vendredi 17 juillet 2015

யாரால் நன்மை?

ஆடி மாதம் என்றதும் அம்மன் கோயில்களில் ஆடு, கோழிகளை நேர்ந்து விடுவதும்,
"ரம்ஜான் பண்டிகை" என்றதும் தொழுகையின் சிறப்பும், பிரியாணி விருந்தும் எனது நினைவுக்கு வந்தது.
ஒன்றோடு ஒன்று தொடர்புடைய "ஆடு" பற்றி நான் அறிந்த ஒரு 'ஜென் கதை'யை இந்த வேளையில் பகிர்ந்தளித்தால் வெகு சிறப்பாய் இருக்கும் என்று எண்ணினேன். அதன் விளைவே இந்த பதிவு!


விவசாயி ஒருவன், ஆடு ஒன்றையும், குதிரை ஒன்றையும் தனது தோட்டத்தில் வளர்த்து வந்தான். அந்த குதிரையும், ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். அப்போது ஒருநாள் அவனது அந்த குதிரை கடுமையான நோய் ஒன்றினால்  உடல்நலம் பாதிப்புக்கு உள்ளானது. இதைக் கண்டு அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க  ஒரு மருத்துவரை அழைத்து வந்தான். வந்த மருத்துவர், அந்த குதிரையின் நிலையை பரிசோதித்து பார்த்து விட்டு பார்த்து, “நான் மூன்று நாட்கள் தொடர்ந்து வந்து மருந்து தருகிறேன், அந்த மருந்தைக் குதிரைக்கு கொடுங்கள்  குதிரை குணமாகி எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான்” என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்து விட்டு சென்றார்.


இவர்களது உரையாடலை, அங்கிருந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. விவசாயியும், அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தார்.
மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தார் அந்த விவசாயி.


பின்பு சிறிது நேரம் கழித்து, அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம், “நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள் 
-என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் மருத்துவர் வந்தார்.

அவர், குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம்
 நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ், பரவிவிடும்.என்று சொல்லி விட்டு,சென்றார்.


இதைக் கேட்ட ஆடு,   மருத்துவர் சென்றதும்குதிரையிடம் வந்து,
 “நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். 
நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்என்று சொல்லியது.

அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது.


தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும்படியாக குதிரை ஓடியது.


மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தார்.


அவர் மருத்துவரிடம், “என் குதிரை நன்றாகக் குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். 

என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும்.

நாளைய தினம் நோன்பின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் "ரம்ஜான் பண்டிகை" அல்லவா? 

இந்த ஆட்டை வெட்டிப் 'பிரியாணி' செய்து கொண்டாடிவிடுவோம் என்றார்.

குதிரை 'ஆடு' தந்த ஊக்கம் என்னும் மருந்தால் எழுந்து நடந்தாலும், மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை முழுவதும் குணம் அடைந்ததாகவே விவசாயி நினைத்தார்.



இப்படித்தான் இந்த உலகில் நன்மை யாரால் கிடைத்தது? 
-என்ற உண்மை காரணத்தை நன்கு உணராமல், சிலர் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! அல்லது, ஆடு என்று நினைத்து உண்மையை! விருந்தாக்கி விடுகின்றனர்.

பகிர்வு:

புதுவை வேலு





14 commentaires:

  1. அருமையான கதை. நண்பனுக்காக தன் இன்னுயிரை தரப்போகிறது ஆடு..

    RépondreSupprimer
    Réponses
    1. "நண்பனுக்காக தன் இன்னுயிரை தரப்போகிறது ஆடு!"
      ஆம்! சகோதரி!
      "நண்பனுக்காக தனது இன்னுயிரை இரையாக்கிய அந்த "ஆடு"வின்
      தியாகம் போற்றப் பட வேண்டும். இனிமேலும் பலியாகாமல்
      காக்கப் பட வேண்டும் .
      முதல்தரமான கருத்தினை பதிவு செய்த சகோதரி அவர்களுக்கு
      குழலின்னிசயின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. வலையுலகில் "யாரால் நன்மை?" எனபதை அனைவரும் அறிதல் நலமே!
      வார்த்தைச் சித்தரே!
      நல்ல கதை நாடி வந்து நற்கருத்தோடு, வாக்கினை பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. உண்மையில் பலியான ஆடுகள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன்..
    தம +

    RépondreSupprimer
  4. உண்மையின் குரல் ஓங்கும் காலம் வர வேண்டும்
    தோழரே!
    வருகைக்கும் வாக்கிற்கும் வளமிகு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. வணக்கம்
    கதையில் அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும், வாக்கிற்கும் அன்பு நன்றி கவிஞர் ரூபன் அவர்களே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. கதை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. கதையினை பாராட்டி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பாவம் ஆடு! உயிரைக் காப்பாற்றி உயிரை விட்டுவிட்டது!

    RépondreSupprimer
    Réponses
    1. உயிர் கொடுப்பான் தோழன்!
      நன்றி நண்பரே தங்களது நல்வருகைக்கு!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. ஜென் கதை நல்ல கதை.....ஆடுகள் பலி , கோழிகள் பலி கண்டதுண்டு. எனவே இப்போதெல்லாம் திருவிழா என்றால் கொஞ்சம் பார்த்துதான் செல்வதுண்டு

    RépondreSupprimer
  9. உயிர் பலி என்பது உகந்த செயல் அல்ல ஆசானே!
    நல்ல கருத்து! நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer