vendredi 29 mai 2015

"தமிழா விழி! தமிழில் மொழி! "

"மிதிவண்டி"



                                       ( பட உதவி: சகோ. R. உமையாள் காயத்ரி)


அன்பர்களே!
இன்றைய சூழலில், தமிழில் ஒரு சொல்லை  கூறி! அதனை  ஆங்கிலத்தில் சொல்லச் சொன்னால்! விடை காண்பது என்பது எளிதாக உள்ளது.
ஆனால், அதேபோன்று ஒரு ஆங்கில சொல்லை சொல்லி அந்த சொல்லினுடைய தமிழ் பெயரை கேட்போமே ஆயின்,

 விடை?????

இங்கே! அனைவரும் அறிந்த "மிதி வண்டி"யின் உதிரி பாகங்களின் தமிழ் பெயர்கள் சிலவற்றை கண்டு தந்துள்ளேன்.

காணுங்கள்! 

சரியான விடை கண்டு, 
மதிப்பெண்களை நீங்களே இட்டுக் கொள்ளுங்கள்!  

நன்றி!





Tyre - வட்டகை / உருளிப்பட்டை

Tube - காற்றுக் குழாய் / தூம்பு என்பதே மிகச்சரியானது.


Ring - வளையம்
Hole - ஓட்டை
Hook - கொக்கி
Spokes - ஆரக்கால்கள்
Spoke guard - ஆரக் காப்பு
Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
Spanner - மறைதிருகி
Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
Screw driver - திருப்புளி
Tools - கருவிகள்
Pocket tools - பையடக்கக் கருவிகள்



Front Mud Guard - முன் மணல் காப்புறை
Back mud guard - பின் மணல் காப்புறை
Chain Guard - சங்கிலிக் காப்புறை
Dress Guard - ஆடைக் காப்புறை
Gloves - கையுறை
Head set - தலைக்கவசம்
Wrist band - மணிக்கட்டுப் பட்டை



Bell - மணி
Bell lever - மணி நெம்பி
Bell cup - மணி மூடி
Bell spring - மணிச் சுருள்
Bell frame - மணிச் சட்டகம்
Bell rivet - மணி கடாவி
Bell fixing clamp - மணிப் பொருத்தி



Lock - பூட்டு
Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
Key - சாவி
Key chain - சாவிக் கொத்து
Chain lock - சங்கிலிப் பூட்டு



 Inner wire - உள்ளிழை
Electrical parts - மின்னணுப் பாகங்கள்
Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
Extra fittings - கூடுதல் பொருத்திகள்




Foot rest - கால்தாங்கி
Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
Water bottle - தண்ணீர்க் குடுவை


Racing cycle - பந்தய மிதிவண்டி
Mini cycle - சிறு மிதிவண்டி
Mountain cycle - மலை மிதிவண்டி
Foldable cycle - மடக்கு மிதிவண்டி
Wheel chair - சக்கர நாற்காலி
Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
High-tech bike - அதிநுட்ப வண்டி
Kid cycle - சிறுவர் மிதிவண்டி
Ladies cycle - மகளிர் மிதிவண்டி
Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
Cycle with motor - உந்து மிதிவண்டி




Inflating - காற்றடித்தல்
Patch - பட்டை
Patching - பட்டை வைத்தல்
Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
Over hauling - முழுச் சீரமைத்தல்
Painting - வண்ணம் தீட்டல்
Lubrication - எண்ணெய் இடல்
Wheel bend removal - கோட்டம் எடுத்தல்



Puncture - துளை
Puncture closure - துளைமூடல்
Puncture lotion - துளைமூடு பசை
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி




Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு எண்ணெய்

 


 இந்தச் சொற்களை விடச் சிறந்த - பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தோன்றினால்  அறியத் தாருங்கள்   அவற்றைப் பயன்படுத்துவோம்.




பகிர்வு:

புதுவை வேலு


 நன்றி:
- (முனைவர் அண்ணாகண்ணன்)

34 commentaires:

  1. முதல் படம் வரைந்து கொடுத்து உதவியுள்ளவருக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். சமையல் மட்டுமின்றி சகலகலாவாணியாக இருப்பார்கள் போலிருக்கு :) மகிழ்ச்சி.

    உபரி பாகங்களின் தமிழாக்கச் சொற்கள் அருமை. பாதிக்கும்மேல் புதிதாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. முதல் படம் வரைந்து கொடுத்து உதவியுள்ளவருக்குப் பாராட்டுகள்.
      வாழ்த்துகள். சமையல் மட்டுமின்றி சகலகலாவாணியாக இருப்பார்கள் போலிருக்கு!
      அய்யா!
      வண்ணம் தீட்டி வரைபடம் வரைந்து மிதி வண்டியை குழலின்னிசை பதிவிற்கு
      தந்தளித்த சகோ.
      உமையாள் காயத்ரி அவர்களை, என்னோடு சேர்ந்து தாங்களும் வாழ்த்தி பாராட்டியது
      மிகவும் மகிழ்ச்சி!
      சகல கலாவாணி உமையாள் காயத்ரி புகழ் மேலும் ஓங்கட்டும்! சாய் அருளால்!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. நன்றி வைகோ ஐயா

      Supprimer
  2. அருமையான முயற்சி
    பாராட்டுகள்

    RépondreSupprimer
    Réponses
    1. முயற்சியை முன்னெடுத்து செல்வதற்கு முழு ஆதரவு அளித்து ஊக்கப் படுத்தி வரும்
      யாழ்பாவாணன் அய்யா அவர்களை நன்றி பாராட்டி மகிழ்கின்றேன்!
      வருக! வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. போற்றுதலுக்கு உரிய முயற்சி
    பாராட்டுக்கள் நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. "போற்றுதலுக்கு உரிய முயற்சி"
      பதிவு சிறக்க காரணமாக இருந்த
      சகோ. R..உமையாள் காயத்ரி அவர்களையும்
      போற்றி பாராட்டுவோம்! நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. தலை நகரத்து நண்பரை
      தலை வணங்கி வரவேற்கின்றேன்! வருக! அருங்கருத்தை நாளும் தருக!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. தலை நகரத்து நண்பரை
      தலை வணங்கி வரவேற்கின்றேன்! வருக! அருங்கருத்தை நாளும் தருக!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. ரெக்கை கட்டி பறக்குதையா யாதவ நம்பி சைக்கிள் என்று பாடத் தோன்றுகிறது :)

    RépondreSupprimer
    Réponses
    1. பறவையாய் பறந்தே பகிர்ந்துண்டு வாழ்வோம்
      பகவான் ஜி அவர்களே!
      பாராட்டுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நல்ல முயற்சி பாராட்டுக்கள் சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல முயற்சியை மனமுவந்து
      பாராட்டியமைக்கு மிக்க நன்றி! சகோ!
      புதிய பதிவு எப்போது சகோ!
      சொல்லுங்கள்!
      மிதிவண்டியில் ஏறி வந்து விடுகிறேன்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. உணவில்லையெனில் என்ன
    என் தமிழ் சுவைத்தே வாழ்ந்திடுவேன்..

    மிக அற்புதமான தகவல்.. மிதிவண்டி படம் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது.

    RépondreSupprimer
    Réponses
    1. "உணவில்லையெனில் என்ன
      என் தமிழ் சுவைத்தே வாழ்ந்திடுவேன்.".
      அருமை நண்பரே!
      உங்களது தமிழையும் நாம் சுவைக்க
      குழலின்னிசைக்கு வாருங்கள்! அருங்கருத்தை தாருங்கள்!
      நாமும் வருகிறோம்! தங்களது பதிவினை கண்டு மகிழ!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நல்லதொரு முயற்ச்சி நண்பரே தொடரட்டும்
    படம் வரைந்த சகோ ஆர். உமையாள் காயத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 6

    RépondreSupprimer
  10. வாங்க! நண்பரே!
    முதல் ஆளாய் வருவீர்கள் என்றே எதிர்பார்த்தேன்.
    அலுவல்கள் அல்வா கொடுத்து விட்டது போலும்!
    மீசை எழுத்தை காணாது ஆசை பின்னூட்டம் அலை பாயுதே!
    கில்லர் ஜி!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  11. பகிர்வுக்கு நன்றி. இந்த பெயர்ச் சொற்களை மக்கள் மத்தியில் பழக்கத்திற்கு கொண்டு வருவதில்தான் இவற்றின் வெற்றி இருக்கிறது.

    த.ம.7

    RépondreSupprimer
    Réponses
    1. வசந்தம் தரும் வருகை
      வளம் சேர்க்கும் வாக்கு
      அளித்த தமிழ் அன்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. பதிவிட்ட உங்களுக்கும், படம் வரைந்த உமையாள் காயத்திரி அவர்களுக்கும் பாராட்டுக்கள்!
    த ம 8

    RépondreSupprimer
    Réponses
    1. வசந்தம் தரும் வருகை
      வளம் சேர்க்கும் வாக்கு
      அளித்த நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. இம்மாதிரிச் சொற்கள் பரவலாக புழங்கப்படவேண்டும் திணிக்க முயன்றால் தமிழிலிருந்து காத தூரம் ஓடுவார்கள்

    RépondreSupprimer
  14. வெகு சிறப்புங்க. நண்பர்கள் கூறுவது போல இந்த சொற்கள் புழக்கத்தில் வரவேண்டும்.

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல முயற்சியை மனமுவந்து
      பாராட்டியமைக்கு மிக்க நன்றி! சகோ!
      புதிய பதிவு எப்போது சகோ!
      சொல்லுங்கள்!
      மிதிவண்டியில் ஏறி வந்து விடுகிறேன்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. உபரி பாகங்களின் தமிழ் பெயர்கள் அருமை சகோ. ஓவியத்தை வெளியிட்டு மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் சகோ. மிக்க நன்றி. ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்..

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல முயற்சியை மனமுவந்து
      பாராட்டியமைக்கு மிக்க நன்றி! சகோ!

      நன்றி!

      மிதிவண்டியில் ஏறி வலம் வர உதவி செய்தமிக்குநன்றி! சகோ!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு சகோ!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  17. "மிதி வண்டி"யின் உதிரி பாகங்களின் தமிழ் பெயர்களை தந்தமைக்கு நன்றி!

    Wooden mallet என்பதை மர கொட்டாப்புளி .எனவும் சொல்லலாம்.

    Grease க்கு மசகு என்றும் சொல்லலாம்.

    RépondreSupprimer
    Réponses
    1. மிதி வண்டி"யின் உதிரி பாகங்களின் தமிழ் பெயர்

      Wooden mallet என்பதை மர கொட்டாப்புளி .எனவும் சொல்லலாம். தகவலுக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. முனைவர் அண்ணாகண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்.
    அருமையாக தொகுத்தளித்த புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  19. (முனைவர் அண்ணாகண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்.
    அருமையாக தொகுத்தளித்த புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.)
    நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer