jeudi 11 décembre 2014

"பட்டினத்தடிகளார் பார்வையில் மூவர் உலா"

"பட்டினத்தடிகளார்" 

  
ஒருவர் செயற்கரிய செயலை தம்முடைய செயலின் மூலம் செய்தால்தான்
பெறுவதற்கு அரிய பெரும்பேற்றினை இறை அருளால் பெற இயலும் என்பதை "பட்டினத்தடிகளார்"
பின்வரும் பாடலின் மூலம் இலை மறை காயாக உணர்த்தியுள்ளார்! அந்த உண்மையை நாமும்தான் அறிவோமே !

இதோ அந்த பாடல்:

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன், மாதுசொன்னசூளால் இளமைதுறக்க வல்லேன் அல்லன், தொண்டு செய்துநாள்ஆறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லன், நான் இனிச் சென்றுஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே

-பட்டினத்தடிகளார்- இந்த பாடலிலே சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு அருள் பெற்ற அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் மூவரை மட்டும் பாராட்டி விட்டு தம்முடைய பக்தியை தன்னடக்கத்தின் மூலம் குறைவாக மதிப்பீடு செய்துகொண்டு பாடுகிறார் பட்டினத்து அடிகளார்.
 
மேலும், இவரே கடவுளிடத்தில் தமக்குப் போதுமான அன்பில்லை என்றும் குறைப்பட்டுக் கொள்கிறார் என்றால் ?
நம் நிலைதான் என்ன….? 
அவர் குறிப்பிடும் மூவரில் முதலாமானவர் !

சிறுத்தொண்ட நாயனார்


சிவபெருமானிடம் பக்தி கொண்டொழுகியதோடு நாளும் ஒரு சிவனடியார்க்கு உணவிட்டு அவர் உண்டபின்தான் உண்பது என்ற நியதி வகுத்து வழுவாது அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தவர். தன் மகனை பிள்ளைக் கறி சமைத்து அன்பு குறையாமல் சிவபெருமானுக்கு  விருந்து படைத்தவர்.  

அடுத்து,

 திருநீலகண்ட நாயனார்.

 
சிறந்த சிவபக்தர்.

எம்மைத் தீண்டாதீர் திருநீலகண்டத்தின் மீதுஆணைஎன்று மனைவி ஆணையிட, செயலுக்கு வருந்தி உன்னை மட்டுமல்ல எம்மைஎன்று பன்மையில் கூறியதால்,

இனி எப்பெண்ணையும் தீண்ட மாட்டேன்என்ற உறுதியுடன் முதுமை வரை உண்மையாக வாழ்ந்து வந்தவர். 

மூன்றாவதாக,

கண்ணப்ப நாயனார்.

 

 

வேடர் குலத்தில் பிறந்து திண்ணன் என்ற பெயரோடு வேட்டையாடித் திரிந்தவர்.

ஊனுக்கு ஊனிட்டால் உற்ற நோய் தீரும்’ 


என்ற பழமொழி நினைவுக்கு வர, தம் கண்ணை அம்பால் பெயர்த்து குருதி வழியும் சிவபெருமான் கண்ணில் அப்பினார். குருதி நின்றது. மகிழ்ந்தார், பின் இடக் கண்ணில் குருதி வந்தது. உடனே திண்ணன் சற்றும் அஞ்சாது இதற்குரிய மருந்து என் கைவசம் இருக்கிறது என்று தம் இடக்கண்ணை அம்பால் தோண்டுவதற்கு முற்படும்போது, “நில்லு கண்ணப்பஎன்று இறைவன் அவரை தடுத்தாட்கொண்டார்.

எனவே பட்டினத்தடிகளாரின் பண்பினை பின்பற்றி நாமும் செயற்கறிய செயலை நன்கு செய்து பெறுவதற்கு அரிய பெரும்பேற்றினை இறை அருளால்  பெறுவோமே! பெருவாழ்வு வாழ்வோமே!

புதுவை வேலு

நன்றி!: தினமணி

22 commentaires:

 1. வணக்கம்
  காலைப்பொழுதில் முதல் முதலாக கருத்துரை இட்ட தங்களின் பதிவே அதுவும் பக்தி அருள் நிறைந்தவை அருமையான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன். படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகு பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம்
   காலைப்பொழுதில் முதல் முதலாக கருத்துரை இட்ட
   தங்களது தமிழ் மரபு மிகவும் போற்றுதலுக்குரியது அய்யா!
   பட்டினத்தாரின் பதிவிற்கு சிறப்பாய் அமைந்தது தங்களது
   கருத்து! மேலும் அவரது கையில் இருக்கும் கரும்பாய் இனித்தது!
   வருகைக்கும் தொடர் கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 2. பட்டினத்தடிகளாரின் பண்பினைப் பின்பற்றுவோம் நண்பரே
  நன்றி

  RépondreSupprimer
  Réponses
  1. பண்பினை பின்பற்றும் பாங்கினை உரைத்த நண்பரே!
   நல்ல பல கருத்துக்களை நாளும் தவறாது
   அளித்து வரும் ஆற்றல் போற்றுதலுக்குரியது!
   தொடர் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி!!

   என்றும் அன்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. அருமையான தொகுப்பு அய்யா ...
  வாழ்த்துக்கள்

  RépondreSupprimer
  Réponses
  1. பட்டினத்தார் பாடல்களுக்கு
   பெருமை சேர்க்கும் வகையில்
   வருகை தந்து கருத்தினை தந்து
   பாராட்டிய தோழரே!
   உமக்கு எமது மனங்கனிந்த நன்றிகள்!
   தோழமையுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. நல்ல பதிவு நண்பரே,,,, வாழ்த்துகள்.

  RépondreSupprimer
  Réponses
  1. நல்ல பதிவாளர்களை தேர்வு செய்யுங்கள்
   நண்பரே!
   வாழ்த்துக்கள்!
   ஓயாத பணியிலும்
   ஒரு வரியில் கருத்தினை தந்த
   ஒட்டகத்து தேசத்து பிதாவே!
   ஓங்குக உம் புகழ்!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. தாங்கள் தெரிவு செய்த அடிகள் மிகவும் அருமை. எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம் என்ற சொற்றொடர் 10 ஆண்டுகளுக்கு முன் சைவ சித்தாந்த வகுப்பில் நான் முதன்முதலாகக் கேள்விப்பட்டது. பின்னர் பல முறை படித்துவிட்டேன். தங்களது பதிவு நினைவை புடம்போட்டது. நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. "எம்மைத் தீண்டாதீர் திருநீலகண்டத்தின் மீதுஆணை’ "
   அய்யா!
   தங்களை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்ற இந்த வரிகளை நினைவுறும்போது,
   கட்டுப் பாடும், ஒழுக்கமும், கண்முன் வந்து போகிறது அய்யனே!
   தங்களை போன்றவர்களின் வருகை மதிக்கத் தக்கது .
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. பட்டினத்தடிகளாரின் பாடலை படித்து பாா்த்தேன். ஒரு சில வாா்த்தைகளுக்கு அா்த்தம் புாியவில்லை. பின்வருவனவற்றையும் முழுமையாக படித்து விட்டு மற்றொரு முறை பாடலை படித்து பாா்த்தேன் .ஆஹா! என்று என்னை அறியாமலேயே சொல்ல தோன்றியது.மீண்டும் மீண்டும் படிக்க தூண்டியது. இதை போன்ற நல்ல பதிவுகளை பதிவு செய்யும் சகோதரா் திரு.வேலு அவா்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நன்றியுடன் தொிவித்துக் கொள்கிறேன்.
  நல்லதொரு பக்தி பதிவு. அருமை! நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் சகோதரி!
   பட்டினத்தார் பாடலை ஒருமுறைக்கு இருமுறையாக படித்து விட்டு
   அனுபவ ரீதியான கருத்தினை அற்புதமாக வெளிக் கொணர்ந்து காட்டியமைக்காக
   குழலின்னிசை உங்களை போற்றி பாராட்டுகிறது.
   இதுபோன்ற வெளிப்படையான விமர்சனங்கள் கிடைப்பது என்பது அரிதினும் அரிதாகை வருகிறது.
   நல்ல கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 7. மிகவும் அருமையான பகிர்வு ஐயா! பட்டினத்தாரின் ஆடல்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?!!! மூவர் உலா அருமை!

  RépondreSupprimer
 8. வணக்கம் அய்யா!
  பட்டினத்தார் கையில் உள்ள கரும்பினைப் போல்
  இனித்தது உங்களது கருத்து!
  வருகை தந்து சிறப்பு செய்தமைக்கு மிக்க நன்றி!
  புதுவை வேலு

  RépondreSupprimer
 9. இன்றொரு தகவல் தந்தீர்
  இனிமையாய்ச் சிவனைத் தொட்டு
  அன்றிரு பட்டி னத்தார்
  அவர்சொலும் செருத்தொண் டன்பின்
  கண்ணப்பன் நீல கண்டன்
  கதையையும் சொன்னீர் இன்னும்
  என்றுமே அரிய செய்தி
  எங்களுக் கறியத் தாரீர்!!

  நன்றி அய்யா!

  RépondreSupprimer
  Réponses
  1. இன்னும்
   என்றுமே அரிய செய்தி
   தங்களுக்கு தருவதற்கு
   தமிழே!
   "கருத்து நிதி வேண்டுகிறேன்
   வேர் கொண்டு புறப்படு!
   நேர்மையோடு நேர்படு!
   நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 10. பட்டினத்தார் பற்றி அதிகம் அறிந்தவன் அல்ல நான். உங்களின் இந்த பதிவின் மூலம் அவரின் சிறப்பை அறிந்தேன்.

  நன்றி
  சாமானியன்

  RépondreSupprimer
  Réponses
  1. பாமரனும் அறிவான் பட்டினத்தார் பாடல்களை
   எங்கள் சாமானியன் அறியாதது ஆச்சர்யமே!
   இருப்பினும் உண்மையான விமர்சன கருத்தை
   பதிவு செய்தீர்கள்!
   தங்களது உண்மை அனுபவ கட்டுரை பதிவுகளை போன்று!
   நன்றி சாமானியரே!
   அன்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 11. அருமையான பதிவு. பட்டிணத்தடிகள் பாடல் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. அருமை நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு,
   வணக்கம்!
   பட்டினத்தாரின் பாடலை படித்து இன்புற்று இனிய கருத்தினை
   தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி!
   தங்களை போன்றவர்கள் தரும் கருத்தினை வரவேற்கிறோம்!
   மிக்க நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு சுவையே.
  தேர்வு செய்த பாடல் அருமை. கடவுள் மேல் கண்மூடி தனமாக அன்பு கொண்டு பிள்ளையை கொல்லுதல், கண்ணை நோண்டுதல், ...... , அப்பப்பா.......... புதுவை வேல் அவர்களே.

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் இனிய நன்றி நண்பரே!
   உண்டென்றால் அது உண்டு!
   இல்லையென்றால் - அது
   இல்லை!
   அன்பின் உச்சத்திற்கு தீர்வு முடிவில் சுபம்!
   அதுதான் சிவம்!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer