samedi 4 juillet 2015

"தண்ணீர் தண்ணீர்"


                                                ( வெய்யில் கொடுமையால் அவதியுறும் ஐரோப்பிய கரடிகள் )                                                           



மோகம் தணிக்க வழி உண்டு

சோகம் தணிக்க வழி உண்டு

வேகம் தணிக்க வழி உண்டு

தாகம் தணிக்க வழி உண்டோ?



நளபாகம் நாம் கேட்க வில்லை

நாவின் வறட்சி விட வில்லை

நல்குக! நல்லோரோ! மனிதநேயம்

நலிந்தவர்க்கு நல்லுதவி செய்யட்டும்!




தவிக்கும் வாய்க்கு தண்ணீர் தந்து

புவியில் சிறந்தே பொங்கட்டும்!






 

 


புதுவை வேலு






22 commentaires:

  1. சும்மா ஏதேனும் கரடி விடாமல் ..... நல்லதொரு ஆக்கம். :) பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. கரடி விடாத பதிவுக்கு, நல்ல ஆக்கத்திற்கு நல்லூக்கம் அளித்த அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வருகைக்கும், முதல் கருத்து பதிவுக்கும் இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா
    பதிவு தண்ணீரைப்பற்றி அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. மனித நேயம் தற்போது பேசப்படும் பொருளாக உள்ளது!
      வெய்யில் கொடுமை வேறு வாட்டுகிறது. வேறு என்ன செய்வது கவிஞரே?
      தண்ணீர் வேண்டி தவம் செய்வதுதானே முறை?
      நல்வருகைக்கும், நல்வாக்கிற்கும் நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. தாயகத்திலிருந்து பன்னீர் கருத்து தந்தமைக்கு நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. நல்ல பாராட்டிற்கு நன்றி வார்த்தைச் சித்தரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. நல்ல பாராட்டிற்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. தாகம் தணிக்க வழியுண்டா.?தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கொடுக்கலாமே. வலைச்சரம் பற்றிய என் எண்ணங்கள் என் தளத்தில். வருக. வாசிக்க அழைப்பு.

    RépondreSupprimer
    Réponses
    1. தவிக்கும் வாய்க்கு தண்ணீர் தந்துள்ளீர்கள்! நல்ல மறுமொழி அளித்துள்ளீர்கள்.
      தங்களது பதிவை கண்ணுற்றேன்! வருகிறேன் நல்ல பதிலுடன் தங்களை நாடி!!!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பயனுள்ள பதிவு. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்கள் பதிவிற்கு மெருகூட்டுகின்றன.

    RépondreSupprimer
    Réponses
    1. பயனுள்ள பதிவு என்று முனைவர் அய்யா பறைசாற்றியமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. தண்ணீர் விற்பனை சரக்காக மாறிவிட்டதால் தாகம் தணிக்க வழி இல்லை நண்பரே த.ம..6

    RépondreSupprimer
    Réponses
    1. ஒருபுறம் பார்த்தால் உமது கருத்தில் உண்மை உறவாடுகிறது தோழரே!
      நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. கேளாச் செவியராய் மக்கள் மந்தை..
    வாளாவிருப்பதே விந்தை!..

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை பேசும் அழகிய கருத்து!
      அருளாளர் அய்யாவே! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. தாகம் தணிக்க வழியுண்டா.... நல்ல கேள்வி.

    சில இடங்களில் தண்ணீரை வீண் செய்பவர்களை பார்க்கும்போது இவர்களை என்ன செய்தால் தகும் என்ற கோபம் வருகிறதே!

    RépondreSupprimer
    Réponses
    1. தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்க கூடாது என்று முன்னோர்கள் உரைத்தது எதற்காக? புரியாத ஜடம் !
      கிடைக்குமா இனி ஜலம்?
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. தாகம் தணிக்க வழி உண்டோ?// தண்ணீர் அரிதாகி வருவதைக் குறிக்கின்றதோ வரிகள்! ம்ம்ம் அரிதாகி வரும் வேளையில் பலரும் தண்ணீரை மிகவும் தேவையற்ற வழிகளில் அதிகமாக உபயோகிக்கின்றனர் தண்ணீர் தங்கத்திற்குச் சமம என்று பாட்டனார் சொல்லுவதுண்டு....

    RépondreSupprimer
  12. "தண்ணீர் தங்கத்திற்குச் சமம் என்று பாட்டனார் சொல்லுவதுண்டு.."..
    போற்றத்தக்க பொன் மொழியல்லவா? ஆசானே! அருமை!
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer