vendredi 3 juillet 2015

"மெட்ரோ" ரயில்





அரசியல் மேடையில் ஓடி வருது
அவரவர் உரிமை தேடி வருது
பயணக் காட்சி படமாய் தெரியுது
பாமரன் ஓட்டு மனதில் நினையுது!




கோயம்பேடு வருது என்பார் - அது
ஆலந்தூரில் வந்து நிற்கும் என்பார்!
பத்து மைல் தூரம் பயணம் என்பார்
நாற்பது ரூபாய் சீட்டு என்பார்!



தொலை நோக்கு பார்வை வேண்டும்
தொலைத்தூரம் நாம் போக வேண்டும்
மக்கள் நிலை மனதில் வேண்டும்
மகத்தான ஆட்சியே நமக்கு வேண்டும்!

புதுவை வேலு

8 commentaires:

  1. பத்திற்கு பத்து ஆகட்டும்...!

    RépondreSupprimer
    Réponses
    1. "கோயம்பேடு"(METRO)துவக்கம் என்பதால்தான் பேரம் பேச துவங்கி விட்டீரா? வார்த்தைச்சித்தரே!
      கிலோ மீட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் 10 கிலோ மீட்டருக்கு பத்து ரூபாய் கருத்தில் கொண்டு 10/10 அளித்தமைக்கு வாழ்த்துகள் நண்பரே!
      தங்களது கோரிக்கை ஏற்புடையதே!!!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா
    அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. தொலை நோக்கு பார்வை வேண்டும்
      தொலைத்தூரம் நாம் போக வேண்டும்
      விழிப்புணர்வு கருத்துக்கள் தொலைநோக்கு பார்வையுடன் தொலைதூரம் செல்ல ஆதரவு கருத்தினை அளித்திட்ட கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அட எங்கூரு ரயிலப் பத்தி ஃப்ரான்ஸ்ல இருந்து நீங்க கவித்துவமா போட்டுட்டீங்களே!!! மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
    Réponses


    1. ஆசானே!
      தொலை நோக்கு பார்வை வேண்டும்
      தொலைத்தூரம் நாம் போக வேண்டும்
      நன்றி! அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ஊரெங்கும் என்றுதான் நினைத்தேன். உலகெங்கும் சென்னை மெட்ரோ பற்றித்தான் பேச்சு என்று தெரிகிறது!!

    RépondreSupprimer
  5. இனிய பயணம் இன்புற்று திகழ வேண்டும் அல்லவா?
    நண்பரே!
    உலகத்தில் ஊரும் அடக்கம் அல்லவா?
    வருகை வசந்தம்!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer