lundi 13 juillet 2015

"சுய புத்தி! சுபம் தரும்"

 (நீதிக் கதை)




ஒரு செல்வந்தர் வீட்டு திருமணத்தை நடத்தி வைக்க அந்தணர் ஒருவர் வந்தார். அந்த வீட்டில் நிறைய பசுங்கன்றுகள் இருந்தன. இதில் ஒரு கன்றை எனக்குத் தாருங்கள் அய்யா! இதை, வளர்த்து, பால் கறக்கும் பருவத்தில்கடவுளின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறேன், என்று அந்தணர், செல்வந்தரிடம் கேட்டார். அவரும் கொடுத்து விட்டார்.

மிகச்சிறிய அந்தக் கன்றுதன் ஊர் வரை நடந்து வர சிரமப்படும் என்று இரக்கப்பட்ட அந்தணர், அதை தனது தோளில் சுமந்தபடி நடந்தார். வழியில் மூன்று திருடர்கள் வந்தனர். கன்றைப் பறிக்க எண்ணிய அவர்கள் ஒரு ஓரமாகப் பதுங்கினர். முதலில் ஒருவன் வெளியே வந்து,  
சாமி! யாராவது 'பன்றிக்குட்டி'யைச் சுமப்பார்களா?  
நீங்கள் சுமக்கிறீர்களேஎன்று கேட்டான்.
மடையா! மடையா! இது! 'கன்றுகுட்டி'யடா! பக்கத்து ஊர் செல்வந்தர் எனக்கு பரிசாகக் கொடுத்தார்என்றதும் அவன் அவன் போய் விட்டான். 

அடுத்தவன் வந்தான். 
சாமி! யாராவது 'கழுதைக் குட்டி'யை சுமப்பார்களா? 
நீர் சுமக்கிறீரேஎன்றதும், அவனுக்கும் தகுந்த பதிலை சொன்னார்! அந்தணர்.

மூன்றாவதாக வந்தவன், 
சாமி! நீர் தான் இறைச்சி சாப்பிடமாட்டீரே! பிறகு ஏன்? 'ஆட்டுக்குட்டி'யை சுமந்து செல்கிறீர்? என்றதும்,
அந்தணருக்கு பயம் வந்து விட்டது.

அந்த செல்வந்தர் கருமி போலும்! 
என்னை ஏமாற்ற ஏதோ ஒரு பூதத்தை எனக்கு தந்து விட்டார் என நினைக்கிறேன். 
மூவருமே! இதை! 'கன்று' என்று சொல்லவில்லையே! என நடுங்கியவர், உடனடியாக  கன்றை கீழே இறக்கி விட்டுச் சென்றார்.

திருடர்கள் திட்டம் பலித்தது! மூவரும் எளிதில் கன்றை களவு கொண்டு சென்று விட்டனர்.

எனவே! நாம், மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காகநமது நல்ல முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை.

நமது நல்ல முடிவில், நாம் என்றும் உறுதியாக இருக்க வேண்டும்.   மனிதனுக்கு என்றும், "சுயபுத்தி தான் சும் தரும்". 

பகிர்வு
புதுவை வேலு
நன்றி:தினமலர் 


16 commentaires:

  1. Réponses
    1. நாள்தோறும் வருகை தந்து, நலம் பாராட்டி, நல்வாழ்த்தோடு அமைந்த கருத்தினை, பின்னூட்டமாக தந்து வரும் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி!
      தங்கள் வாழ்த்தின் சிறப்பை, சகோதரி. மகேசுவரி பாலச்சந்திரன் அவர்களது 50 வது (மன்னிப்பு) பதிவின் பின்னுட்டத்தில் சொல்லியுள்ளேன்.
      நன்றி நண்பரே! தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. எதுவும் சுயம் என்றால் சரியே...

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தைச் சித்தரின் கருத்தினை போற்றுகிறேன்!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. சுயமே சுபம். இல்லாவிடில் சிக்கலே.

    RépondreSupprimer
    Réponses
    1. வரவேற்புக்குரிய வாசகம் முனைவர் அய்யா!
      தங்களது பின்னூட்ட கருத்து!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. தெரிந்த கதை, ஆனால் தாங்கள் சொன்ன விதம் அருமை,
    வாழ்த்துக்கள், நன்றி.

    RépondreSupprimer
  5. அரைத்த மாவுதான்!
    ஆனால் தோசை சுட்ட விதம் பரவாயில்லை!
    என்றுதானே சொல்ல வருகிறீர்கள் சகோதரி!
    எப்படியோ? பக்க விளைவுகள் வராமல் பகிர்ந்துண்டு மகிழ்ந்தால் நலமே!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. மனிதருக்கு சுய புத்தி வேண்டும் என்பது உண்மையே!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி புலவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. உண்மையே! புலவர் அய்யா!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. Réponses
    1. அருமை பாராட்டி சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. இதே கதையை முல்லா கதைகளிலும் படித்திருக்கிறேன். சொல் புத்தி கொள்ளாமல் சுய புத்தி கொள்வோருக்கே சுபம் என விளக்கும் அறுமையான கதையை பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "சுய புத்தி கொள்வோருக்கே சுபம் "என
      அருமை பாராட்டி சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer