mardi 23 décembre 2014

"கண்ணீர் அஞ்சலி" ( இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மறைவு )



இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மறைவு



கண்ணீர் அஞ்சலி

 

 





புகழ் என்னும் பூமாலை தொடுத்தவரே

நிழல் படத்தை நிஜமாக்கி எடுத்தவரே

தீந்தழலாகி நிற்கும் கோபத்தை

"தண்ணீர் தண்ணீர்" கொண்டு அனைத்தவரே! 


திருநீறு பூசிய "நன்னிலம்" சீர்திருத்தவாதி

உறவுமுறை தரும் சிக்கல்களை தீர்த்தவாதி

வாழ்வியல் கொடுமைகளை எரிக்கும் ஜோதி

சமூக அவலம் சொல்லுவது இவரதுநீதி!

 

திரையுலக நட்சத்திரங்கள் தேம்பி நின்று!

"மழலைபட்டாள"மாய் அழுது புலம்புகின்றதே!

உனது மறைவைக் கேட்டு முதன் முதலில்

உதய சூரியனும் தேடி ஓடி வருகின்றதே!

 

கையளவு மனசை காலன் இன்று !

வென்று! கொண்டு சென்று விட்டானே !

மோதிரக் கை குட்டுபட நன்று !

" பூவா தலையா " போட்டு நின்றானே!

 

தமிழ்த் தாயகமே தத்தளித்து தவிக்குது

திரையுலக தந்தையை இழந்து துடிக்குது

"படையப்பாவை" படைத்த பிரம்மன்

"விஸ்வரூபம்" எடுத்து மீண்டும் வருவாரோ?
 


புதுவை வேலு

26 commentaires:

  1. துயர் பகிருவோம்

    RépondreSupprimer
    Réponses
    1. துயரை பகிர்ந்தளித்த தூய உள்ளத்திற்கு
      நன்றிகள் கோடி அய்யா!
      நட்பு பாராட்டும்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. வாழ்ந்து வரலாற்று சாதனை படத்தவருக்கு
      கே.பாலச்சந்தர் மறைவுக்கு,
      ஆழ்ந்த இரங்கல்கள் செலுத்திய அன்பு நண்பர்
      திண்டுக்கல் "தன்பாலன்" கருத்து ஆறுதல் தரும்
      அரும் மருந்து!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses

    1. கண்ணீர் அஞ்சலியில்
      பங்கேற்போம்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    RépondreSupprimer
    Réponses

    1. நண்பரே!
      தங்களோடு தோளோடு தோள் சேர்ந்து,
      ஆழ்ந்த இரங்கலை நானும் கவிதை அஞ்சலி மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்

    மீண்டும் பெற முடியாத பொக்கிஷம்.. கண்ணீ அஞ்சலி
    எனதுபக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: அன்பை புரிந்து வெளியேவா:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. கண்ணீர் அஞ்சலிக்கு நன்றி!
      தங்களது அன்பை புரிந்து உள்ளே வந்தேன் அய்யா!
      கருத்தினை தந்தேன் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. கண்ணிர் விட்டு அழுவதையும் அழகாக வடித்துள்ள உங்களுக்கு பாராட்டு அதே வேளையில் அந்த ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

    RépondreSupprimer
    Réponses
    1. கே.பாலச்சந்தர் படத்தின் தலைப்பையே
      தங்களது வலைப் பூ விற்கு பெயராக சூட்டியிர்ப்பது எவ்வளவு பொறுத்தம் பாருங்கள்
      (அவர்கள்)
      கே.பி. ஆத்மா சாந்தியடைய நானும் வேண்டுகிறேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. இயக்குனர் சிகரம் திரு K.பாலச்சந்தர் அவர்களின் மறைவுக்கு தாங்கள் செலுத்திய அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைஞ்சுகிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. இயக்குனர் சிகரத்திற்கு
      சிறப்பு அஞ்சலி!
      நன்றி அய்யா!
      புதுவை வேலு

      Supprimer
  8. "கண்ணீா் அஞ்சலி" கவிதை மனதை கனக்க செய்தது . மிக அருமை! இயக்குனர் சிகரம் திரு K.பாலச்சந்தர் அவா்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      தங்களது கண்ணீர் அஞ்சலி
      கே. பாலச்சந்தர் புகழுக்கு பெருமை சேர்க்கும்.
      வருகைக்கு நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  9. கேபியின் மறைவு வருந்தத் தக்கது. தமிழ்த் திரையுலகில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியவர்.

    ஆமாம், மழலைப் பட்டாளம், படைபப்பா, விஸ்வரூபம் எல்லாம் ஏன் இதில் சேர்த்தீர்கள்?

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழ்த் திரையுலகில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிய இயக்குனர் சிகரம் கே.பி,அவர்களுக்கு
      தாங்கள் செலுத்திய அஞ்சலிக்கு மிக்க நன்றி!

      ஆமாம், மழலைப் பட்டாளம், படைபப்பா, விஸ்வரூபம் எல்லாம் ஏன் இதில் சேர்த்தீர்கள்? என்று கேட்டிருந்தீர்கள்?
      படையப்பா = ரஜினி (கே.பி அறிமுகம்)
      விஸ்வரூபம் =கமல் (கே.பி உருவாக்கம்)
      மழலைப் பட்டாளம்(கே.பி தயாரிப்பு /இயக்குனர் விசு அறிமுகம்)
      இதனால்தான் நண்பரே கவிதையில் சேர்த்தேன்!

      அதுசரி அன்பரே!
      நிழல் நிஜமாகிறது
      தண்ணீர் தண்ணீர்
      பூவா தலையா
      நன்னிலம் (கே.பி பிறந்த ஊர் )
      இதையெல்லாம் ஏன் நண்பரே
      சொல்லாமல் விட்டு விட்டீர்கள்?
      முதல் வருகை முக்கனியாய்
      இனித்தது!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி கவிதை மனதை கனக்க செய்தது. ஆழ்ந்த இரங்கல்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. கண்ணீர் அஞ்சலி மனதை கணக்கவே செய்தது!
      ஆம் உண்மை நண்பரே!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அன்புள்ள அய்யா,

    இயக்குநர் சிகரம் ‘தாதா சாகேப் பால்கே ’கே.பாலசந்தர் மறைவிற்கு கவிதாஞ்சலி செலுத்தி இரங்கலைத் தெரிவித்தது ... அவர்பால் கொண்டுள்ள நேசம் நிசப்பட்டது. நெஞ்சம் கனத்தது. திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள மணவை அய்யா!
      இயக்குநர் சிகரம் ‘தாதா சாகேப் பால்கே ’கே.பாலசந்தர் மறைவு
      திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது முற்றிலும் மறுக்க இயலாத உண்மை அய்யா!
      நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களின் வருகையும், கருத்தும் நெஞ்சில் இனித்தது!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. கே. பாலசந்தரின் மறைவு திரையுலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தமிழில் மனித உறவுகளின் சிக்கல்களை அவர் அளவுக்கு யாரும் படம் பிடிக்கவில்லை. சற்று பிழன்றாலும் ஆபாசமாகிவிடக்கூடிய கதைகளை அவர் கையாண்ட அளவுக்கு இனி ஒரு தமிழ் இயக்குனரால் முடியுமா என்பது சந்தேகமே !

    இயக்குனர் சிகரம் மறைந்தாலும் அவரது படைப்புகள் காலத்துக்கும் சிகரமாய் உயர்ந்து நிற்கும்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பர் சாமானியனே!
      வணக்கம்!
      "திருநீறு பூசிய "நன்னிலம்" சீர்திருத்தவாதி
      உறவுமுறை தரும் சிக்கல்களை தீர்த்தவாதி
      வாழ்வியல் கொடுமைகளை எரிக்கும் ஜோதி
      சமூக அவலம் சொல்லுவது இவரதுநீதி!"
      கவிதை வரிகளை
      உண்மையாக்கியது தங்களது உன்னதமான கருத்து!
      இடைவெளி விட்டு வருகை தரும் மர்மம்
      என்னவோ?
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. ஈடு செய்து விட முடியாத இழப்புதான்/

    RépondreSupprimer
    Réponses
    1. சிட்டுக் குருவி போல் பறந்து வந்து
      அஞ்சலி என்னும் கூட்டினை கட்டிய நேர்த்திக்கு
      நன்றி!
      வருகை தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer