dimanche 28 juin 2015

"புகழ் போதை"




ளவோடு வந்தால்
னந்த தேவதை!
னங்கண்டு கொண்டால்
ருலகம் உன்கையில்!


ன்னை அறிந்தால்
டகம் உன் கையில்
ன்றும் எப்போதும்
ற்றம் நிலையில்லை!


யத்தை அழித்தொழித்தால்
அகிலமும் உன்கையில்!
வ்வாத புகழ்போதை
துவது மதுவாகும்!

வை தமிழ் வாக்கு!
வையகத்து அமுதாகும்!


புகழ் போதையை வெல்வோம்!
அன்பு பாதையில் செல்வோம்!


நட்புடன்,

புதுவை வேலு

33 commentaires:

  1. உயிர் எழுத்தில் ஆரம்பிக்கும், அறிவுரைகள் அனைத்தும் அருமை. :)

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழ் உயிர் எழுத்தின் உயர்வை சொல்லும் விதமாய்,
      உன்னத கருத்தினை அளித்த வைகோ அய்யாவுக்கு நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. அருமை அருமை
    ஆம் இதுவும் நம் சுயம் அழிக்க முயலும்
    போதைதான்
    புதுமையாய் சொல்லிப்போனவிதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. உள்ளம் தெளிதல் வேண்டும்
      கள்ளம் களைதல் வேண்டும்
      வெல்லம் போல் இனித்த கருத்து!
      நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. புகழ் போதையை வெல்வோம்
    அறிவுப் பாதையில் செல்வோம்
    நன்றி நண்பரே
    தம 2

    RépondreSupprimer
    Réponses
    1. புகழ் போதையை வெல்லும் பாதையில் பயணம் செய்ய
      தங்களோடு குழலின்னிசையும் வருகிறது நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. // புகழ் போதையை வெல்வோம்!//

    சரியான அறிவுரை. பாராட்டுக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. புகழ் போதையை வெல்லும் வழியில் கண்டெடுத்த புதையல் கருத்து!
      வணங்குகிறேன். நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. வார்த்தைச் சித்தரின் "அருமை "கருத்து!
      புகழ் போதையை தெளிவுறச் செய்யுமாய் அமைதல் வேண்டும்.
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. புகழ் போதையை தெளிவுறச் செய்யும் வாக்கு!
    அளித்தமைக்கு நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. உயிர் எழுத்துக்களின் வரிகள் அருமை சகோ.

    RépondreSupprimer
    Réponses

    1. உயிர் எழுத்துக்களை உயர்வடையச் செய்ய,
      வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வணக்கம்,
    ரொம்ப பிடிச்சிருக்கு,
    வாழ்த்துக்கள், நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி,
      தங்களது கவின்மிகு கருத்தும்
      ரொம்பவே பிடிச்சிருக்கு!!!!
      நன்றி!
      நபுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. சிறப்பான வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்துக்கு வளர் தமிழ் நன்றி நண்பரே!
      நன்றி!
      நபுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. முன்பு ஒரு முறை அகர வரிசையில் ஒரு காதல் கடிதம் எழுதி இருந்தேன் அண்மையில் அகர வரிசையில் இன்னொரு பதிவும் கண்ணில் பட்டது. நான் என்னசொல்ல. நன்றாய் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது அகர வரிசை சிறப்புக் கவிதையை
      மீள் பதிவாக்கித் தர வேண்டுகிறேன் அய்யா G.M.B அவர்களே!
      வாழ்த்தியமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அகர வரிசையில் ஓர் அருமையான செய்தி. பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அகரத்தை சிறப்பித்து கருத்திட்ட முனைவர் அய்யாவுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. "புகழ் போதை" சொல்லும் கவிதையின் செய்தியை பாராட்டியமைக்கு நன்றி முனைவர் அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. Réponses
    1. அருமை பாராட்டிய நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. வணக்கம்
    ஐயா

    சிறப்பான வரிகள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கவிஞர் ரூபன் அவர்களே! நன்றி பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. உயிர் எழுத்துக்களை பயன்படுத்தி போதைக்கு விளக்கம் அருமை.
    நம்பிக்கையை தூண்டும் உச்சம்.
    போதையின் உச்சம் மரணம்.
    அருமையான ஊக்கப்படுத்தும் நல்வரிகள்.
    சில வாரங்களுக்கு பின் சந்திப்போம் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது தாயகப் பயணம் சிறப்புற அமைய குழலின்னிசையின் நல்வாழ்த்துகள்
      நண்பர் சத்யா அவர்களே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. உயிரெழுத்து அனைத்தும் உயிர் பெற்றன கவிதையில்!

    RépondreSupprimer
    Réponses
    1. இந்த உயிர் எழுத்துக்கள் கவிதை உயிர் பெற்றது புலவர் அய்யாவின் வாழ்த்தினாலும் என்று சொன்னால் அது மிகையாகாது அல்லவா?
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. அருமை ஐயா! அகர வரிசையில் அசத்துகின்றன....

    RépondreSupprimer
  17. வலையுலக ஆசானே வருகைக்கு வசந்தமான நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer