதைப்படி "அந்த அம்மாவுக்கு வீடு கிடைத்த சந்தோஷத்தை தந்தது"
  எனக்கு தங்களது வருகையும், கருத்தும். தொடருங்கள். தொடர்கின்றேன் தங்களது பதிவுகளை!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 14. ஆஹா..! அருமையான ஜோடி! அழகான கதை!

  தொடர்கிறேன்.

  த ம 9

  RépondreSupprimer
  Réponses
  1. சூப்பர் ஜோடியை பாராட்டி கருத்திட்ட நண்பருக்கு நன்றி!
   நட்புடன்ப்,
   புதுவை வேலு

   Supprimer
 15. பலருக்குப் பயன்தரும்
  நல்ல படிப்பினை
  சிறந்த வழிகாட்டல்
  தொடருங்கள்

  RépondreSupprimer
  Réponses
  1. தங்களது கருத்தின்படி தொடர்கின்றேன்!
   ஆதரவு அன்பினை தாருங்கள்!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 16. இவள் அல்லவோ உண்மை மனைவி !

  RépondreSupprimer
  Réponses

  1. உண்மை இருந்தால் உயர்வு உண்டு!
   வாழ்வில்!

   நன்றி பகவான் ஜி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 17. இவள் அல்லவோ உண்மை மனைவி !

  RépondreSupprimer
  Réponses

  1. உண்மை இருந்தால் உயர்வு உண்டு!
   வாழ்வில்!

   நன்றி பகவான் ஜி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer