jeudi 25 juin 2015

"ஆதவனுக்கு (ஆதார்) அடையாள அட்டை!"



படம் சொல்லும் பாடம்

 )
                                                   பட உதவி : (தினமலர்)

                  


தீயில் தினமும் குளிப்பவளே!

தீ பிழம்பாய் பிறப்பவளே! - நின்

செந்தழல் மேனி அழகை!

தொட்டு படம் பிடித்து !



உனது நிஜத்தின் அழகை!

நிழலாய்  தந்தது யார்?

"சோலார் டைனமிக்ஸ்"

தொலைநோக்கி கருவிதானோ?


ஆகாய தேவதைக்கு’ - ஓர்!

அடையாள அட்டை தந்தமைக்கு
சூரியனை படம் எடுத்த!

நாசாவுக்கு நன்றி சொல்வோம்!


புதுவை வேலு


32 commentaires:

  1. ஆதார சூரியனுக்கே ஆதார் அட்டை!..

    சூரியனுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கேள்விப்பட்டேன்..

    அழகான கவிதை.. வாழ்க நலம்!..

    RépondreSupprimer
    Réponses
    1. சூரியன் பெற்ற சுந்தர மகிழ்வை சுடர்மிகு கருத்தாய் தந்தீர் அருளாளர் அய்யா அவர்களே!
      ரசித்தேன்! புவித் தேனாய் கருத்தினை தந்தீர்! நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. புரட்சி பேசும் போட்டோ
    கவிதையை தந்தது மகிழ்வு
    தம+

    RépondreSupprimer
    Réponses
    1. புரட்சிப் பூவின் வாசத்தை பூங்கருத்தாய் செந்தழல் மேனியாளுக்கு செப்பிய
      செம்மை தோழருக்கு செந்தமிழ் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நாசாவுக்கு நன்றி. பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. 'நாசா'வுக்கு நன்றி பாராட்டிய நாயகரின் கருத்தை வணங்கி ஏற்கின்றேன். நன்றி முனைவர் அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. சூரியனுக்கு ஆதார் அட்டை! :) ரசித்தேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. தலை நகரத்தார் தந்த சுடர்மிகு கருத்துக்கு சுந்தர வணக்கம்!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. சூரியனை பெண்ணாக்கித் தந்த ஆக்கமும், அதில் கொஞ்சம் நகைச்சுவை கலந்ததும் அருமை. :) படம் பிடித்த நாசாவுக்கும் அதனைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. 'நாசா'வுக்கு நன்றி பாராட்டிய நாயகரின் கருத்தை வணங்கி ஏற்கின்றேன். நன்றி வைகோ
      அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அனைத்திற்கும் ஆதாரமான அவனுக்கே அவளுக்கே ஆதார் அட்டை, அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. ஆதவனின் அழகை அள்ளித் தந்த கருத்த அருமைமிகு கருத்து! நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த பரிமாணம் இதோ சூரியனுக்கு ஆடார் அட்டை.
    அடுத்து துமல், இரும்பல், வாயு தொல்லைக்கு அபராதம் வர வாய்ப்பு அதிகம். எப்படி ? சுற்றுச்சுழல்...
    கவிதை அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. ஓசோன் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் பேராபத்தை தனிப்பெருங்கருத்தாய் தரணிக்கு தந்து விட்டீர்கள் நண்பர் சத்தியா அவர்களே!
      "விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த பரிமாணம் இதோ சூரியனுக்கும் ஆதார் அட்டை" ஆஹா கருத்திலும் ஒரு ஹைக்கூ வை எழுதி விட்டீர்கள். சபாஷ்!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. தேசியக்கவி பாரதியார் தான், கண்ணனை பெண்ணாக உருவகப்படுத்தி ‘காற்றுவெளியிடைக் கண்ணம்மா’ என்ற பாடலை எழுதியதாக சொல்வார்கள். தாங்களும் அதைப்போல ஆதவனை பெண்ணாக் உருவகப்படுத்தி கவிதை புனைந்துள்ளீர்கள். தங்கள் கற்பனையையும், கவிதையும் இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. தேசியக்கவி பாரதியார் கவிதைய கண் முன்னே கொண்டு வந்தது தங்களது தமிழ் நெறிமிக்க கருத்து. பாராட்டோடு பாரதியை பற்றிய செய்தியை பறைசாற்றியமைக்கு
      பண்புமிக்க நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. Réponses
    1. ஆதவனுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை கண்டு கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!
      நட்புன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. Ce commentaire a été supprimé par l'auteur.

    RépondreSupprimer
  11. சூரியன் ,கதிரவன் ,ஆதவன் என்று ஆண்பாற் பெயராலே அழைக்கப் பட்டு
    வந்ததை மாற்றி செந்தழல் மேனியாள் என்று சொல்லி பெண்ணாகி விட்டதை ரசித்தேன் :)

    RépondreSupprimer
    Réponses
    1. ஆதவனுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை கண்டு கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. சூரியன் சுடுவதனால் பெண்ணா.?

    RépondreSupprimer
    Réponses
    1. ஆதவனுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை கண்டு கருத்திட்டமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. ஆதாருக்கே ஆதாரா? அருமை அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. ஆதவனுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை கண்டு கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. அப்போ அவருக்கு எரிவாய்வு மானியம் கிடைக்குமா!

    RépondreSupprimer
    Réponses
    1. ஆதவனுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை கண்டு கருத்திட்டமைக்கு நன்றி புலவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. வித்தியாசமான அருமையான சிந்தனையில்
    விளைந்த கவிதை அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. ஆதவனுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை கண்டு கருத்திட்டமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. அட சூரியனுக்கே ஆதார் அட்டை....ரசித்தோம்!

    RépondreSupprimer
    Réponses
    1. ஆதவனுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை கண்டு கருத்திட்டமைக்கு
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer