படஉதவி: மாலைமலர்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகில் உள்ள கிராமத்தில் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்திவிட்டு, அருகே ஒரு பச்சிளம் சிறுவனை அமரவைத்து அவனுக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்திருக்கும் காட்சி தொலைக்காட்சிகளிலும், வாட்ஸ்-அப்பிலும் வெளிவந்துள்ளது. கடலாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.
இதை பற்றிய ஒரு விழிப்புணர்வு கவிதை!
மதுவுக்கு விடைகொடு!
நெஞ்சம் தவிக்குது பாவச் செயல்
பஞ்சு பஞ்சாய் பறக்குது
கடலாடியிலே!
பிஞ்சும் பழுக்குது பிறர் அறிய!
அஞ்சாது குடிக்குது மது போதையிலே!
ஐவர் குழுவின் அறங்கெட்ட செயலாலே!
அய்யகோ! தமிழினமே தலை குனிகின்றதே!
தமிழகமே! மதுவிற்பனைக்கு தடை போடு!
பாராளும் பாரதமே விரைந்து விடைதேடு!
குடி குடியைக் கெடுக்கும் என்றே!
நொடிக்கொரு விளம்பரம் ஏனோ?
மக்கள் நலனை மனதில் கொள்வோம்!
மதுவை ஒழித்து மாண்பினை பெறுவோம்!
புதுவை வேலு
குடி குடியைக் கெடுக்கும்..
RépondreSupprimerமது மதியைக் கெடுக்கும்!..
பஞ்சமா பாதகங்களில் மூழ்கித் திளைக்கின்றது நாடு..
பச்சிளம் பாலகனுக்கு மதுவூற்றிக் கொடுத்த - பாதகர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்..
பஞ்சமா பாதகங்கள் செய்யத் தூண்டும்
Supprimerமதியைக் கெடுக்கும் மதுவை அறவே ஒழிக்க வேண்டும்!
அரசே ஆவண செய்!
ஆணவம் செய்யாதே!
அலட்சியம் செய்யாதே!
நட்புடன்,
புதுவை வேலு
கொடுமையிலும் கொடுமை நண்பரே
RépondreSupprimerஇவர்களை தண்டித்தே ஆக வேண்டும்
தம 1
கோலோச்சும் கொடுமையை
Supprimerகொன்றொழிக்க வேண்டும் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
பதிவைப்படித்தபோது வேதனையாக உள்ளது. மதுவின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை உணராமல் தொடர்ந்து அப்பழக்கத்திற்கு அடிமையாகி சுயத்தை இழந்து தவிப்பவர் பட்டியல் நீள்கிறது. இதிலிருந்து இவர்கள் விடுபடும் காலம் விரைவில் வரவேண்டும்.
RépondreSupprimerவெள்ளையனை வெளியேற்றி விட்டோம்!-அவனது
Supprimerவெள்ளிப் பணத்தை வெளியேற்றி விட்டோம்!
தொல்லை தரும் தொற்று நோய் "மது"வை எப்போது? இந்திய
எல்லையை விட்டு விரட்டப் போகிறோம்????
நன்றி முனைவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
இந்த தொற்று நோய் என்று தீருமோ...?
RépondreSupprimerபரவும் நோயை தீ பற்றி எரிப்போம்!
RépondreSupprimerஇனி உயிர்த்தெழாதபடி!
மது என்னும் தொற்று நோய் தொலையட்டும்!
நன்றி வார்த்தைச் சித்தரே!
நட்புடன்,
புதுவை வேலு
புகைத்தல், மது, மாது ஆகிய
RépondreSupprimerமூன்றையும் நெருங்காதவரை
நோய்கள் நெருங்குவதில்லைாம்!
நோய்கள் நெருங்குவதில்லையாம்!
Supprimerபுகைத்தல், மது, மாது ஆகிய
Supprimerமூன்றையும் நெருங்காதவரை
நோய்கள் நெருங்குவதில்லைாம்!
உண்மையே !!!
ஆனால்?
இம்மூன்றையும் நெருங்காதவரை "நேர்மை" நெருங்கி வரும்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்,
RépondreSupprimerஇது என்ன விளையாட்டா?
வேதனையாக இருக்கு,
பகிர்வுக்கு நன்றி.
ஒரு விளையாட்டு வினையாகியது!
RépondreSupprimerவிளையாடியவர்கள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும்!
பெருகி வரும் மது விற்பனை பேரழிவே! சகோதரி!
வருகைக்கு நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
வேதனை வேதனை வேதனை!!! என்ன இது சோதனை! மதுவினால் வந்த வேதனை...மதியைக் கெடுக்கும் இந்தவேதனை என்று தீரும்...ஏனிதற்கெல்லாம் அரசு ஒரு ஆணை பிறப்பிப்பதில்லை...
RépondreSupprimerதமிழகமே! மதுவிற்பனைக்கு தடை போடு!
RépondreSupprimerபாராளும் பாரதமே விரைந்து விடைதேடு!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு