samedi 25 juillet 2015

"கார்கில் போர் 16–ம் ஆண்டு வெற்றி விழா"






கார்கில் போர் நினைவு தினமே !

நேர்பட பேசுகிறோம் உன்- தியாகம்

ஊர் உலகம் போற்ற வாழியவே!

பாரத மாதா சிறப்பு ஓங்குகவே!




கல்லை சுமந்த கார்கில் மலையேறி

எல்லைக் காத்த எம் தோழா!

இல்லை இங்கு உனக்கு ஈடு !

தொல்லை தந்தவனே நீ ஓடு!




'ஆபரேஷன் விஜய்'  ஜெயக் கொடி!

ஆபத்தை அழித் தொழித்துவெற்றி

ரூபத்தை காட்டுது பார்! என்றும்

ஊடுருவல் வலை அறுப்போம்!




புதுவை வேலு

18 commentaires:

  1. Réponses
    1. தேசப் பற்றை பறை சாற்றி,
      வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தையாரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. தேசப் பற்றுடன் வாழ்வோம்
      வளம் பெறுவோம்! வார்த்தைச் சித்தரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. வாழ்க பாரதம்
      வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. வாழ்க பாரதம்.. வளர்க தமிழகம்!..

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்வும் வளமும்
      மங்காப் புகழ் கார்கில் மாவீரர்களுக்கு
      என்றும் உண்டு!
      வாழ்த்திய அருளாளர் அய்யா அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. நன்னாளை நினைவுகூர்ந்தமையறிந்து மகிழ்ச்சி, நன்றி. தம+1

    RépondreSupprimer
    Réponses
    1. "எல்லைக் காத்த எம் தோழா!
      இல்லை இங்கு உனக்கு ஈடு!"

      கார்கில் நினைவு நன்னாளில்
      வீரர்களை வணங்கி போற்றுவோம்!
      நன்றி முனைவர் அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வந்தே மாதரம்! போர்/புரட்சி/சண்டை என்பதே பல மனித உயிர்களின் தியாகத்தில் கிடைக்கும் வெற்றிதான்...சாந்தி நிலவ வேண்டும்...எதிர்காலத்திலாவது..

    RépondreSupprimer
    Réponses
    1. தியாகத்தின் உண்மை ஒளியை ஏற்றி சிறப்பித்தமைக்கு
      சிறப்பான நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வீர வணக்க நாளில்
      பாரதப் போர் வீரர்களை
      நினைவுகூர்ந்து மரியாதை
      செலுத்திய தங்களது பண்பு பாராட்டுக்குரியது நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. போர் வீரர்கள்
    எங்கள்
    காவல் தெய்வங்கள்...
    நாம்
    என்றும் மறவோம்

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    RépondreSupprimer
    Réponses
    1. காவல் தெய்வங்களை வணங்கி வழிபட வைத்தமைக்கு
      மிக்க நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம்,
    வாழ்க பாரதம்,
    தியாகச் செம்மல்களைப் போற்றுவோம்,
    நன்றி.

    RépondreSupprimer
  10. தியாகச் செம்மல்களைப் போற்றுவோம்,தியாகத்தின் உண்மை ஒளியை ஏற்றி சிறப்பித்தமைக்கு
    நன்றி.

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer