dimanche 14 décembre 2014

களிற்றின் நாணம் ( நலந்தானே? நலந்தானே? நாணம் வந்தால் நலந்தானே?)


களிற்றின் நாணம் 

 சங்க கால இலக்கியங்களின் வாயிலாக தமிழ் மொழியின் தொண்மையினையும், தமிழர்களின் சிறப்பையும் நன்கு நாமறிவோம்.
அந்த வகையில் தமிழர்களிடம் மட்டுமன்றி,
விலங்குகளிடமும் வீரஉணர்வும்,
மான உணர்வும், "  நாணமும் "  இருந்தன என்பதற்கு " முத்தொள்ளாயிரம்" பாடல்
ஒன்று  சான்றாக விளங்குகிறது.
 

 கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்முடியிடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்புபொல்லாமை நாணி புறங்கடை நின்றதேகல்லார்தோட் கிள்ளி களிறு.           - முத்தொள்ளயிரம்.


  

 "  களிறு"   போர்க்களத்தில் மறவர்களாலும்  இடிக்க முடியாத மதில்களைத் தம்முடைய கிம்புரிக் கொம்புகளால் இடித்துத் தள்ளியது. அவ்வாறு இடிக்கும் போது கிம்புரியொடு கொம்பும் ஒடிந்தது. அத்துடன் விட்டதா? மதிலை அழித்து உள்ளே சென்று பகை மன்னரைப் பாய்ந்து தள்ளிக் காலால் இடறிக்கொண்டே போகிறது. அப்படிப் போனதால் கால்நகங்கள் தேய்ந்து போயின. கால் நகத்தையும், கொம்பையும் இழந்த பின்பும் தம் மன்னரைத் தாங்கி எதிர்வந்த பகையினைத் தம் துதிக் கையால் தடுத்து வெற்றியைத் தேடித் தந்தது அந்த "களிறு".


போர் முடிந்து அனைவரும் வீடு திரும்பினர்.
போருக்குச் சென்ற மறவர்களில், காலிழந்தும், கையிழந்தும் திரும்பிய வீரர்களும், தம் மனைவிமார்களுடன் இன்ப மொழி பேசி உறவாடுகையிலே, வெற்றிக்கு மூலமாய் நின்று, வீர விழுப்புண்கள் பல ஏற்று, தம் மன்னனைக் காத்த ஐந்தறிவு படைத்த களிறு மட்டும், அந்த வேளையில், தன் அன்புக் காதலியைக் காணமுடியாமல் ஓரத்தில் ஒதுங்கி, தனித்தே நிற்கிறது.

காரணம் !
 
"நாணம்" (அதாங்க ! வெட்கம்னு சொல்லுவாங்களே!)

ஆனால்? அந்தக் களிறோ கொம்பும், நகமும் இழந்த கோலத்தில் தன்னுடைய ஜோடியின் முன்பு (பிடி)  செல்ல  நாணியது.

 தனது "கொம்பும், நகமும், இழந்த இக்கோலத்தைக் கண்டு தம்முடைய ஜோடி (பிடி) எள்ளி நகையாடுமே! 

மதிலைவிடத் தம் கொம்புகள் உரமற்றவை எனக் கேலி பேசுமே!'
என்ற வெட்கத்தால், தன் பிடியினைக் காணாமல், ஒதுங்கி நின்றதாம்!
நாணத்தால் நடுங்கி நின்றதாம்!  ஆம் வெட்கத்தால் வெளியிலேயே நின்றதாம்!

"களிறு" தனது "பிடி"யின் மனதில் பிடிப்பினை ஏற்படுத்தியது! நாணத்தால் நாணியவாறே! அன்றோ?

தமிழ் இலக்கியங்களில் விலங்குகள் பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும் "களிறு" (யானை) அளவுக்கு வேறெந்த விலங்கைப் பற்றியும் இவ்வளவு அழகாகச் சொல்லப்பட்டதில்லை. . முத்தொள்ளாயிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், சேர சோழ பாண்டியர்கள் மேல் ஆளுக்கு தலா தொள்ளாயிரம் என்று பாடப்பட்ட  பாடல்களில் நமக்கு கிடைத்திருப்பவை வெறும் 108 பாடல்கள் மட்டுமேஅந்த நூற்றியெட்டில்,
33 பாடல்களில் யானைகள் பேசப்படுகின்றன என்பது சிறப்பம்சமாகும்.

முத்தொள்ளாயிரம் வழங்கிய நாணத்தின் சிறப்பை உணர்த்தும் பாடலை படித்தாவது நமக்கும் கொஞ்சம் நாணம் வந்தால்?  நலந்தானே?  நலந்தானே?
நாணம் வந்தால் நலந்தானே?

புதுவை வேலு 

நன்றி: (தினமணி)

19 commentaires:

 1. களிறுக்கு ஒத்த விலங்க வேறொன்றுமில்லையே
  களிறும் நாணும்
  வியந்தேன் நண்பரே
  நன்றி

  RépondreSupprimer
  Réponses
  1. வியந்து வந்து கருத்தினை தந்த கரந்தையாரே
   உயரந்து நிற்கின்றீர்கள் எனது நெஞ்சில்!
   வலைசரத்தில் வலம் வந்தீர்!
   வாழ்த்துக்கள்!
   என்றும் அன்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. இதுவரை இவ்வாறான செய்தியை நான் அறியவில்லை. தற்போது பக்தி இலக்கியங்கள் படித்துவருகிறேன். விரைவில் சங்க இலக்கியங்கள் படிக்க உள்ளேன். அதற்கு தங்களின் பதிவு உதவும்.

  RépondreSupprimer
  Réponses
  1. அன்புள்ள அய்யா!
   தங்களை போன்ற அறிஞர்களின் அன்பும் ஆதரவுமே!
   இதுபோன்ற தேடல் முயற்சிக்கு ஆக்க சக்தியாக அமைகிறது.
   நல்ல கருத்தினை நாளும் தருக! மீண்டும் வருக!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. முத்தொள்ளாயிரம் மூலம் நாணத்தின் நளினத்தை அழகாக பதிவு செய்து உள்ளீர்கள்...

  தொடர வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
 4. அருமை நண்பரே!
  நாணத்தின் நளினத்தை நயம் பாராட்டி
  நல்ல கருத்தினை பதிவு செய்தீர்!
  மிக்க நன்றி!
  வருகை தொடர்க!
  புதுவை வேலு

  RépondreSupprimer
 5. தங்கள் மேலான பார்வைக்கு
  http://nadainamathu.blogspot.com/2014/02/muththollayiram-critical-study.html

  RépondreSupprimer
  Réponses
  1. மேலும் இது குறித்த அதிக தகவல் அறியப் பெற்றேன்!
   மிக்க நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 6. எவ்வளவு சுவாரஸ்மான கற்பனை ...
  வில்லிங் சஸ்பென்சன் ஆப் டிஸ்பிலிப் ... வாவ்

  RépondreSupprimer
  Réponses
  1. சுவாராசியமான கற்பனைக்கு மேலும் அழகு சேர்த்தது தோழரே!
   உமது கருத்து!
   வருக! வருக! தருக! தருக!
   இதுபோன்ற பொன்னொளி வீசும் கருத்துக்களை!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. “களிறைப் பிடித்துப் பிடியை வளைத்துக்
  கருத்தைக் கவர்ந்த விழி! - அரும்
  பொருளைப் பகிர்ந்த புதுவைக் குழலின்
  னிசையில் எழுந்த மொழி!“

  அரிய செய்திகளை அறிந்து கொண்டேன் அய்யா!
  நன்றி

  RépondreSupprimer
 8. மிளிரும் கருத்தை மின்னலாய் வடித்த
  ஒளிரும் முகத்தை ஒன்பது கோளும்
  ஓயாது காணும் காலம் எதுவோ?
  மாயவனே மறுமொழி கூறுவாயோ?
  கருத்தினை கன்னலாய் இனிக்கும் வகையில் தந்தீர்!
  நன்றி!
  புதுவை வேலு

  RépondreSupprimer
 9. களிறு பற்றிய அருமையான பதிவு !

  மனிதன் வியந்து நோக்கும் விலங்குகளில் களிறுக்குத்தான் முதலிடம் ! பண்டைய காலத்தில் யானைப்படை கொண்ட தேசம் பாரதம் மட்டுமே. தைமூர் தொடங்கி பாபர் வரை எல்லைதாண்டி வெல்ல வந்தவர்களையெல்லாம் வெலவெலக்க வைத்ததாயிற்றே களிறு !

  நன்றி
  சாமானியன்

  RépondreSupprimer
 10. வாருங்கள் சாமானியரே!
  களிற்றின் சிறப்பை பார்த்தீர்களா?
  களிற்றை பற்றி சிறப்பான கருத்தை தந்தீர்கள்!
  இன்று!
  களிற்றின் மீது அமர்ந்து ஊர்வலம் போகிறீர்கள்!
  என்ன கருத்து கருப்பு சாமி!
  புரிய வில்லையோ!
  இன்று!
  வலைச் சரத்தில் வலம் வந்ததைத் தான்
  சொல்லுகிறேன்!
  வாழ்த்துக்கள்!
  புதுவை வேலு

  RépondreSupprimer
 11. Ce commentaire a été supprimé par l'auteur.

  RépondreSupprimer
 12. ஐந்து அறிவு ஜீவனுக்கு காமமே பிரதானம். இந்த மாதிரி யானை செய்திகள் புதுமையே.
  நண்பரே, முள் குத்தினால் மேட்டர் ஓவர், இதில் நகம் எங்கே, பல் எங்கே. கற்பனைக்கும், கனவுக்கும் அளவில்லை புதுவை வேலு அவர்களே, இருந்தாலும் புதிய தகவல். நன்று.

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. ஐந்து அறிவு ஜீவனுக்கு காமமே பிரதானம்.
   அப்படி என்றால் ஆறு அறிவு படைத்தவர்கள்
   அடக்கியாளும் அறிஞர்களா? நண்பரே!

   மேட்டர் ஓவர் என்பது நடந்து கொள்ளும் தன்மையில் உள்ளது!
   கற்பனையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள் கலா ரசிகரே!
   வருகைக்கு மிக்க நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 13. "களிற்றின் நாணம்"அழகான கற்பனை ரசிக்க வைத்தது.தோ்ந்தெடுத்து போடப்பட்ட படங்கள் தங்களின் எழுத்து நடைக்கு மேலும் அழகு சோ்த்தது . (குறிப்பாக இரண்டாவது படம்) களிற்றின் நாணத்தை அப்படம் உணா்த்துகிறது.மிக அழகு!
  வாழ்த்துக்கள்! நன்றி!

  RépondreSupprimer
 14. களிற்றின் நாணத்தை நயம்பட நளினமாய் உரைத்தீர் சகோதரி!அருமை!
  களிறு முன்னே வர
  தங்கள் கருத்து காலதாமதமாக பின்னே வருகிறதே?
  ஏன்? யானையைக் கண்டால் பயமோ?
  கருத்தினை தந்த சகோதரியே!
  மிக்க நன்றி!
  புதுவை வேலு

  RépondreSupprimer