"வாலிபக் கவிஞர் வாலி நினைவாஞ்சலி"
அவதாரப் புருஷரே! ஆன்மீக அரசரே!- நின்புகழை
அரிநாமம் கொண்ட நான் போற்றுகின்றேன்!
மண்ணில் மறைந்தாலும் விண்ணில் பறந்தாலும்
கண்ணில் மறையாது கன்னித் தமிழ்போல் வாழியவே!
நறுந் தமிழின்று நம்மைவிட்டு -வாலி
அருந்தமிழ் அகலின் சுடரொளிப் பட்டு
பருந்தாய் பறந்தே பரந்தாமனைத் தொட்டு
பேருலகம் சென்றாய் கவிப் பெருந்தகையே வாழ்க!
பூமியில் மாண்டாலும் வாலியே! - நின்புகழ்
பாண்டவர் பூமியிலும் ஓங்கி ஒலிக்குதப்பா!
வராளி வைகுண்டம் வான்வழியிலும் தெரியுதப்பா!
மாதவம் செய்கின்றோம் மாதவனே!- வாலியே நீ!
மண்ணில் மீண்டும் "கிருஷ்ண விஜயம்" செய்வாயா?
- மீள் பதிவு (18/07/2014)-
புதுவை வேலு
அருமை ஐயா...
RépondreSupprimerகோடம்பாக்கத்தில் அதிகச் சம்பளம் (ஒரு பாட்டுக்கு ஒன்றரை முதல் இரண்டு லட்சம்) வாங்கிய பாடலாசிரியர் வாலி அவர்கள்தான். இருப்பினும், ஆனால் அங்கே நிலம் வாங்கினால் பிறகு விலை கூடுமே, இங்கே ஒரு வீட்டை வாங்கிப் போட்டால் வாடகை வருமே என்றெல்லாம் துளியும் எண்ணாமல், குடியிருக்கும் ஒரு வீடும், வங்கியிலிருந்து எடுக்கும் பணமும் வாழ்க்கைக்குப் போதும், இசைப்பாடலும், இலக்கியமும் மட்டுமே தமது நோக்கமாக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர் வாலிபக் கவிஞர்.
Supprimerஅவரின் நினைவினை போற்றுவோம் வார்த்தைச் சித்தரே!
நட்புடன்,
புதுவை வேலு
Emadu Anjaliyum....
RépondreSupprimerகலை உலகத்தினர் காவியக் கவிஞர் வாலியிடம் கற்க வேண்டிய ஒரு அம்சம்,
Supprimerஅரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து இயக்கத்தினர்களோடும் பழகிய அவர் பண்புதான். அவர் பாடல்களுக்குள்தான் அரசியல் இருக்குமே தவிர அவருக்குள் ஒரு நாளும் அரசியல் இருந்ததே கிடையாது.
அஞ்சலியில் பங்கேற்று கருத்தினை வழங்கிய நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ் உள்ளவும் வாலியின் நினைவுகளும் நிற்கும். உங்கள் கவிதாஞ்சலியில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.
RépondreSupprimerத.ம.2
ஆண்டவனே! ( வாலி அவர்களை எம் ஜி ஆர் இப்படித்தான் அழைப்பார்) நீங்கள் கட்சியில் சேர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுங்கள் என்று எம்.ஜி.ஆர் சொன்னபோதே சிரித்துக் கொண்டே தவிர்த்தவர் கவிஞர் வாலி அவர்கள் நண்பரே! தமிழ் உள்ளவும் வாலியின் நினைவுகளும் நிற்கும் என்பது முற்றிலும் உண்மையே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அற்புதமான நினைவாஞ்சலி
RépondreSupprimerமண்ணில் மறைந்தாலும் விண்ணில் பறந்தாலும்
Supprimerகண்ணில் மறையாது கன்னித் தமிழ்போல் வாழும்
கவிஞர் வாலியின் புகழ்!
நினைவஞ்சலியில் பங்கேற்று பாராட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான நினைவஞ்சலி!
RépondreSupprimerபூமியில் மாண்டாலும் வாலியின்புகழ்
Supprimerபாண்டவர் பூமியிலும் ஓங்கி ஒலிக்கும்
இனிய வருகை இன்பத்தை இரட்டிப்பாக்கியது!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நினைவஞ்சலிக்கு வாழ்த்துகள்..
RépondreSupprimerமாதவம் செய்கின்றோம் மாதவனே!- வாலியே நீ!
Supprimerமண்ணில் மீண்டும் "கிருஷ்ண விஜயம்" செய்வாயா?
ஆசானே! வாலி அவர்கள் என்றும் அவரது பாடலின் மூலம் நமது நெஞ்சங்களில் கிருஷ்ண கீதமாய் உலா வருவார் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வாக்கினை அளித்து சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான்அஞ்சலி.
RépondreSupprimerபருந்தாய் பறந்தே பரந்தாமனைத் தொட்டு
Supprimerபேருலகம் சென்ற ஸ்ரீரங்கம்வாசி!
வாலியின் புகழ் என்றும் வாழும்!
கவிதாஞ்சலியை சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வாலிபக் கவி வாலிக்கு என்றும் மரணமில்லை !
RépondreSupprimer
Supprimerமாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?
அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பாகுபாடின்றி பாட்டெழுதித் தந்த பாவலர் கவிஞர் வாலி! அவரது பாடல்களுக்கும் என்றும் மரணம் என்பது இல்லை!
உண்மையே பகவான் ஜி அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா.
நினைவஞ்சலிக்கவிதை.. தித்திக்குது.. த.ம 7 பகிர்வுக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிமை நிறைந்த இனிக்கும் கருத்தை தந்தமைக்கு நன்றி கவிஞரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
//பதவி வரும்போது பணிவு வர வேண்டும்...
RépondreSupprimerதுணிவும் வரவேண்டும் தோழா...//
//கண்போனபோக்கிலே கால் போகலாமா
கால்போன போக்கிலே மனம் போகலாமா//
போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் இருக்கும் வரை வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
அவரை மறந்தால் தானே நினைப்பதற்கு.
கவிஞரின் பாடல்களே
Supprimerஅவரது சிறப்புக்கு சிம்மாசனம்
சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
பாடலகளை மழையாய்ப் பொழிந்தவர் வாலி.மூன்று தலைமுறைகளுக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டவர். சிறப்பான நினைவாஞ்சலி
RépondreSupprimerமூன்று தலைமுறை போற்றும்
RépondreSupprimerஉன்னத பாடல்களை உலகம் போற்றத் தந்தவர் கவிஞர் வாலி!
அவரை சிறப்பிக்க வந்தமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு