vendredi 5 juin 2015

"செந்தமிழே! செம்மொழியாய் வாழியவே!"

இன்று ஒரு தகவல்



                                                                                       பட உதவி: விகடன்


இன்றைய தினம், 

 நம் தாய்மொழியாம் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்
 ஜூன் 6, 2004.
உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக மொழிகளை ஆய்வுசெய்தபோது ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இந்தியாவிலும்தான் அதிக மொழிகள் பேசப்படுகின்றன 
எனத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் சமஸ்கிருதமும் தமிழும் அடங்கும்.
சமஸ்கிருதத்தின் பழைமை எல்லோரும் அறிந்த ஒன்று. அதில் இந்தியாவின் தொன்மையான பல இலக்கியங்கள் உள்ளன.

தமிழின் தொன்மை குறித்த விவாதம் கடந்த 150 ஆண்டுகளில்தான் விரிவடைந்திருக்கிறது.
அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளை ஒப்பிட்டு 1856-ல்
ஒரு ஆங்கில நூலை எழுதினார். அதில் தமிழின் தொன்மையை விளக்கினார். அது உலக அளவில் விவாதிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக,  பேராசிரியர் பரிதிமாற் கலைஞர்
தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என 1902-ல் கோரிக்கை விடுத்தார். 

அதன் பிறகு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளும் அறிஞர்களும் இது தொடர்பாகப் பல முயற்சிகளை எடுத்தனர். அதன் விளைவாக,  இந்திய அரசால் தமிழ்  செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள்தான் இன்று -( ஜூன் 6).

"செம்மொழி" என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான்.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின் போது,  2004-ம் ஆண்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

இந்தியாவில், தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிறது. 
இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள், தமிழும் ஒன்று.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இடம்பெற்றுள்ளது. 
தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது குறிப்பிடத் தக்கது. 



வையகம் போற்றும்படி! வலம்வரும், நம் தமிழ்மொழி,
இணையத்தின் இணையில்லாத இதய மொழியாகவும்,
மலர்ந்து மணம் வீச வேண்டும்! என்று இந்நன்னாளில் உறுதி ஏற்போமாக!!!

தகவல் பகிர்வு:

புதுவை வேலு

நன்றி: தி இந்து

30 commentaires:

  1. நல்ல தகவல் பகிர்வு..
    நன்றி
    அப்படியே உங்கள் முகவரியோடு வாட்சப்பில் சுற்றும் இது..
    தம +

    RépondreSupprimer
  2. மிக்க நன்றி தோழரே!
    தங்களது செம்மொழி சேவைக்கு
    செருக்கினை வென்றெடுக்கும்
    செந்தமிழின் நன்றி!
    மகிழ்ச்சி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  3. என்றுமே நம் தமிழ் செம்மொழியே. அருமையான பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
  4. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து முனைவர் அய்யா அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. நல்ல நாளில் அருமையான பதிவினை எமக்கு அளித்துள்ள புதுவையாரெ, தமிழ் செம்மொழி இணையத்திலும் அரியணை ஏறும் என்பதில் உறுதியே கொள்வோம். நன்றி.

    RépondreSupprimer
  6. தமிழ்த் தாயே வருகை தந்தது போல் இருந்தது சகோ! தங்களது வருகை!
    உண்மைதான்! இந்த பதிவானது தற்போது வாட்ஸ் அப்பில் வலம் வர துவங்கி உள்ளது தோழர் மது அவர்களின் அரிய முயற்சியால்! செம்மொழி சிறக்கட்டும்! நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. நல்லதொரு நாளின் நல்லதொரு விடயமளித்த நண்பருக்கு நன்றி
    தமிழ் மணம் மூன்றா ? நான்கா ? தெரியவில்லையே...

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல நாளில் நல்ல மனிதரின் நல்ல வருகை நலம் பயக்கும் நண்பரே!
      நன்றி நல்ல மதிபெண் அளித்தமைக்கு.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. தமிழ் வாழ்க. அது யார் ஒரு கருங்காலி, தமிழுக்கு எதிராக மைனஸ் ஓட்டுப்போட்டது?

    RépondreSupprimer
    Réponses
    1. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து முனைவர் அய்யா அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  9. நம் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாளான இன்று அது குறித்து தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

    RépondreSupprimer
    Réponses
    1. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து அய்யா அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி!
    த ம 6

    RépondreSupprimer
    Réponses
    1. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து நண்பர் அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. Réponses
    1. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து முனைவர் அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. நல்ல தகவல்.
    நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து நண்பர் அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. நற்றமிழ் வாழ்க.

    RépondreSupprimer
    Réponses
    1. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து அய்யா அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. இந்த நல்ல நாளில் அருமையான பதிவு சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. சகோதரி!
      செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து சகோதரி! அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. இதற்குமா எதிர் வாக்கு ? வாழ்க தமிழனின் தனியொரு குணம் !

    RépondreSupprimer
    Réponses
    1. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து நண்பர் அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. வையகம் போற்றும்படி! வலம்வரும், நம் தமிழ்மொழி,
    இணையத்தின் இணையில்லாத இதய மொழியாகவும்,
    மலர்ந்து மணம் வீச வேண்டும்! என்று இந்நன்னாளில் உறுதி ஏற்போம்!!!த.ம+9

    RépondreSupprimer
    Réponses
    1. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து நண்பர் அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. சிறப்பான தகவல் பகிர்வு...

    RépondreSupprimer
    Réponses
    1. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து நண்பர் அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. அருமையான தகவலுடன் இனிக்கும் பதிவு.

    RépondreSupprimer
    Réponses
    1. செம்மொழியின் "தமிழ்" உயர்வு குறித்து நண்பர் அவர்கள் தந்த கருத்து செந்தேனாய் இனித்தது. சிறப்புமிகு வருகை!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer