dimanche 5 juillet 2015

"செந்தமிழ் விரும்பி பரிதிமாற் கலைஞர்"





தாய் மீது பற்றுடையோர் இருக்கையிலே!
தாய்மொழி மீது பற்றுடையவர் ஆனவரே!
செம்மொழி தமிழ் இனித்திடவே உமது
செவ்விதழை முதலில் விரித்தவரே!!!

சூடிய'சூரிய நாராயணன்' சுய நாமத்தை!
சுடர் விடப் பரிதிமாற் கலைஞர் ஆனவரே!
நாடகவியல் இலக்கண நூலை நெய்து!
ஊடக உலகிலும் உயர்ந்து நின்றவரே!!!

கலப்பின்றி காதல் வடிவத்தை தமிழ்
சிலையாய் செதுக்கிய செந்தமிழ் செல்வா!
'தனிப்பாசுரம் தொகை'யை 'பாவலர் விருதாய்'
தரணியில் பெற்றே வாழி! மதுரைத் தமிழே!

சூலைத் திங்கள் ஆறில் உதித்த!
சுடர்மிகு ஒளியே சுந்தரத் தமிழே!
இடர்மிகு இன்னல் எது வரினும்
உம்வழி நின்று நம்மொழி காப்போம்!




புதுவை வேலு

 

20 commentaires:

  1. நன்னாளில் பேரறிஞரை நினைவுகூர்ந்து பாராட்டும் கவிதை அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்னாளில் பேரறிஞர் "பரிதிமாற் கலைஞர்" நினைவுகூர்ந்து பாராட்டும் கவிதையை சிறப்பிக்க வந்தமைக்கு மிக்க நன்றி முனைவர் அய்யா அவர்களே!
      செம்மொழி சிறப்புற வாழ்த்துவோம்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. இடர்மிகு இன்னல் எது வரினும்
    அவர்வழி நின்று நம்மொழி காப்போம்!

    பரிதிமாற் கலைஞரின் நினைவினைப் போற்றுவோம்
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. பரிதிமாற் கலைஞரின் நினைவினை என்றும் போற்றுவோம்!
      வருகைக்கும், கவிதையை சிறப்பித்தமைக்கும் நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. என்றும் போற்றப்பட வேண்டியவர்...

    RépondreSupprimer
    Réponses
    1. சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழை போராடி நிலைக்கச் செய்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அய்யா அவர்கள் நண்பரே!
      வருகைக்கும், கவிதையை சிறப்பித்தமைக்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. சூடிய சூரிய நாராயனாம் திரு நாமத்தை ச்
    சுடர் விடப் பரிதி மால் கலைஞர் ஆனவரே.

    சுப்பு தாத்தா.

    RépondreSupprimer
    Réponses
    1. சுட்டெரிக்கும் சூரியனை சுடர்மிகு சூரியனாய் மாற்றிய
      சூரி தாத்தா அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. உயர்ந்ததோர் மனிதர் பற்றிய சீரிய கவிதை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
  6. "செந்தமிழ் விரும்பி பரிதிமாற் கலைஞர்" அவர்களின் பிறந்த நாளில்
    தாய்மொழி அறிஞரின் சிறப்பினை போற்றி சிறப்பித்து அருங்கருத்தை
    வழங்கியமைக்கு அன்பு நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. வணக்கம்,
    அருமையான பா அமைத்து அவர் தம் நினைவு போற்றினீர்,
    வாழ்த்துக்கள். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழுக்கு பெருமை சேர்க்க வந்தீர் சகோதரி! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses
    1. அன்பு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. பரிதிமாற் கலைஞரை பாராட்டும் வரிகள் அனைத்தும் அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  10. தமிழுக்கு பெருமை சேர்க்க வந்தீர் நண்பரே! நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  11. பரிதிமாற் கலைஞர் பற்றிய வரிகள் அருமை! போற்றியமைக்கு வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழுக்கு பெருமை சேர்க்க வந்தீர் ஆசானே! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. Réponses
    1. தமிழுக்கு பெருமை சேர்க்க வந்தீர் நண்பர் ஸ்ரீராம்.அவர்களே வருகையும், கருத்தும் மிக்க மகிழ்வை ஊட்டுகிறது! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer