lundi 22 décembre 2014

அள்ளித் தந்த அன்னை (இந்திய "விவசாயிகள் தினம்")



"விவசாயிகள் தினம்" 

 

 



இன்று
உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனம் சொல்லும்
வசந்த நாள்!


சந்தனம் போல்
மனம் கமழும்
சுகந்த நாள்!


நம்மை படைத்தான்
நான்முகன்
பிரம்மன்


உண்ணும் உணவை
படைத்தான்
இறைவன்!


அந்த
அள்ளித் தந்த அன்னையின்
அன்பை!


அனுதினமும்
போற்றுவோம்
வாரீர்!



 இன்று!
 இந்திய 
"விவசாயிகள் தினம்"


புதுவை வேலு

28 commentaires:

  1. தினமும் இங்கே வந்து பயனுள்ள செய்திகளை தெரிந்து செல்கிறேன்.மிக்க நன்றி சகோ!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      தங்களின் வருகையின் சிறப்பை போற்றும் வகையில்
      பயனுள்ள செய்திகளை பகிர்ந்தளிக்க குழலின்னிசை தொடர்ந்து
      இனிய நாதம் இசைக்கும்!
      புதுவை வேலு

      Supprimer
  2. விவசாயிகள் தினம் போற்றுவோம்
    நன்றி நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. நல்லதை நாடே போற்றும்!
      நாட்டின் முதுகெலும்பை "விவசாயத்தை
      போற்றி கருத்துரைத்த கரந்தையாரே
      உமக்கு எனது நன்றி என்னும் மாலையை
      நற்றமிழால் சூட்டுகிறேன்.
      புதுவை வேலு

      Supprimer
  3. சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றில் உள்ள குட புலவியனார் என்ற புலவரின் பாடலான ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.’ என்ற பாடல் நம்மை வாழ வைக்கும் நல்லேர் உழவர்களை நாம் மறக்கலாகாது என்பதை அருமையாய் சொல்கிறது. ஆனால் நாமோ நமக்கு சோறிடும் உழவர்களை மறந்துவிட்டு வேறு எவரெவருக்கோ முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
    ,
    காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்த நாளான இன்றைய நாளை ‘இந்திய உழவர்கள் தினம்’எனக் கொண்டாடி வருவதை நினைவூட்டியமைக்கு நன்றி.

    மூன்றாம் வரியில் வந்தனம் என மாற்றிவிடுங்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றில்
      பாண்டியன் நெடுஞ்செழியனை,
      "குடபுலவியனார்"
      சிறப்பித்துப் பாடும் போது உணவளிக்கும் சிறப்பைப் பாடுகின்றார்

      ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

      உண்டி முதற்றே உணவின் பிண்டம்

      உணவெனப் படுவது நிலத்தோடு நீரே!”

      பெருஞ்செல்வம் கொடுத்த சிறப்பு.

      இலக்கியம் தந்த பாடலை இந்த வேளையில் நினைவூட்டி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அய்யா!

      மேலும்,
      ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில்
      விவசாயத்தின் சிறப்போடு ஒத்ததொரு பாடல் இதோ;

      ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

      மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை

      மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

      உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,

      உயிர்க் கொடை பூண்ட உரவோய்!

      நூல்: மணிமேகலை

      பாடியவர்: சீத்தலைச் சாத்தனார்

      மணிமேகலையே,

      பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி.

      அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம்.

      ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு!

      "கடவுள் என்னும் முதலாளி
      கண்டெடுத்த தொழிலாளி
      விவசாயி! விவசாயி ! போற்றுவோமே!
      புதுவை வேலு

      Supprimer
  4. என்றும் அவர்களின் தினம் தான்...

    RépondreSupprimer
    Réponses

    1. நாம் உண்ணும் உணவை படைத்தவர்கள்
      விவசாயிகள் என்பதால்தானே நண்பரே!

      "என்றும் அவர்களின் தினம் தான்" என்று சொல்லி நின்றீர்!
      அருமையான கருத்துப் பதிவு!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. விவசாயிகள் தினத்துக்கான கவிதை அருமை. இந்த தினத்தை நினைவுகூர்ந்தமைக்கு மிக்க நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. விவசாயிகள் தினத்தை நினைவுகூர்ந்து கருத்து பகிர்ந்தமைக்கு
      மிக்க நன்றி
      நண்பர் சொக்கன் அவர்களே!
      தொடர் வருகை தருக!
      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. உயிருக்கு உணவு, உணவுக்கு விவசாயி, அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. உயிருக்கு உணவு,
      உணவுக்கு விவசாயி,
      கருத்துக்கு சத்தியா

      மிக்க நன்றி நண்பரே!
      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. மிக அருமையான வந்தனம் சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழ் மரபை போற்றும் மங்கை என்பதை
      வருகையின் மூலம் உணர்ந்தேன் சகோதரி!
      "மிக அருமையான வந்தனம்"

      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  8. மிக அருமையான வந்தனம் சகோ

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
      புதுவை வேலு

      Supprimer
  9. மிக அருமையான வந்தனம் சகோ

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கு நன்றி
      புதுவை வேலு

      Supprimer
  10. மிக அருமையான வந்தனம் சகோ

    RépondreSupprimer
    Réponses
    1. விவசாயிகளை மறவாமல் நன்றி சொல்ல வந்தீர்கள்
      மிக்க நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  11. நண்பா மன்னிக்கவும் தங்களுக்கே தெரியும் வேலைப்பளு ஆகவே இப்பொழுதுதான் வரமுடிந்தது ..

    விவசாயி நாட்டின் முதுகெலும்பு என்றான் ஒரு அறிஞன் 100க்கு100 உண்மையே அவர்களைப்போற்றும் இந்த வசந்த நாளுக்கோர் கவிதை அருமை நன்பா வாழ்த்துகள் எனது வால்மீகியையும் தொடர்வதற்க்கு நன்றிகள் கோடி.

    RépondreSupprimer
    Réponses
    1. வலைச் சரம் பள்ளியின் ஆசிரியரே
      வணக்கம் அய்யா!
      வாருங்கள் குழலின்னிசை இருகரம் கூப்பி கும்பிட்டு வரவேற்கின்றது.
      விவசாயிகள் பாடம் பற்றி 100/100 புரியும்படி பாடம் நடத்தியமைக்கு
      மிக்க நன்றி!

      தாழ்மையுடன்,
      புதுவைவேலு

      Supprimer
  12. விவசாய தினத்திற்கான கவிதை... அருமையாக இருக்கிறது சகோ. நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. நலம் நாடி வந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
      நல்ல கருத்தினை நாடு போற்றும் வகையில்
      வழங்கியமைக்கும், வாழ்த்திற்கும், உளமார்ந்த நன்றிகள்!
      தொடர் வருகை புரியவும்!
      அருங்கருத்தினை தொடரவும்!
      நன்றியுடன்;
      புதுவை வேலு

      Supprimer

  13. "இன்று
    உழவுக்கும் தொழிலுக்கும்
    வந்தனம் சொல்லும்
    வசந்த நாள்!" என
    உழவர் நாள் சிறப்பைப் பகிர்ந்த
    தங்களுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அய்யா!
      தங்களது வருகையால் அகம் மகிழ்ந்தேன்.
      விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பதை போல்,
      தாங்கள் தரும் கருத்துகள் "குழலின்னிசைக்கு" முதுகெலும்பாய் அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!
      வருகைக்கு மிக்க நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  14. விவசாய தினத்தினை நினைவு கூர்ந்து மிக அழகாக கவிதை படைத்திருக்கிறீா்கள். வாழ்த்துக்கள்! நன்றி!

    RépondreSupprimer
  15. உழவுக்கு வந்தனம் செய்ய வந்த சகோதரியே!
    உணவுப் பஞ்சமின்றி உயர்வுடன் வாழ்க!
    வளமான கருத்தினை தந்தமைக்கு மிக்க நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer