jeudi 9 juillet 2015

"மௌனம் மகத்தானது"

தெரியாததைப் பேச வேண்டாம்!





புத்தர் வாழ்ந்த காலத்தில் சாரிபுத்தர் என்ற துறவி இருந்தார்.

ஒருமுறை புத்தரைக் காண வந்த சாரிபுத்தர்,  உங்களைப் போல ஒரு புத்தரை இதுவரை  நான் கண்டதில்லை. உங்களைப் போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவர் வேறொருவர் உலகில் இல்லை. என்று புகழ்ந்தார்.

புத்தரும் அவரிடம்,  அருமையாகச் சொன்னீர்கள் அய்யா!   இதற்கு முன் வாழ்ந்த  மகான்கள் பற்றியும், அவர்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன், என்றும் கேட்டார்.

 மறுமொழி ஏதும்பேச முடியாமல் சாரிபுத்தர் தயங்கியபடியே நின்றார்.

அது சரி! பரவாயில்லை! என்னைப் பற்றியாவது சொல்லுங்களேன். நான் எப்படி வாழ்கிறேன் என்றாவது சொல்லுங்கள்? என்றார்.

அதற்கும் சாரிபுத்தர் அமைதி காத்தார்.

அப்போது புத்தர்,  அவரைப் பார்த்து  ஒரு அறிவுப் பூர்வமான ஒன்றைச்  சொன்னார். அந்த பொன்மொழி செய்தி யாதெனில்....

"தெரிந்ததைப் பற்றி பேசுவதும்,  தெரியாத விஷயத்தில் மௌனம் காப்பதும் தான் சிறந்தது" என்பதுவே ஆகும்.

 சாரிபுத்தரும்? புத்தரின் அறிவுரையை ஒரு நண்பரைப் போல ஏற்றார்.

அதுபோலவே!  நாமும், தெரிந்ததைப் பற்றி மட்டும் பேச முயற்சிக்கலாம் அல்லவா?





நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.  – புத்தர்.


பகிர்வு:
 
புதுவை வேலு


பட உதவி: கூகுள்



20 commentaires:

  1. அருமையான கதை!!! மிக மிக வேண்டிய அறிவுரை!! அவையடக்கமும் இது தானோ?!!! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசை அவைக்கு வந்து
      அவையடக்கத்தின் அருங்குணத்தின்
      சிறப்பினை எடுத்துரைத்த ஆசான் அய்யா அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம்,
    நல்ல கதை,
    உண்மை தான் தெரிந்ததைப் பேசுவதும், தெரியாதது மவுனம் காப்பதும்,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. சகோதரி!
      வலைச்சரம் தொடர்பாக செய்தியை
      அனுப்புவதற்கு மெயில் முகவரி கேட்டிருந்தேன்!
      பதில் மௌனம்தானோ?
      "மௌனம் மகத்தானது"
      நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. //நாமும், தெரிந்ததைப் பற்றி மட்டும் பேச முயற்சிக்கலாம் அல்லவா?//

    உண்மைதான். தெரியாததை பேசி நமது அறியாமையை காண்பிக்க வேண்டாம்.

    புத்தரின் அருமையான கருத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "
      தெரியாததை பேசி நமது அறியாமையை காண்பிக்க வேண்டாம்"
      தங்களது மௌனத்தின் மறு விளக்கம் அருமை அய்யா!
      வருகைக்கும், மறுமொழிக்கும் மகத்தான நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. வணக்கம்
    ஐயா
    புத்தனின் போதனை எல்லாம் நன்று ஆனால் பின்பற்றும் நபர்கள் அதை மதிப்பதி்ல்லை த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. காலம் ஒரு நாள் மாறும்
      நம்பிக்கையுடன் காத்திருப்போம் கவிஞரே!
      வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. சின்னக்கதை,சிறப்பான அறிவுரை/உல்கில் தெரியாததைப் பற்றி விரிவுரையாற்றுவோர்தான் பலர்!
    த ம 2

    RépondreSupprimer
    Réponses
    1. தெரியாததைப் பற்றி விரிவுரையாற்றுவோர்
      கூரை ஏறி வைகுண்டம் போகத் துடிப்பவர்கள்தானே அய்யா!
      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. மௌனம் சில சமயம் பலவற்றை பேசி விடும்... என் அனுபவத்தில்...

    RépondreSupprimer
    Réponses
    1. புரியாததை புரிய வைக்கும் புத்தரின் மௌனம் வார்த்தைச் சித்தரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. சிறப்பான நீதிபோதனை! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நீதி போதனை தந்த புத்தரின் அன்பினை போற்றுவோம் நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. தெரியாத விஷயத்தில் மௌனம் காப்பதும் தான் சிறந்தது"
    அனைவரும் உணர வேண்டிய அறிவுரை
    நன்றி நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. "அனைவரும் உணர வேண்டிய அறிவுரை"
      நீதி போதனை தந்த புத்தரின் அன்பினை போற்றுவோம் நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. Réponses
    1. நீதி போதனை தந்த புத்தரின் அன்பினை போற்றுவோம் நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. புத்தர் ஒரு உண்மையான ஞானி. இன்றிருக்கும் பல "ஞானிகளுக்கு" இது எங்கே தெரியப் போகிறது?

    RépondreSupprimer
  11. இன்னும் இன்னும் ஏற்றம் காண விரும்பும் ஏணிகளைத் தானே சொல்லுகிறீர்கள் நண்பர் காரிகன் அவர்களே!
    அன்பு வருகை கண்டு அகம் மகிழ்ந்தேன்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer