lundi 27 juillet 2015

"அறிவியல் ஞானி அப்துல் கலாம் -அஞ்சலி"




குற்றால நீர்வீழ்ச்சி குமுறி அழுகிறது
வற்றாத கடலலை ஓங்கி எழுகிறது
சுற்றி வரும் விண்கலம் பற்றி எரிகிறது
தேற்றும் தேன் தமிழ் தேம்பி அழுகிறது!

நெருப்பின் சிறகு விரித்து கலாம்
நெடுந்தூரம் பறந்து போனது ஏன்?
கனவு மெய்யாகி வரும் போது !
மெய்யை விட்டு உயிர் போனதேன்?

தமிழ் இலக்கிய இதயம்- அய்யா!
தடை பட்டு நின்றது ஏன்?
விடை சொல் விதியே?- ஜீவநதியாய்
மடை திறந்து மீண்டும் வருவாரென்று!

புதுவை வேலு

15 commentaires:

  1. அக்னிக்கு உயிர் கொடுத்து இந்திய இளைஞர்களுக்கு லட்சிய சிறகுகள் அளித்த அப்துல் கலாமுக்கு அஞ்சலி.

    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer
    Réponses
    1. இலட்சிய சிறகுகள் விரித்து இந்திய இளைஞர்கள் நல்வழிப் பாதையில் பயணம் செய்ய கனவினை கருப் பொருளாக்கி காண வைத்த அறிவியல் ஞானியை வழியொற்றி
      வணங்குவோம்.

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. குழலின்னிசையின் மீது உமது மூச்சுக் காற்று பட்டதே பெருமை!
    இப்பொழுது பேச்சுக் கலையையும் கற்பிக்க வந்தமைக்கு,பிறரிடம் இந்த குழலின்னிசையின் குரலை கொண்டுபோய் சேர்த்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  3. நம்மை கனவு காணவைத்துவிட்டு அவர் நிரந்தர உறக்கம் உறங்கச் சென்றுவிட்டார்.

    RépondreSupprimer
    Réponses
    1. கனவு மெய்யாகி வரும் போது !‘மெய்’யை விட்டு உயிர் போனதேன்?
      நம்மை கனவு காணவைத்துவிட்டு அவர் நிரந்தர உறக்கம் உறங்கச் சென்றுவிட்டார்.
      நமது அஞ்சலியை அவருக்கு அர்ப்பணிப்போம்!
      நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. நல்லவர்கள் எல்லாம்
    நம்மைவிட்டுப்
    போய்க்கொண்டிருக்கிறார்கள்
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. நல்லவர்கள் எல்லாம்
      நம்மைவிட்டுப்
      போய்க்கொண்டிருக்கிறார்கள்

      விதியே விடை சொல் ஜீவநதியாய்
      மடை திறந்து மீண்டும் வருவாரென்று!
      நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. அஞ்சலி செலுத்தி ஆன்மா சாந்தியடைய வேண்டி நிற்போம்.
      நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அக்னிப் பறவையொன்று ஆகாயத்தில் பறந்து மறைந்து போனது! ஆழ்ந்த இரங்கல்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. அஞ்சலி செலுத்தி அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி நிற்போம்.
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அப்துல் கலாம் அவர்களை நினைந்து நினைந்து ஒரு கவிதாஞ்சலி. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

    RépondreSupprimer
    Réponses
    1. ஜீவநதியாய்
      மடை திறந்து
      மீண்டும் வருவாரென்று!
      அஞ்சலி செலுத்தி அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி நிற்போம்.
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. தமிழ் இலக்கிய இதயம்- அய்யா!
    தடை பட்டு நின்றது ஏன்?

    டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!


    அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    RépondreSupprimer
  9. மனம் நெகிழச் செய்யும் கவிதாஞ்சலி! கலாம் அவர்களுக்கு வீரவணக்கம்!

    RépondreSupprimer