mercredi 24 juin 2015

"அறிவின் அரிச்சுவடி"

நாளை என்ன நடக்கும்!

ஒரு வியாபாரியிடம் அபூர்வ ஜாதிக் குதிரை ஒன்று இருந்தது. அதை வாங்க நிறையச் செல்வந்தர்களும், அரசர்களும், விரும்பினர்.
ஆனால்?
வியாபாரிஅதை விற்க மறுத்து விட்டான். திடீரென்று ஒரு நாள் அந்தக் குதிரை காணாமல் போனது. ஊரார் அவன் மீது அனுதாபப்பட்டனர். அதற்கு அந்த வியாபாரி. இப்போதைக்கு குதிரை லாயத்தில் இல்லை என்பது மட்டுமே நிஜம். பின்னால் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது! அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றான்.

ஒரு வாரம் கழித்து அவனது அந்த அபூர்வ ஜாதிக் குதிரை காட்டிலிருந்து இன்னும் ஒன்பது குதிரைகளோடு லாயத்திற்கு வந்து சேர்ந்த்தது. மறுபடியும் ஊரார், வியாபாரியின் அதிர்ஷ்டத்தைப் புகழ்ந்தனர். 

அப்போது வியாபாரி, என் குதிரை ஒன்பது குதிரைகளை அழைத்து வந்திருக்கிறது என்பது உண்மைதான் ஆனால், நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்றான்.

அடுத்த நாள், வியாபாரியின் மகன் அதில் ஒரு குதிரையைப் பழக்க முயற்சித்துக் கீழே விழுந்து அவனது கால் எலும்பு முறிந்து விட்டது.  மறுபடியும் ஊரார், அந்த தரித்திரம் பிடித்த குதிரை திரும்பி வராமலேயே இருந்திருக்கலாம். இப்போது பாருங்கள், இவருடைய மகன் கால் முடமாகிவிட்டது என்று புலம்பினார்கள். அதற்கு வியாபாரி, என் மகன், கால் உடைந்திருப்பது என்பது நிஜம்தான். பின்னால் நடப்பதைப் பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும் என்றான்.

சில நாட்களில் அண்டை நாட்டு அரசன், அந்நாட்டின்மீதுபடையெடுத்தான் அப்போது அந்த அரசாங்கம் திடகாத்திரமான வாலிபர்கள் அனைவரும் தாய் நாட்டைக் காக்க படையில் சேரவேண்டும் என்று அறிவித்தது. 

கால் ஊனமான வியாபாரியின் மகனைத் தவிர அனைத்து இளைஞர்களும் பட்டாளத்துக்குப் போகவேண்டி வந்தது.  இப்போதும், ஊரார் குழுமி, கால் முடமானாலும் உன் மகன் உன்னுடன் இருக்கிறான். எங்கள் பிள்ளைகள் யுத்தத்துக்குப் போய்விட்டார்களே ! என்று பிதற்ற ஆரம்பித்தனர்.

வியாபாரி உங்கள் பிள்ளைகள் ராணுவத்துக்குப் போயிருக்கின்றனர் !  என் பிள்ளை போகவில்லை. அவ்வளவுதான் நடந்திருக்கிறது.
உங்கள் மகன்கள் சண்டை முடிந்து, வெற்றி வீரர்களாகவும் திரும்பி வரலாமல்லவா? என்று சமாதானப்படுத்தினார்
.
நமக்கு ஒரு பிரச்னை வந்தால், கற்பனையைத் தட்டிவிடாமல், நடந்திருப்பதைச் சரியாகக் கவனித்து அதிலிருந்து மீளும் வழியை யோசிப்பதே புத்திசாலித் தனம் என்பதை அங்கிருந்த மக்கள்அனைவரும் அப்போது உணர்ந்தனர்.

புதுவை வேலு

கதை மூலம்: (குட்டிக் கதைகள்)

24 commentaires:

  1. உண்மைக்குதிரையைவிட கற்பனைக் குதிரைகளால் வரும் விளைவுகளை விவாதித்துள் விதம் அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள முனைவர் அய்யா!
      இன்றைய பதிவின் சிறந்த கருத்தாய் நான் கருதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது நல்ல கருத்தையே எனது மறுமொழியாக முன்மொழிகின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. கற்பனைக் குதிரைகளின் வேகம் அதிகம்தானே
    அருமை
    நன்றி நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள நண்பரே!
      இன்றைய பதிவின் சிறந்த கருத்தாய் நான் கருதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது நல்ல கருத்தையே எனது மறுமொழியாக முன்மொழிகின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நலல்து நடந்தால் மகிழ்ச்சி அடைவதும். கெட்டது நடந்தால் துன்பப்படுவதும் மனித இயல்பு. எப்போதும் ஒரே நிலையில் இருக்கவேண்டும் என்ற நல்ல கருத்தை சொல்லும் கதை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள அய்யா!
      இன்றைய பதிவின் சிறந்த கருத்தாய் நான் கருதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது நல்ல கருத்தையே எனது மறுமொழியாக முன்மொழிகின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. எதுவும் கடந்தே போகும்...!

    RépondreSupprimer
    Réponses
    1. இன்றைய பின்னூட்டங்களுக்கு தங்களது கருத்தே சிறந்த மறுமொழியாக இடப்பட்டுள்ளது!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. கதையானாலும் கற்றுக் கொடுக்கிறது, வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள அய்யா!
      இன்றைய பதிவின் சிறந்த கருத்தாய் நான் கருதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது நல்ல கருத்தையே எனது மறுமொழியாக முன்மொழிகின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. அன்புள்ள அய்யா !
      இன்றைய பதிவின் சிறந்த கருத்தாய் நான் கருதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது நல்ல கருத்தையே எனது மறுமொழியாக முன்மொழிகின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நல்ல கதை. நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கத் தான் வேண்டும்!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள நண்பரே !
      இன்றைய பதிவின் சிறந்த கருத்தாய் நான் கருதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது நல்ல கருத்தையே எனது மறுமொழியாக முன்மொழிகின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டு அழகானதோர் கதையைச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். ‘எல்லாம் நன்மைக்கே’ என மனதில் ஏற்றுக்கொண்டு, சிறிதும் மனச்சோர்வு அடையாமல் மேற்கொண்டு ஆக வேண்டியதை வெற்றிகரமாக கவனிக்கப்போவது சில மனிதர்களின் மகத்தான இயல்பு. :)

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள நண்பரே!
      இன்றைய பதிவின் சிறந்த கருத்தாய் நான் கருதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது நல்ல கருத்தையே எனது மறுமொழியாக முன்மொழிகின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. Réponses
    1. அன்புள்ள சகோதரி!
      இன்றைய பதிவின் சிறந்த கருத்தாய் நான் கருதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது நல்ல கருத்தையே எனது மறுமொழியாக முன்மொழிகின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. சிறப்பான நீதிக்கதை! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள நண்பரே !
      இன்றைய பதிவின் சிறந்த கருத்தாய் நான் கருதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது நல்ல கருத்தையே எனது மறுமொழியாக முன்மொழிகின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. தீர்வுக்கு வழிகாண முயலவேண்டும் என்பது,,,,,,,,,,
    தங்கள் போக்கு அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள சகோதரி!
      இன்றைய பதிவின் சிறந்த கருத்தாய் நான் கருதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது நல்ல கருத்தையே எனது மறுமொழியாக முன்மொழிகின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. எதுவும் கடந்து போகும் அந்த ஜாதிக் குதிரைப்போல் ஓடிப் போனாலும் சரிதான் :)
    (அன்புள்ள நண்பரே என்று மட்டும் மறுமொழியை துவக்கி விடாதீர்கள் பிளீஸ் :)

    RépondreSupprimer
    Réponses
    1. இது ஓடிப் போகும் குதிரை அல்ல பகவான் ஜி
      நாடி வந்து நட்பு பாராட்டும் நல்ல குதிரை!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer