dimanche 7 décembre 2014

" நுணலும் வெற்றிக் கோட்டைத் தொடும் "
நுணலும் வெற்றிக் கோட்டைத் தொடும் "

 நன்னூல் படித்த நமக்கெல்லாம்
நன்னெறி உணர்த்தும் கதை ஒன்று!
இதோ அந்த நீதிக் கதை:

சிறிய தவளைகள்  யாவும் ஒன்று சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. அப்போது

ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில் உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டியின் விதி. முதலில் தொடுபவருக்கு வெற்றிக் கோப்பை பரிசாகக் கிடைக்கும். அந்த கோப்பையில் பொறிக்கப் பட்ட வாசகம் என்ன தெரியுமா?

"நுணலும் தன் வாயால் கெடும்"-


இதைத் தானே நீங்கள் சொல்ல நினைத்தீர்கள்!
இல்லை! இல்லை!
அந்த வாசகம் யாதெனில்:

நுணலும் வெற்றிக் கோட்டைத் தொடும்முதலில் தொடுபவர் வெற்றியாளர். 
ஆம்!
 போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். 
ஒரு சிலர் இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தின் உச்சியை தொடவே முடியாது! சாத்தியமே கிடையாது!என கூறினார் 


கூட்டத்திலிருந்து இப்படியாக கோரஸ் கோஷங்கள் வந்த வண்ணமே இருந்தன. மெல்ல

மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போய் போட்டியிலிருந்து விலகி கொண்டன !

இதில் எந்தத் தவளையும் அந்த  உச்சியை தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — என்று கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்தனர்.  
                           
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து விலகி கொண்டன ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.

எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி, இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரே ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது


 சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது.
 அனைவரும் வியப்பால் வியந்தனர்.  எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது ? என ஆச்சர்யம் அடைந்தனர்.  

அப்போது தான் தெரிந்தது,
கோபுரத்தின்  உச்சத்தை தொட்ட அந்தத் தவளைக்கு!

உண்மையிலேயே காது கேட்காது என்று.


முடியாதவர்கள், அவர்களால் முடியாததை,
 உன்னாலும் முடியாது என்றுதான் சொல்லுவார்கள்.


சொல்லுபவர்கள் சொல்லட்டும்.
அவர்களிடம் நீ !  
வெல்லுபவர்கள் வெல்லட்டும் என்று

 "செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”

"செவிடர் காதில் சங்கொலி" என்பது கேட்காதுதான்!

ஆனால், வெற்றியின் திசையினை அவர்கள் அறிவின் ஆற்றல் அறியும் அல்லவா?


தோல்வியின் சத்தத்தை  சங்கே முழங்கினாலும்  தொடர்ந்து

உன் வழி செல் |

உன்னை நீ அறிந்தால்

வெற்றி!

அது உன்னுடையதே!புதுவை வேலுநன்றி:(அறிவு கதைகள்)

26 commentaires:

 1. ஆகா
  அருமை நண்பரே
  உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
  வெற்றிக் கோட்டை எட்டிப் பிடித்திடலாம்

  RépondreSupprimer
  Réponses
  1. "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்" என்று!
   வெற்றிக் கோட்டை எட்டிப் பிடித்திட
   நல்லதொரு வழியை எனக்கு காட்டியுள்ளீர்கள். நன்றி! கரந்தையாரே
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. பகிர்வு அருமை அய்யா!
  வலைத்தளமும் புதுப் பொலி வு பெற்றுள்ளது.
  தமிழ்மணத்தில் இணைக்கவில்லை போலுள்ளதே!
  இணையுங்கள் விரைவில்
  நன்றி

  RépondreSupprimer
  Réponses
  1. வருகை தந்து பகிர்வுக்கு பெருமை சேர்த்தீர்கள்!

   புதுப் பொலிவிற்கு தங்களது அன்பும் ஒரு காரணம்
   என்பதை இங்கே பதிவு செய்ய விருபுகிறேன்.
   வருகையும், கருத்திடலும் பொங்கி வரும் காவிரியாய்
   (அகத்தியர் கண்ட காவிரி) பெருகட்டும்!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. தன்னம்பிக்கையுடன் குறுக்கொல், வெற்றியை நோக்கி செல்லும். இங்கு தவளை செவிடாக இருந்ததால் வெற்றி இலக்கு சாத்தியமே. முயல்- ஆமை கதைக்கு அப்பால் தவளை கதை. நன்றி

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் நண்பர் சத்தியா அவர்களே!
   முன்னர் வந்த முயல் ஆமை பதிவினையும்
   பின்னர் வந்த நுணலும் வெற்றிக் கோட்டைத் தொடும் பதினினையும் நினைவுகூர்ந்து
   கருத்து பதிவிட்ட தங்களது நினைவாற்றல் போற்றத்தக்கது!
   மாற்றுத் திறனாளிகளின் மகத்துவத்தை அருமையாக வெளிப் படுத்தி
   கருத்து பதிவு செய்துள்ளீர்கள்!
   நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 4. அருமை நண்பரே, அருமை !

  கோபித்துக்கொள்ளாதீர்கள்... இதுவரையிலான உங்களின் பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்தது இதுதான் !


  "செவிடர் காதில் சங்கொலி" என்பது கேட்காதுதான்!
  ஆனால், வெற்றியின் திசையினை அவர்கள் அறிவின் ஆற்றல் அறியும் அல்லவா?...

  பல நேரங்களில் " வெற்றி சங்கொலி " காதில் விழாத செவிடர்களாய் இருப்பதில்தான் தொடர்வெற்றியின் ரகசியம் உள்ளது...

  காதில் விழும் வெற்றி சங்கொலி புத்திக்குள் புகுந்து கர்வமாகும் போதல்லவா ஒரு வீரனின் தோல்வி துவங்குகிறது ?!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் நண்பர் சாமானியன் அவர்களே!
   வருக! வருக!
   எனது முதல் பதிவினை வாழ்த்தி கருத்து பதிவு
   செய்தமைக்காக பெருமையை எனது புத்திக்குள் புகுந்து
   கர்வமாகாமல் பார்த்து செயல் படுகிறேன்.
   நல்ல நண்பர்களை பெற்றதுபோல் இனி
   நல்ல பல படைப்புகளையும் தருவதற்கு முயல்கிறேன்.
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
  2. அய்யா நண்பரே !

   " என்னை கவர்ந்த " என்றுதான் குறிப்பிட்டேனே தவிர, மற்றவை மோசம் என்று அல்ல சாமி !!!

   என் கைக்கு கிடைத்த ஒரு முத்து அழகு என்று சொல்வதால் கடலில் கிடக்கும் முத்துக்களெல்லாம் அழகற்றவையா என்ன ?! ( சபாஷ் சாமானியா ! )

   நன்றி
   சாமானியன்

   Supprimer
  3. நல்லதொரு வழியை எனக்கு காட்டியுள்ளீர்கள். நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. “முடியாதவர்கள், அவர்களால் முடியாததை,
  உன்னாலும் முடியாது என்றுதான் சொல்லுவார்கள்.
  சொல்லுபவர்கள் சொல்லட்டும்.அவர்களிடம் நீ ! வெல்லுபவர்கள் வெல்லட்டும் என்று
  "செவிடாக இருப்பதே சிலநேரங்களில்பொருத்தமானது,”
  அருமையான உண்மையான வாிகள் .மிகவும் கவா்ந்தது. இக்கதையினை இது வரை கேட்டதில்லை.புதுமைகளை அள்ளி தரும் குழல் இன்னிசையின் இன்றைய இசையும் எனக்கு புதுமையே .நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. சகோதரியே!
   எங்கே வலை தளம் பக்கம்
   காணவில்லையே?
   அலுவல் அதிகமோ?
   வந்து விட்டீர்கள் அல்லவா!
   இனி குழலின்னிசை புதுமைகளை
   இசைக்கும்!
   புதுவை வேலு

   Supprimer
 6. நுணலும் வெற்றிக் கோட்டைத் தொடும்...நல்ல கதையாக இருக்கிறது.

  பல சமயங்களில் காது கேட்காமல் இருப்பதே நலம் தான். நம் நம்பிக்கை பாதிக்காமல் நாம் முன்னேற முடியும்.

  புது மாற்றம் செய்துள்ளீர்கள் தளத்தை..கண்களுக்கு குளுமையாக இருக்கிறது

  RépondreSupprimer
  Réponses
  1. அன்பு சகோதரியே!
   தங்களது கருத்தினை காது கொடுத்து
   படிக்க சொல்லிக் கேட்டேன்!
   கணகளால் பார்ப்பதைக் காட்டிலும்
   காதால் கேட்பது சுகமோ சுகம்!
   நல்ல கருத்தினை தந்தமைக்கு நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 7. நல்லதொரு கதை! பகிர்வுக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. வாருங்கள் நண்பர் தளீர் சுரேஷ் அவர்களே!
   தங்களது வருகை வளமானது!*
   கருத்தோ பதமானது!
   மிக்க நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 8. அருமையான நடை வாழ்த்துகள்

  RépondreSupprimer
  Réponses
  1. வெற்றி நடை போட்டு வந்து குழலின்னிசையினை கேட்ட
   கில்லர்ஜிக்கு மிக்க நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 9. உதார் விட்ட சொரக்கட்டை என்றுதான் கேள்விபட்டேன்.இங்கு ‘நுணலும் வெற்றிக் கோட்டைத் தொடும்’ என்று அறிந்தேன்.

  RépondreSupprimer
 10. தன்னம்பிக்கை தரும் தரமான கதை..பாராட்டுக்கள்.

  RépondreSupprimer
 11. அருமையான கதை. பகிர்ந்து கொண்டதற்குப் பாராட்டுகள்.

  RépondreSupprimer
 12. நண்பரே!
  முதன் முதலாக தவளையின் மீது
  காதல் பாட்டு பாடிய நிறம் மாறாத
  (வெங்கட் நாகராஜ்)பூ விற்கு
  குழலின்னிசையின் இனிய நன்றி!
  தொடர் கருத்து என்றும் தாருங்கள்!
  நன்றியுடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 13. தன்னம்பிக்கை தரும் தரமான கதைக்கு
  " நுணலும் வெற்றிக் கோட்டைத் தொடும் "
  பாராட்டு தெரிவித்து கருத்திட்டமைக்கு
  நன்றி அம்மா!
  புதுவை வேலு

  RépondreSupprimer
 14. வலிப் போக்கரே
  உதார் விட்ட சொரக்கட்டை புதிய பழமொழியை உங்களால் நான்
  அறிந்து கொண்டேன்!
  மிக்க நன்றி!
  புதுவை வேலு

  RépondreSupprimer
 15. அருமையான நீதிக் கதை! பல எதிர்மறை விசயங்களுக்கு நம் காதைச் செவிடாக்கிக் கொள்வது நல்லதே! நல்லதை மட்டும் கேட்டால் போதுமே!

  RépondreSupprimer
 16. " நல்லதை மட்டும் கேட்டால் போதும்"
  ஆம்! உண்மை அய்யா!
  தாமதமான வருகை ஆயினும்
  தங்கமான கருத்து
  உமது கருத்து அய்யா!

  என்றும் நன்றியுடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer